Wednesday, February 5, 2014

கர்ப்பப்பை நோய்களை குணமாக்கும் சலபாசனம்



 சலபாசனம்








 

மனம்  
                   முதுகெலும்பு  , அடிவயிறு,கால்கள் ,தொடைகள் 


மூச்சின் கவனம்
                                        கால்களை  உயர்த்தும்போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, கால்களை இறக்கும்போது வெளிமூச்சு 


உடல் ரீதியான பலன்கள்     
                            
  •  உடல் எடை குறையும்
     
  • அட்ரினல் சுரப்பி நன்கு வேலை செய்யும். புஜங்காசனத்தை இது பூர்த்தி செய்கிறது 
     
  • இடுப்பு,முதுகின் கீழ்ப்பகுதி, இடுப்பெலும்புக் கூடு , வயிறு, தொடை ,சிறுநீரகம், கால்கள் ஆகியவை ஊக்கமடைகின்றன.
     
  • கணையம் நன்கு செயல்படுகின்றது.
     
  • கல்லீரல், பித்தப்பை, சிறுநீரகங்களில் கல் அடைப்பு ஏற்படாது .

 
 குணமாகும் நோய்கள் 
  •   மலச்சிக்கல், வாயுத்தொல்லை, நீரிழிவு ,இடுப்பு வாயுப் பிடிப்பு ஆகியவை குணமாகும்.

  •    கர்ப்பப்பை பிரச்னை குணமாகும்.

  •    விரை வீக்கம் நீங்கும். சுவாச பிரச்சனைகள் நீங்கும்.
  


ஆன்மீக பலன்கள்       
             
உடல் லேசாக சுறுசுறுப்பானதாக, நன்கு செயல்படக்கூடியதாக ஆகிறது. புலன்களை கட்டுப் படுத்த இது உதவுகிறது

 
 

எச்சரிக்கை 



 சிறு நீரகக் கோளாறினால் அவதிப் படுவோர், குடல் வாயு, அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதைச் செய்தல் கூடாது 



தொடரும் 
குருஜி .டி.எஸ்.கிருஷ்ணன்



No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment