Friday, November 26, 2010

உன்னால் தான் எனக்கு உறுதி

 நலம் வாழ உடலை ஆராதிப்போம்- 6

இந்த மனித உடல் அதன் அமைப்பு பொதுவாக அனைத்து உயிர்களின் உடல் அமைப்புடன் ஒப்பிடுகையில் மனித உடலின் பல்வேறு சிறப்பு அம்சங்கள் செயல்பாடுகளின் தன்மைக்கு ஏற்றவாறு அவைகள் அமையப் பெற்றிருப்பினும் இன்னும் இந்த உடலின் முழு படைப்பின் ரகசியங்கள் கண்டுபிடிக்க முடியாத இறைவனின் அதிசய மர்ம முடிச்சுகளினை இதுகாறும் மனித உடல் பற்றிய ஆராய்ச்சிகள் கண்டுபிடிக்க முடியாத விசேஷ படைப்பாக உள்ளது
( SUPER BUILT IN CONSTRUCTION )

பழங்கால ரிஷிகள் , முனிவர்கள் , சித்தர்கள் போன்றோர் இந்த உடல் ரகசியங்களை நுணுக்கமாக ஆராய்ந்து அற்புதமான மருந்துகள் , உடற் பயிற்சிகள், மனப் பயிற்சிகள் மற்றும் மனித உலகத்தொடர்புகள்  அத்தனையும் இன்றைய காலம் போல் எந்த வித ஆராய்ச்சி  எந்திரங்கள், உபகரணங்கள்
இல்லாத நிலையில் மெய் ஞானத்தால் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். 


அந்த வகையில் மருத்துவம் தொடர்பான விஷயங்களில் அதிகம் தொடர்பு கொள்ளாமல் உடலின் , மனத்தின் யோக ஆசன என்ற இரு விஷயங்களையும் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் அட்டாங்க யோக நெறிகளுக்கு உட்பட்டு இந்தக் கேந்திரம் அறிந்த அளவு விரிவாக பிறருக்கு அறிவிக்கும் ,தெரிவுபடுத்தும் கடமையில் பணியாற்றி வருகின்றது. 


அதன் தொடர்பாக உடலாசனங்கள் என்ற அடிப்படையில் வளைத்தல், நிமிர்த்தல் , மடக்கல், நீட்டல், குனிதல் , நிமிர்தல், நடத்தல், கிடத்தல், அமர்தல் என்ற இவ்வொன்பதின் செயல்பாடுகளை  கொண்டதாகும்.


லாவகமாக ,மெதுவாக, மூச்சு தொடர்புடைய செயல்களின் சம்பந்தப் பட்ட உறுப்புகளின்  மேல் நினைவுப் பதிப்பாக ஆற்றும் பயிற்சி என்று ஆசனங்களில் தொடர்புப் படுத்தபடுகிறது.


இந்தச் செயல்கள் யாவும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ரிஷிகளால் மேற்கொள்ள்ளப்பட்டு அவற்றின் நுண்ணிய செயல்பாடுகளின் விளக்கங்களை ஆசன வரிசைகளில் அவற்றிற்கு பெயர் சூட்டி அவைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் அவற்றினால் ஏற்படும் பயன்கள் மற்றும் மருந்தில்லா உடல், நோய் சிகிச்சை என முறைப்படுத்தி வைத்தார்கள்.


எனவே தான்  மனித இயந்திரத்தின் பாகங்களான சதை, தோல், தசை, இதயம் , மூளை , நரம்புகள் , இரத்தக் குழாய்கள் , இரத்தம், எலும்புகள் மற்றும் அதிசயமான பல்வேறு சுரப்பிகள் என இவற்றின் இயக்கங்களுக்கு காரணமான காண முடியாத உயிர்( காற்று , பல்வேறு வாயுக்கள்) இவைகளால் பார்த்தல் , கேட்டல், பேசுதல், ருசித்தல், நுகர்தல் போன்ற உணர்வு கலந்த வாழ்வு இயக்கம் நடைபெறுகின்றது.


மேற்கண்டவைகளில்  ஆசனங்கள் தொடர்பான உடலின் நிலைத் தன்மை, பலம், உருவம், இரத்த உற்பத்தி கேந்திரம் என உடலின் முக்கிய உறுப்பாக எலும்புகள் பெரும்பங்கு  வகிக்கின்றன.  இவை இயல்பாக உடல் இயக்கத்திற்கு ஏற்றவாறு பல்வேறு அசைவுகளை அவற்றின் இயல்புக்கு ஏற்றவாறு அவற்றிற்கு துணை செய்யும் பொருட்டு , அதே சமயம் அவற்றிற்கு தீங்கிழைக்காதபடி மேற்கொள்ளும் ஆசனங்கள் பெரும்பாலும் எலும்புகள் தொடர்பானவையாகவே இருப்பதால் இன்று எலும்புகளை பற்றி இதற்கு முன்னும் விளக்கி  இனியும்  சில முக்கிய விவரங்களை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.


இரத்த உற்பத்திக்கு ஆதாரமான எலும்புகள்


  1. CRANIUM
  2. COLLARBONE
  3. SHOULDER BONE
  4. TOP END OF EACH HUMERUS  ( கை மேல் இணைப்பு எலும்பு )
  5. BREAST BONE
  6. RIBS
  7.  VERTEBRA - ( தண்டுவட எலும்புகள், பேக்போன் )
  8. TOP END OF EACH FEMER 

எலும்புத்  துண்டுகள் 

ஒரு குழந்தையின் எலும்புகளில் அதிகமாக வளையக் கூடிய இணக்கமுள்ள சவ்வுகள் உள்ளன. அவன் அல்லது அவள் வளரும்போது சவ்வுகளுக்கு பதிலாக கடினமான எலும்புத் திசுக்கள் மாறுகின்றன. அவை ஒரு x - ray  யில் அடர்த்தியாக தோற்றமளிக்கிறது.

ஒரு வயது குழந்தையின் கை எலும்புத் தோற்றம்  
ஒவ்வொரு  விரல் எலும்புகளுக்கு இடையே இணக்கமுள்ள சவ்வுகளில் அகலமான இடங்கள் உள்ளன.

3  வயது குழந்தையின் கை எலும்புத் தோற்றம் 
மணிக்கட்டு எலும்புகள் உருவாக துவங்குகின்றன. மற்றும் உள்ளங்கை எலும்புகள் கெட்டித்தன்மை அடைகின்றன. 

13 வயது  ஆண் அல்லது பெண்ணின் கை எலும்புத் தோற்றம்
பெரும்பாலும் எலும்புகள் முழுவடிவம் பெறுகின்றன. எனினும் சில எலும்பு நுனிகள் இன்னும் இணக்கமுள்ள சவ்வினால் பிரிக்கப் பட்டிருக்கின்றன.

20 வயது ஆண் அல்லது பெண்ணின் கை எலும்புத் தோற்றம் 


எலும்புகள் முழுவதுமாக வளர்ந்து விடுகின்றன. இணக்கமுள்ள சவ்வு எலும்புகளின் நுனிகளை மட்டும் மூடுகின்றன.

எலும்புகளின் உட்புறம்

படத்தை பெரிதாக்கி பார்க்கவும்


எலும்புகளில் நீளவாக்கில் அமைந்துள்ளன. மற்றும் சில இடங்கள் நல்லி எலும்பினால் வேயப்பட்டு உள்ளன. அவை உறுதியானது. ஆனால் எடை குறைவானது

நல்லி எலும்பு

எலும்புகளின் உள்ளே அந்த இடங்களை நிரப்பும் ஜெல்லி போன்ற பொருள்.  அதன் மஞ்சள் நிற உள் எலும்பு பகுதி கொழுப்பை தேக்கி வைக்கிறது.  வெள்ளை நிற உட் பகுதி இரத்த செல்களை உருவாக்குகிறது.

மேற்புற எலும்பு 

எலும்பு திசுக்களின் சமமான குழாய்களால் தயாரிக்கப் பட்டது. இவை எடை மிகுந்தது . வலுவானது மற்றும் எலும்பின் வெளிப்புற பகுதியினை உருவாக்குகிறது. 

பெரிஸ்டோனியம்

 எலும்பினைச் சுற்றி உள்ள திசுவின் வெளிப்புற பகுதி

இரத்தக் குழாய்கள்

உணவு மற்றும் ஆக்ஸிஜன்  உடன் ஓஸ் டியோ சைட்டிஸ்  (எலும்பு செல்கள் ) ஐ செலுத்துகிறது.

                                                    எலும்பின் மூட்டு வகைகள் .

                                                            பந்து கிண்ண மூட்டு

எந்த திசையிலும் இயங்குவதை அனுமதிக்கிறது.  தோள்பட்டை மற்றும் இடுப்பில் காணப்படுகிறது.
  

                                                              நீள்வட்ட மூட்டுபக்கவாட்டு அசைவு பின்புற மற்றும் முன்புற அசைவினை அனுமதிக்கிறது. மற்றும் விரலின் மூட்டில் காணப்படுகிறது.

                                                                    கீல் மூட்டு


ஒரே ஒருவாக்கில் அசைவினை அனுமதிக்கறது. ஒரு கதவின் கீழ்ப்புறம் போல மற்றும் அவை கால் மூட்டு மற்றும் கை மூட்டுக்களில் காணப் படுகிறது


                                                                 சுழலும் மூட்டு


ஒரு எலும்பின் நுனியினை வைத்து மற்றறொரு எலும்பின் நுனி அசைவதை அனுமதிக்கறது  மற்றும் முதுகெலும்பிலே மேலே இரண்டு பகுதிகள் உள்ளது. அவை தலையினை திரும்புவதற்கு அனுமதிக்கிறது.

                                                       சம மட்டமான மூட்டு


சிறு சாய்வான அசைவுகளை அனுமதிக்கிறது. மணிக்கட்டு மற்றும் பாத மூட்டு எலும்புகளில் காணப் படுகிறது.                                                                    சேண மூட்டு

அனைத்து திசைகளிலும் சுழற்சியினை வழங்குகிறது. பெரு விரலின் அடியில் காணப் படுகிறது. அவை மற்ற விரல்களை தொடுவதற்கு அனுமதிக்கிறது.


பதிவுக்கோர் காயத்ரி மந்திரம்
அருட்திரு ஆசான் அகஸ்தியரை போற்றும் காயத்ரி மந்திரம்

                                                            
ஓம் கும்ப சம்பவாய வித்மஹே
பொதிகை சஞ்சராய தீமஹி
தந்நோ அகத்திய  பிரசோதயாத்

ஓம் கமண்டல ஹஸ்தாய வித்மஹே
காவேரி தீர்த்தாய தீமஹி
தந்நோ அகத்திய  பிரசோதயாத்


(தொடரும் )


No comments:

Post a Comment

TRANSLATE