Saturday, September 24, 2011

அரங்கனின் ஆலயங்கள் - 108 (108 திருப்பதிகள் )

ஓம்

அரங்கனின் ஆலயங்கள்  - 108   

(ஸ்ரீரங்கம் , திரு உறையூர்)

மீண்டும் ஒரு பதிவில் ஆன்மீகஉறவுகளை சந்திப்பதில் அகம் மகிழ்வடைகிறது.

மஹரிஷி ஸ்ரீ பதஞ்சலி யோக கேந்திரத்தில் தொடர் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வந்தபோதிலும் யோகம் தொடர்பான ஏராளமான விஷயங்கள்  குருநாதரால் பயிற்றுவிக்கப் பட்ட போதும் அதிகமான வேலைப்பளு காரணமான தொடர் பதிவுகளை பதிவிட முடியவில்லை. 

இருந்த போதிலும் குருநாதரின் ஆணைப்படி வலைத்தளத்தில் ஆன்மீக நெஞ்சங்களுக்கு  வரவிருக்கும் ஆலயத் தொடரை அர்ப்பணிக்கிறோம் .  
இதன் தொடர்ச்சியாக ஒலி நாடாவாக பதிவு செய்யப்பட்டுள்ள வகுப்புகள் அனைத்தும் இறைவனின் ஆசிப்படி  இனி எழுத்துக்களாக உருமாற்றம் செய்யப்பட்டு வலைத்தளத்தில் வலம் வரும். 

அந்த  வகையிலே பக்தர்களின் மனதில் பரந்தாமனாக  நீங்கா இடம் பெற்றிருக்கும் பூலோக  வைகுண்டங்களாக விளங்கும்      பரம்பொருள் மகாவிஷ்ணுவின் ஆலயங்கள்  108 யும் அவைகள் அமைந்திருக்கும் உட்பட  அனைத்து விவரங்களையும் இந்த தொடரிலே வழங்க இருக்கிறோம்.பல்வேறு மூலாதரங்களில் இருந்து திரட்டப்பட்ட இந்த தகவல்கள உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எண்ணுகிறோம்.
.  
                                                                                     1.      ஸ்ரீரங்கம்

பெருமாள்                  : ஸ்ரீ ரங்கநாதன் அழகிய மணவாளன்
                             புஜங்கசயனம் தெற்கே திருமுகமண்டலம் 

தாயார்                    : ஸ்ரீ ரங்கநாயகி 

விமானம்                   : ப்ரணவாக்ருதி  விமானம்

தீர்த்தம்                   : காவேரி , சந்திர புஷ்கரிணி 

ப்ரத்யகக்ஷம்               : தர்வர்மா , காவேரி, விபீஷணன் , சந்திரன் 


மங்களாசாசனம்         : 
                           பொய்கையாழ்வார் , பூதத்தாழ்வார், பேயாழ்வார்,                                                                    திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார் 
[ 247 பாசுரங்கள் ]


தானாகவே உண்டான ஸ்தலம் [ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரம் ] 
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும்இடம். பட்டர், வடக்குத்திருவீதிப்பிள்ளை, பிள்ளை உலகாசிரியர் பெரிய நம்பி இவர்களின் அவதாரஸ்தலம் , 

ஸ்வாமி தேசிகன் ரங்கநாதர் திருவடிகளைப் பற்றி பாதுகா சகஸ்ரம் பாடிய இடம்.

கம்ப ராமாயணம் அரங்கேற்றிய இடம்.

திருமங்கையாழ்வார் மதில கட்டிகைங்கர்யம் செய்த தலம். 

தொண்டரடிப்பொடி ஆழ்வார் நந்தவனம் சமைத்து திருவரங்கனை அழகு செய்த தலம். 

நாலாயிர திவ்வியப்பிரபந்தத்தை ராக தாளத்தோடு இசைக்கும் அரையர் சேவை நடைபெறும் தலம்.

திருச்சி ஜங்ஷனிலிருந்து 10 கி.மீ தூரம் . பேருந்து வசதி உள்ளது ஸ்ரீ ரங்கம் இரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ளது 
2. திருஉறையூர் [கோழி , நிசுளாபுரி]


பெருமாள்                                  : அழகிய மணவாளன் 

                                     நின்ற திருக்கோலம் வடக்கே திருமுக மண்டலம் 
 
தாயார்                                         : வாஸாலக்ஷ்மி , உறையூர் வல்லி

விமானம்                                   : கல்யாண விமானம் 

தீர்த்தம்                                        : கல்யாண தீரத்தம் குடமுருட்டி நதி 

ப்ரத்யக்ஷம்                                 : ரவி தர்ம ராஜன் , கோடி தேவர்கள்

மங்களாசாசனம்               : திருமங்கையாழ்வார், குலசேகர் [ 2 பாசுரங்கள் ]


திருப்பாணாழ்வார் அவதாரஸ்தலம்


திருச்சி பேருந்து நிலையத்திலிருந்து உறையூர்  மெயின்கார்டு மார்க்கத்தில் மூன்று கி.மீ. தூரத்தில் நாச்சியார் கோவில் நிறுத்தத்தில் இறங்க வேண்டும். 


(தரிசனம் தொடரும் )No comments:

Post a Comment

TRANSLATE