Thursday, August 9, 2012

அரங்கனின் ஆலயங்கள் - 108 திருப்பதிகள் இறுதி


99. திருநைமிசாரணியம்

பெருமாள்                                        :    தேவராஜன்
                                                           நின்றதிருக்கோலம் , கிழக்கே திருமுகமண்டலம் 

தாயார்                                             :  ஸ்ரீஹரிலக்ஷ்மி – புண்டரீகவல்லித் தாயார்  

விமானம்                                         :   ஸ்ரீஹரி விமானம் 

தீர்த்தம்                                           :  திவ்யவிச்ராந்த , நேமி தீர்த்தம் , சக்ர தீர்த்தம் 

ப்ரத்யக்ஷம்                                     :  தேவரிஷிகள், இந்திராதிகள் , சுதருமன் 

மங்களாசாசனம்                             :   திருமங்கையாழ்வார்                           
                          
                                                                          (10  பாசுரங்கள் )
பகவான் ஆரண்ய ரூபியாக (வனவடிவிலே ) உள்ள தலம்.

லக்னோ – டேராடூன் ரயில் பாதையில் பாலமாவ் சந்திப்பிலிருந்து சீதாப்பூர் செல்லும் கிளை ரயில் பாதையில் உள்ள ஒரு ரயில் நிலையம் நைமிசாரண்யா.அங்கிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள தலம். 



100 .சாளக்கிராமம்
( முக்திநாத்  )

பெருமாள்                                  :    ஸ்ரீ மூர்த்தி பெருமாள்
                                                      நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம் 

தாயார்                                        :   ஸ்ரீதேவி நாச்சியார் 

விமானம்                                     :   ககன  விமானம் 

தீர்த்தம்                                       :    சக்ர  தீர்த்தம், கண்டகி நதி  

ப்ரத்யக்ஷம்                                 :  கண்டகி நதி , பிரமரூத்திராதிகள் 

மங்களாசாசனம்                        :    பெரியாழ்வார் , திருமங்கையாழ்வார் ( 12 பாசுரங்கள் )
பெருமாள் தீர்த்த வடிவில் அமைந்திருக்கும் தலம். 

நேபாள நாட்டில் காட்மண்ட் நகருக்கு வடமேற்கே 275 கி.மீ தொலைவில் உள்ள தலம். போக்ராவிலிருந்து விமானத்தில் செல்லும் வசதியுள்ளது 


101 .திருவதரியாச்சிரமம்
( பத்ரிநாத்  )

பெருமாள்                                     :    பத்ரீ நாராயணன்
                                                        வீற்றிருந்த திருக்கோலம் , கிழக்கே திருமுகமண்டலம் 

தாயார்                                          :    அரவிந்தவல்லி நாச்சியார் 

விமானம்                                      :    தப்தகாஞ்சன விமானம் 

தீர்த்தம்                                         :    தப்தகுண்ட தீர்த்தம் 

ப்ரத்யக்ஷம்                                   :   நரன் 

மங்களாசாசனம்                            :  கலியன் , பெரியாழ்வார்                                                 
                                                             ( 22 பாசுரங்கள் )

டெல்லி – டோராடூன் ரயில் பாதையில் ஹரித்துவாரிலிருந்து 325 கி.மீ தூரத்தில் மலைப் பாதையில் உள்ள தலம். பஸ் வசதியுள்ளது





102. திருக்கண்டங்கடிநகர் 

( தேவப்ரயாகை  )

பெருமாள்                            : நீலமேகப் பெருமாள்- புருஷோத்தமன்
                                              நின்ற  திருக்கோலம், கிழக்கே திருமுகமண்டலம் 

தாயார்                                 : புண்டரீகவல்லித் தாயார்  

விமானம்                              : மங்கள விமானம்

தீர்த்தம்                                : மங்கள தீர்த்தம், கங்கை நதி  

ப்ரத்யக்ஷம்                           : பரத்வாஜ மஹரிஷி 

மங்களாசாசனம்                   :  பெரியாழ்வார்  ( 11 பாசுரங்கள் )

ரிஷி கேஸிலிருந்து பத்ரிநாத் செல்லும் மலைப்பாதையில்  70 கி.மீ. தொலைவில் உள்ள தலம்.





103. திருப்பிரிதி 

( ஜோஷிமிட் )
பெருமாள்                            :  பரமபுருஷன்  
                                              புஜங்க சயனம் , கிழக்கே திருமுக மண்டலம் 

தாயார்                                : பரிமளவல்லி நாச்சியார் 

விமானம்                            :  கோவர்த்தன விமானம் 

தீர்த்தம்                               :  இந்த்ர தீர்த்தம் , கோவர்த்தனதீர்த்தம் , மானஸ ஸரஸ்

ப்ரத்யக்ஷம்                         : பார்வதி 

மங்களாசாசனம்                :   திருமங்கையாழ்வார் ( 100 பாசுரங்கள் )

ரிஷிகேஸ்- பத்ரி பாதையில் 245 கி.மீ தூரத்திலுள்ள ஜோஷி மேட் என்ற இடம் தாம் திருப்பிரிதி என்பது இப்போதுள்ள பொதுவான கருத்து. நந்தப்ரயாதைதான் திருப்பிரிதி என்றும் இரண்டுமே அல்ல என்று வேறுவிதமாகவும் கருதப்படுகிறது.





104.  திருத்துவாரகை 

( துவாரகா)

பெருமாள்                          : கல்யாண நாராயணன் –த்வாரகாநாத்  

                                            நின்ற திருக்கோலம் , மேற்கே திருமுக மண்டலம் 

தாயார்                              : கல்யாண நாச்சியார் – ருக்மணி 

 விமானம்                         : ஹேமகூட  விமானம் 

தீர்த்தம்                             :  கோமதீ நதி 

ப்ரத்யக்ஷம்                       :  த்ரௌபதி

மங்களாசாசனம்              :   பெரியாழ்வார் , ஆண்டாள், திருமங்கையாழ்வார் ,

                                               நம்மாழ்வார் (   13 பாசுரங்கள் )

அஹமதாபாத் – ஜாம்நகர் – ஓசா துறைமுகம் இரயில் மார்க்கத்தில் துவாரகா ரயில் நிலையத்திலிருந்தம் பஸ் வசதியுள்ளது .





105. திருவடமதுரை
பெருமாள்                          :  கோவர்த்தநேசன் 
                                            நின்ற திருக்கோலம் , கிழக்கே திருமுக மண்டலம் 

தாயார்                              : ஸத்யபாமை  நாச்சியார் 

 விமானம்                         :  கோவர்த்தன  விமானம் 

தீர்த்தம்                            :  கோவர்த்தன, இந்த்ர தீர்த்தம் , யமுமா நதி 

ப்ரத்யக்ஷம்                      :  இந்த்ராதி தேவர்கள் , வாசுதேவர் , தேவகி

மங்களாசாசனம்             :  கலியன் , பெரியாழ்வார் , நம்மாழ்வார், தொண்டரடிப்பொடி 
                                                 ஆண்டாள் ( 50 பாசுரங்கள்  )


டெல்லி – ஆக்ரா இரயில் மார்க்கத்தில் மதுரா ரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ள மதுராவும் 10 கி.மீ தூரத்தில் உள்ள ப்ருந்தாவனமும் 12 கி.மீ தூரத்தில் கோவர்த்தனமும அடங்கிய ஒரே திவ்யதேசம்.





106. திருவாய்ப்பாடி
( கோகுலம்  )

பெருமாள்                       :  நவமோஹன க்ருஷ்ணன்
                                         நின்ற திருக்கோலம் , கிழக்கே திருமுக மண்டலம்

தாயார்                            :  ருக்மணி பிராட்டி, ஸத்யபாமை நாச்சியார்  

விமானம்                         : ஹேமகூட விமானம் 

தீர்த்தம்                            : யமுனாநதி  

ப்ரத்யக்ஷம்                      :  நந்தகோபர்  

மங்களாசாசனம்             :  பெரியாழ்வார், ஆண்டாள் , திருமங்கையாழ்வார் 
                                               (  22 பாசுரங்கள்  )


டெல்லி – ஆக்ரா பாதையில் மதுரா ரயில் நிலையத்திலிருந்து 8 கி.மீ  தூரத்தில் உள்ளது. பஸ் வசதி உள்ளது. கோகுல் என்று அழைக்கப்படும் தலம். 





107. திருபாற்கடல் 

பெருமாள்                        : க்ஷீராப்திநாதன்  
                                         புஜங்க சயனம் , தெற்கே  திருமுக மண்டலம் 

தாயார்                            : கடல்மகள் நாச்சியார்  

விமானம்                         : அஷ்டாங்க விமானம் 

தீர்த்தம்                           : திருப்பாற்கடல்  தீர்த்தம்  

ப்ரத்யக்ஷம்                     :  ப்ரம்ஹா , ருத்ராதியர்

மங்களாசாசனம்             :  மதுரகவி திருப்பாணன் தவிர ஏனையோர்   (  51 பாசுரங்கள்  )

நிலஉலகில் காண முடியாத திருத்தலம் 





108. திருப்பரமபதம்
பெருமாள்                        :  பரமபதநாதன்
                                         வீற்றிருந்த  திருக்கோலம், தெற்கே  திருமுக மண்டலம் 

தாயார்                             :  பெரிய பிராட்டியார்   

விமானம்                          : அநந்தரங்க  விமானம் 

தீர்த்தம்                             : விரஜாநதி , ஆயிரம் மத புஷ்கரிணி   

ப்ரத்யக்ஷம்                       : அநந்த , கருட , விஷ்வக்ஸேநாதி , நித்ய சூரிகள் 

மங்களாசாசனம்              : பூதத்தாழ்வார் , பொய்கையாழ்வார் , ஆண்டாள் , மதுரகவி , 

                                                குலசேகரர் (  36 பாசுரங்கள்   )


இது இவ்வுலகில் இல்லை, முக்தர்கள் பார்க்கக்கூடியது.




  தொடரும் 

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment