அதுதான் ஸ்வார்த்தம் சத் சங்கம் (யோகா அமைப்பு )
SWARTHAM SATHSANGAM YOGA EDUCATIONAL TRUST |
சத்சங்கம் என்று சொன்னால் "சத்" என்றால் உண்மை. சங்கம் என்றால் கூட்டு அல்லது கழகம் என்று பொருள். உண்மையை நாடுவோர் சங்கம்.
எத்தனையோ சங்கங்கள் எல்லாம் தோற்றுவிக்கப்படுகின்றன. பதிவும் செய்யப்படுகின்றன.
ஜாதி சங்கங்களில் இருந்து பல்வேறு சங்கங்கள் தோன்றியிருக்கின்றன. நாமும் சத்சங்கத்திற்கு உண்மை நாடுவோர் சங்கம் என்று கூட பெயர் வைக்கலாம். ஆனால் அதெல்லாம் தேவையில்லை.
சத்சங்கம் என்று சொன்னால் எதையுமே எதிர்பாராதது. எல்லோருக்கும் எதையாவது கொடுக்க வேண்டும் என்று எண்ணம் உடையவர்கள்.
சத்சங்கவாதிகள் என்று ஆரம்பத்தில் இருக்கிறவர்கள் விபரம் தெரியாமல் இருந்திருக்கலாம். சங்கம் கூடக்கூட, நாட நாட அதில் இருக்கின்ற ஒவ்வொருவருடைய ஆன்மாவும் கொஞ்சம் கொஞ்சமாக மாறுதல் பெற்று இறைவன் அருள் மேலீட்டால் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு சத்சங்க விஷயங்களைப் பற்றியே அவர்கள் பேசி அதிலேயே லயித்து அதில் வருகின்றவர்களோடும் அவர்கள் துணைபுரிந்து வருகின்றவர்களையும் மேன்மைபடுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, அது சம்பந்தமாக நிறைய ஆட்கள் சேரச்சேர அதுதான் சத்சங்கம்.
அந்தச் சங்கம் கொஞ்சம் கொஞ்சமாக மேன்மை(develop) அடைந்து விடும். அந்த ஒருமைப்பாடு, அந்த சங்கத்தின் கூட்டமைப்பு என்பது மற்ற சங்கங்கள்(club) மாதிரி கிடையாது.அந்த சங்கங்களில் எல்லாம் சந்தா கட்டவில்லை என்றால் சங்கத்தை விட்டு வெளியேற்றி விடுவார்கள்.
சத்சங்கத்திற்கு சந்தா என்று எதுவும் கிடையாது. இதற்கு நல்ல மனம் வேண்டும். இவையெல்லாம் எப்படி இந்த சத்சங்கத்திற்கு கிடைக்கிறது என்றால் அவர்களுக்கு அந்த உணர்வு மேலிட்டு, சத்சங்கத்தை நாடி அவரவர்கள் கூட்டத்தில் அவரவர்கள் போய் சேருகிறார்கள்.
அதாவது இனம் இனத்தை நாடும் என்பது போல, சிறிய வயதுக் குழந்தைகள் பெரியவர்களோடு விளையாடுவது மிகக் குறைவு. தாத்தா பாட்டிகளோடு வேண்டுமானால் கொஞ்சம் விளையாடும்.
அந்த வயதிற்கு ஒப்ப உள்ள குழந்தைகளுடன் தான் விளையாடும். பெண் குழந்தைகள் பெண் குழந்தைகளோடும், ஆண் குழந்தைகள் ஆண் குழந்தைகளோடும் விளையாடும்.
அதைப்போலவே வயோதிகர்கள் அந்த வயோதிக வயதில் இருப்பவர்களோடு பேசிக்கொண்டிருப்பார்கள்.
இளம் வயதினர் இளம் வயதினர்களோடு பேசிக்கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு அந்த இனம் அல்லது வயது அல்லது அவர்களுடைய அறிவுக்கேற்ற அல்லது அவர்களுடைய தகுதிக்கு ஏற்றவர்களோடு சேர்வார்கள்.
ஆகவே இனம் இனத்தோடு என்பது போல, இந்த இனம் சத்சங்க இனமானது, அவர்கள் ஒருபோதும் வேறு சங்கத்தில் இணைய மாட்டார்கள்.
சத்சங்கம் எங்கே உள்ளது என்று தான் தேடுவார்கள்.
சத்சங்கம் எங்கே உள்ளது என்று தான் தேடுவார்கள்.
மேலும் எங்கள் சங்கம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, உரிமை பாராட்டக் கூடிய அளவிற்கு அவர்களுக்கு, உதாரணமாக நாங்கள் ஒரு எட்டு பத்து பேர் இருந்தோம் ஒரு காலத்தில்.ரொம்ப மகிழ்வோடு இருந்தோம் என்பார்கள்..
தொடரும்
No comments:
Post a Comment