Thursday, April 3, 2014

ஞான சபை - நம்மை ஆளும் நவ கிரஹங்கள்


ஞான சபை வகுப்புகள்

    நவ கிரஹங்களின் ஆட்சி



இன்றைய வகுப்பிற்கு நாம் வருவோம்.


நாமெல்லாம் நினைத்துக்கொண்டிருக்கின்ற உலக விஷயங்கள் நிறைய இருக்கின்றன . நாம் நிறைய படித்திருக்கிறோம் . ஆனால் அவற்றை தொகுத்து பார்ப்பதில்லை. அவ்வளவுதான் விசேஷம்.



இந்த பிரபஞ்சம் என்ற ஒன்று கோடிக்கணக்கான கிரஹங்களை கொண்டிருக்கின்றது. அவை ஒன்றிரண்டல்ல.
                                           
சித்தர்கள், ஆன்மீகம்


 இந்த பூமி என்று சொன்னால் இந்த பூமிக்குரிய அரசன் ஒருவன் இருக்கின்றான். அவன் தான் சூரியன்.  பூமி உட்பட கோள்கள் அடங்கியுள்ள சூரியக்குடும்பத்திற்கு அவன்தான் தலைவன்.


இந்த பூமியில் உள்ள உயிர்களை கட்டுப்படுத்துவதும். பூமிக்கு தேவையான மற்றும் தேவையற்றவைகளை அளிப்பதையும் என்ன அளிக்க வேண்டும் என்று முடிவு செய்வதை கூட இந்த சூரியக்குடும்பத்திற்குள் உள்ளடங்கிய கோள்கள் மட்டும் தான் அதைச்செய்ய முடியும்.செய்துகொண்டிருக்கின்றன.



இதைப்போன்ற பல்வேறு சூரியக்குடும்பங்கள் கோடானுகோடி சூரியக்குடும்பங்கள் இருக்கின்றன. மில்க்கிவேஸ் என்ற சொல்லக்கூடியவற்றிலே வெளிச்சம் அதிகம் வாய்ந்த கோள்கள் உள்ளடங்கிய சூரியக்குடும்பங்கள் பல உள்ளன. அவற்றை எல்லாம் நம்மால் எண்ணிப்பார்க்க முடியாது.


    இப்படியாக பல தலைமைக்கோள்கள் உபகோள்களை உள்ளடங்கியவைகள் நாம் வசிக்கும் பூமிக்கு அந்த கோள்களின்தலைவர்களால் ஏதாவது ஆட்சி செய்ய முடியுமா என்று கேட்டால் எப்போதாவது அரிதாகத்தான் இந்த சூரியக்குடும்பத்தினை விட்டு வெளியே இருப்பவர்களால் செய்ய முடியுமே தவிர அந்தக்கோள்களின் தலைவர்களால் உப கோள்களிற்கு மட்டுமான பணியினை மட்டுமே மேற்கொள்ள முடியும்


      இப்போது நம்முடைய கோள் சனியை பற்றி, வியாழனைபற்றி மற்றும் செவ்வாயினை பற்றி ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் செவ்வாயினை பற்றி அதிக அளவிலே நமது விஞ்ஞானிகள்  ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றனர்

 இந்த கோள்கள் ஏன் இவ்வளவு தூர இடைவெளியில் உள்ளன என்பதை எல்லாம் காரணத்தோடுதான் இறைவன் படைத்திருக்கிறான். இந்த பூமியில் உள்ள அத்தனை ஜீவ  ராசிகளையும் சூரியக்குடும்பத்திற்குள் உள்ள கோள்கள் தான் கட்டுப்படுத்த முடியும். கட்டுப்படுத்துகின்றன.


பிறகோள்களில் இருந்து மனிதர்கள் வந்தார்கள் என்று சொல்வார்கள்

 இந்த பூமியில் உள்ள மனிதர்களுடைய தோற்றம்,வளர்ச்சி,பரிமாணம் ,அறிவு அவர்களுடைய பாவ புண்ணியங்கள். அவர்களுடைய உறவுமுறைகள் அதேபோல பூமியில் உள்ள மற்ற உயிரினங்களின் வடிவங்கள் மற்றும் அவைகளின் இயல்புகள் குணங்கள் ,ஆகாரங்கள் அவைகளுக்கிடையே உள்ள இணைப்பு முறைகள். அவைகளின் உறவுமுறைகள் அனைத்தும் இந்த பூமிக்குடையது மட்டுமே. இவைகளைப்போல மற்ற கிரங்களிலும் இருக்கும் என்பதை நாம் நம்புவதற்கில்லை.



  முன்பொரு காலத்தில் வானத்தில் இருந்து பறக்கும் தட்டுக்கள் இறங்கி வந்தன. அவற்றில் மனிதர்களைப்ன்றவர்கள் இறங்கிவந்தார்கள்ஒரு சக்தி வந்தது ,பிறகு சென்று விட்டார்கள் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மனிதனைப்போன்று இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த பூமி முழுவதும் தண்ணீராக இருக்கும் என்றால் மனிதர்கள் அங்கே வசிக்க முடியுமா?  

  தண்ணீரில் உணவினை கொண்டு அதில் சுவாசித்து வாழக்கூடிய உயிரினங்கள் மட்டுமே இருக்க முடியும். இதை ஒரு உதாரணத்திற்காக சொல்கிறேன்.


          ஆகவே பூமியில் தண்ணீரிலும் இருக்கலாம். மலையிலும் இருக்கலாம். பரந்த மற்றும் வறண்ட சமவெளிப்பகுதியிலும் இருக்கலாம்

 வித்தியாசமான இடங்கள் பரவிய வித்தியாசமான சூழ்நிலைகள் , சீதோக்ஷண நிலைகள் , வித்தியாசமான மனிதர்கள் என்று கிரகங்களில் இந்த பூமி மட்டுமே சிறப்பை எய்திருக்கிறது.



நமக்கு தெரிந்திருக்கின்ற வரை பாரத பூமி என்று சொல்லக்கூடிய இந்த பூமியில். பாரத பூமி என்று சொன்னால் தென்னாடு மட்டுமல்ல அந்த பரத கண்டம் என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய கண்டத்தில் அத்தனை            ஞானிகள் , யோகிகள் என்று மிகச்சிறப்புள்ள அம்சங்கள் இந்த பரத கண்டத்தை கொண்டுள்ள பூமிக்கு இருக்கிறது


பூமியினை தவிர மற்ற கிரகங்களில் இவர்கள்  இருப்பார்களா என்றால் இல்லை என்று நம்மால் உறுதியாக சொல்லிவிட முடியாது. ஏனென்றால் அந்த கிரகத்தில் ஒருவேளை காற்றே இல்லை என்று கூறினால் காற்றை சுவாசிக்காமல் வாழக்கூடிய தோற்றத்திலே அமைப்பிலே  அவர்கள் இருக்கலாம். ஒருவேளை நம் பார்வைக்கு அங்கே விக்ஷமாக காணப்பட்டால் அவர்கள் விஷத்தை உண்டு வாழக்கூடிய சூழ்நிலையில் இருக்கலாம்.


ஆனால் நம் மனம் என்ன நினைத்துக்கொண்டிக்கிறது என்றால் அங்கே நம்மைப்போன்ற மனிதர்கள் இருப்பார்களா அந்த கிரகங்களில் நாம் வாழ முடியுமா கேட்டுக்கொண்டிருக்கிறோம் மற்றும்  ஆராய்ச்சி கொண்டிருக்கிறோம் .

 ஆக இதையெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்று சொன்னால் இறைவன் இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தை படைத்தவன். எத்தனையோ இதுபோன்ற சூரியக்குடும்பங்களிற்கு அதிபதியானவன்

 ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு தலைமைக்கோள்களிலும் அதன் உபகோள்களிலும் வாழுகின்ற அந்த சம்பந்தப்பட்ட 
ஜீவர்களுக்கெல்லாம் அந்த கோள்களிலும் இருப்பதற்குரிய சட்டதிட்டங்களை இயற்றியிருக்கின்றான்.



இந்த சட்டதிட்டங்களின்படி தான் தலைமைக்கோளும் அதன் கோள்களில் உள்ள உயிர்களும் இயங்குகின்றன. ஆக மனிதர்களுக்கென்று சில சட்டதிட்டங்கள் ஏன் அவர்களுக்கெல்லாம் இந்த சட்டதிட்டங்களை இறைவன் வைத்தான்.


இவ்வளவு பரந்த அளவினை உடைய பூமியிலே மனிதர்களுடைய பாவ புண்ணியம் மற்றும் லாப நஷ்டம்  போன்றவை மனிதர்களுடைய எண்ணிக்கை அதிகரிக்க  அதிகரிக்க கட்டுப்பாடுகளும்தேவையாக இருக்கிறது.

 இறைவனைப்பொருத்தவரை இந்தகோள்களின் தினசரியினை மட்டுமே அவன் கணக்குபார்த்துக்கொண்டிருக்க முடியாது

 இது போன்ற கோடான கோடி கிரகங்களுக்கு அவன் அரசன். அத்தனை கோள்களின் மீதும் ஆதிக்கம்பெற்றவன். அத்தனையினையும் அவன் காப்பாற்றுபவன். ஆக இந்த பூமியின் இயக்கம் மட்டுமே அவனுக்கு பெரிய  விஷயமில்லை.



ஒரு நாட்டிலே அரசன் என்பவன் தலைமைப்பொறுப்பிலே இருப்பான்அந்த நாட்டின் பல பகுதிகளுக்கும் பல அதிகாரிகளை நியமித்திருப்பான். அவர்கள் அளிக்கும் தகவல்களை வைத்து அவன் ஆண்டு கொண்டிருப்பான்

 அதைப் போல இந்தப் பூமிக்கு என்று இறைவன் சிலவற்றை நியமித்திருக்கிறான்.


     ஒரு அரசன் அவனுக்கு கீழே பல  ஊர்களில் பல மந்திரிகள், படைத்தளபதிகள், ஓப்புதல் பெற்ற சிற்றரசர்கள் என்று செயல்பட்டுக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு மக்களை தண்டிக்கவும் மற்றும் பாதுகாக்கவும் அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கும்.அவர்களைப்போலத்தான் இந்த பூமிக்கு இறைவனால் நியமிக்கப்பட்டிருப்பவர்கள் நவக்கிரஹங்கள்

 இந்த நவகிரஹங்களை வைத்துதான் இறைவன் இந்த பூமியினை ஆண்டுகொண்டிருக்கிறான். ஒரு அரசனுக்கு அதிகாரிகள் மூலம் தகவல்கள் கிடைப்பதைப்போலத்தான் இறைவனுக்கும் நவகிரகங்கள் மூலம் தகவல்கள் கிடைக்கும்.



இங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற அனைத்தையும் மட்டுப்படுத்தக்கூடிய யார் ,யாருக்கு எதை செய்ய வேண்டும் என்ற தர்மரீதியில் ஒரு வரையறுக்கப்பட்ட அதிகாரத்தை கொண்டிருப்பவர்கள் நவகிரகங்கள்

 நவகிரகங்களுக்கு என்று பெரிய அதிகாரம் கிடையது அவர்களை கட்டுப்படுத்துவதற்கு என்று பெரிய  அதிகாரிகள் உள்ளனர். அவர்களில் கடைசியாக அதிக அதிகாரம் பெற்றவர் தான் இறைவன்.


இந்த பிரபஞ்சத்தில் வேறு கிரகங்களில் இருந்து வேறு ஏதேனும் உயிர்கள் இந்த பூமியில் வரவேண்டும் என்றாலும் கூட இந்த நவகிரங்களின் உத்தரவு இல்லாமல். அவர்களுடைய அனுமதி இல்லாமல் அவர்களுடைய காலத்திலே அல்லாமல் இந்த பூமிக்குள் அவர்களால் வரமுடியாது. இதுதான் நவகிரகங்களின் ஆட்சி.



இந்த பூமியிலே இறைவனே ராமனாக, கிருஷ்ணணாக விதுரராக, பலராமனாக இன்னும் பல ருபங்களில் அவதரித்தாலும் இந்த நவகிரகங்களின் சக்திக்கு உட்பட்டுத்தான் அவர்கள் இங்கே செயல்படுவார்கள். செயல்பட முடியும்

 இதுதான் நியதி


இதுதான் அவர்களுடைய தர்மம்


எதற்காகவும்அவர்கள் அந்த தர்மத்தை மீற மாட்டார்கள்.

தொடரும்




No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment