ஒம் அருள் சித்த குருப்யோ நம:
ஓம் ஸ்ரீ கிருஷ்ண தேவாய பதயே நம:
இந்த பரந்த பூவுலகில் இறை நாட்டம் கொண்ட ஆன்மாக்களை கர்மாவின் தளைகளில் இருந்து விடுதலை செய்து இறைவன் திருவடியை அடைய ஆன்ம ஞானம் பெற அவர்களுடைய ஆன்ம முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும் பொருட்டு, இறைவனே மனித வடிவில் அவதரித்து குருவாக உலவுகிறார்.
அந்த வகையில் ஒவ்வொரு யுகங்களிலும் நூற்றாண்டுகளில் சீரான இடைவெளியில் குருமார்கள் தோன்றி சனாதன தர்மத்தை பின்பற்றும் இந்த பாரத பூமியில் ஆன்மீக உணர்வு செழிக்க அருள் செய்திருக்கிறார்கள் மற்றும் தங்களுடைய வாழ்க்கையையே தியாகம் செய்திருக்கிறார்கள்.
அந்த வகையில் நமது யோக ஆச்சாரியார் குருஜி T.S.கிருஷ்ணன் தகுந்த காலத்தில் சத்குரு ஸ்ரீ பதஞ்ஜலி மஹரிஷி அவர்கள் நமக்காக தோற்றுவித்த கற்பக விருட்சத்தைப் போன்றவர். ஆன்ம சாதகர்களுக்கு அவர்களுடைய ஆன்ம முன்னேற்றத்திற்காக தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதியை செலவழித்து பாடுபட்டவர் ..
யோக ஆச்சாரியாரின் இயற்பெயர்: கிருஷ்ணன்.
அவருடைய தந்தையின் பெயர் : சுப்பிரமணியன்.
தாயாரின் பெயர் : இலட்சுமி அம்மாள்
யோக ஆச்சாரியார் அவர்கள் 1940 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி தமிழ் தேதியில் கார்த்திகை மாதம் ரேவதி நட்சத்திர தினத்தில் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் காவிரி கரையோரம் அமைந்துள்ள கோவிலடி என்ற கிராமத்தில் தன்னுடைய பெற்றோருக்கு எட்டாவது குழந்தையாக பிறந்தார். எட்டாவதாக பிறந்த காரணத்தினாலோ என்னவோ அவருக்கு கிருஷணன் என்ற திருப்பெயர் சூட்டினார்கள்.
தொடரும்
No comments:
Post a Comment