Monday, September 20, 2010

நலம் வாழ உடலை ஆராதிப்போம் - பகுதி 5

 எலும்புகளின் அசைவுத்தன்மை  


தொடரும் நமது கட்டுரையில் ஓரளவு எலும்புகளை பற்றிய பொதுத் தகவல்களை அல்லது அமைப்புகளை மட்டுமே கூறியிருக்கிறோம். எலும்புகளுடைய அமைப்பிற்கு ஏற்றவாறு அந்த அசைவுகளின் இயல்புகளையும்  அந்த இயல்புகளில் இருந்தும் மாற்றப் படக்கூடாத  அந்த அசைவுகளையும் பற்றிக் கூறுவதே இந்தக் கட்டுரையின்  முக்கியச் செய்திகளாக இருக்கும்.  மற்றும் அந்த செய்திகளை அடிப்படையாகக் கொண்டு ஆசனங்களை வரிசைப் படுத்தி முறைப் படுத்தி கூடாததை நீக்கி  அவசியமானவற்றை மட்டும் வெளிப் படுத்த வேண்டும் என்ற நோக்கம் இந்தக் கட்டுரையின் முக்கியத்துவம் ஆகும். 


எலும்புகளின் பொதுவான தன்மை வளையாதது. அதே சமயம் வளையக் கூடாதது ஆகும்.  

  மனித எலும்பு அமைப்பு 


குழந்தைப் பருவம் முதலே சில சிறப்புப் பயிற்சிகளை அளிப்பதன் மூலம் சில எலும்புகள் சற்று வளைவதும் ( இயல்புக்கு மாறாக ) அதன் அமைப்புகளில் அவைகள் அமைந்துள்ள  இடங்களினின்றும் சிறிது விலகியதாகவும்  அமையும். 

ஆனால் இவ்வாறு இயல்பினின்றும்  அவற்றில் அவ்வாறு மாற்றுவது  அரை    சதவிகிதம்  (0 .5 %)  மட்டுமே ஒரு பயனைக் கருதி செய்வதாகும் . 


மருத்துவத் துறையில் இவ்வாறு எலும்புகளின் தன்மைகளை மாற்றுவதோ அதற்கான முயற்சியோ எடுப்பது பற்றி  அவர்கள் இதை சரியென்றோ அதற்கான அனுமதி வழங்கவோ இல்லை.      

மனிதர்களின் இயல்பான பணி அல்லது எந்த சூழ்நிலைக்கும் அவ்வாறு செயல்படுத்த  அவசியம் இல்லை  

கழைக் கூத்து , அபூர்வ உடல் செயலாக்கம் , வித்தைகள் போன்றவைகள் மேற்சொன்ன  எலும்புகளின் இயல்பை மீறிய செயல்பாடுகளை மையமாகக் கொண்டதாகும். 


எதிரிகளிடம் இருந்து தப்புவது. பேரிடர் காலங்களில் தன்னைக் காத்துக் கொள்வது போன்ற காரணங்களுக்காக விஷேச எலும்பு வளைப்புக் கொள்கை சாத்தியப் படலாம். 

இதன் தொடர்பாக மேலும் சில விளக்கங்கள் 
ஆபத்துக் காலத்தில் வெளியேறுவதற்காக உடல் அளவே அல்லது சற்றுக் குறைவான இடத்தினின்றும் வெளியேறும் முயற்சியில் வெகு சிரமத்தின் பேரில் 
உடலை வளைத்துக் குறுக்கி தப்புவது இது போன்ற கால கட்டங்களில்  அவசரகால மாறுதலுக்கு ஏற்ப  உணர்ச்சி சம்பந்தப் பட்ட  வேலைகளில் இது இயற்கையாக நிகழக் கூடியது . இச் செயல்பாட்டுக் காலம் மிகமிகக் குறுகிய காலமே ஆகும் .

மகப்பேறு காலத்தில் மிகக் குறுகலான வெளியேற்றப் பாதை அப்பகுதியில் குறிப்பிட்ட எலும்புகள் வளைந்து திரிந்து, இடம் கொடுத்து பின் மீண்டும், தன் பழைய நிலைக்கே திரும்பி விடும் சூழ் நிலையும்  சிறிதே இயல்புக்கு மாறிய செயலாக இயற்கையால்  நிகழ்த்தப் பெறும். இதுவும்  உடல் இயல்புகளின்  ஒரு செயலாகும்.


ஓடுதல் , நீந்துதல், உயரத் தாண்டுதல் , மலையேறுதல், மரம் ஏறுதல், அதிகச் சுமை தாங்குதல், பளு தூக்குதல் போன்ற செயல்களினால் உடல் எலும்புகள் அதனதன் செயல்பாடுகளுக்கேற்ப  தேய்மானம், வளைதல் மற்றும் பல்வேறு இயல்பு மாற்றக் கொள்கைகளை  வளர்த்துக் கொள்கிறது  எனலாம்.  

அவற்றைத் தாங்கிக் கொள்ள முடியாத போது  இவ்விதச் சோதனைக் காலம் அல்லது கடினப் பணி காலங்களில் எதிர்பாராமல் எலும்பு முறிவு ஏற்படுவதுண்டு . எவ்வாறாயினும் கீழ்க் கண்ட பல எலும்புகளின் மூட்டுகளின் அசைவுகள் , அதிகபட்ச செயல்பாடுகள் என பலப்பல செய்கைகளை தொடர்ந்து பார்ப்போம். 


உறுப்புகளும் அதன் சம்பந்தப் பட்ட எலும்புகள்.


 1. தலை 
 2. தாடை
 3. கழுத்து
 4. தொடர் முதுகெலும்பு ( தண்டுவடம் ) கழுத்து இணைப்பு
 5. தோள்பட்டை  (வலது, இடது, கை  இணைப்பு)
 6. வலது, இடது முழங்கை இணைப்பு
 7. வலது, இடது மணிக்கட்டு இணைப்பு
 8. வலது, இடது உள்ளங்கையுடன் 5 விரல்கள் இணைப்பு
 9. மார்பெலும்பு 
 10. மார்புக் கூடு எலும்புகள், மார்பு, முதுகு இணைப்பு
 11. இடுப்பெலும்பு
 12. தண்டுவடம் - முதுகெலும்பு இணைப்பு 
 13. வலது, இடது தொடை , தொடை எலும்பு இணைப்பு 
 14. வலது, இடது முழங்கால் இணைப்பு
 15. வலது, இடது  கணுக்கால் இணைப்பு
 16. வலது, இடது குதிகால் மற்றும் நடு பாத கால்  விரல்கள்  இணைப்பு

வரும் பதிவில் உடலில் ஒவ்வொரு பகுதியில் உள்ள எலும்புகளை அதிக பட்ச அசைவுத் தன்மை பற்றி    தொடர்ச்சியாக காண்போம். 


                                                                                                 (தொடரும் )

No comments:

Post a Comment

TRANSLATE