Tuesday, July 6, 2010

நலம் வாழ உடலை ஆராதிப்போம் - பகுதி 2

                        நாம் என்ன புழுக்களா?

எலும்புகள் தான்  ஒரு மனிதனுக்கு வடிவை தருகின்றன. நிற்பதற்கும் நடப்பதற்கும் பலத்தை கொடுக்கின்றன. எலும்புகள் இல்லை என்றால் மனிதனால் ஒன்றும் செய்ய முடியாது.

                                                                         
உதாரணமாக ஒரு புழுவை எடுத்துக் கொள்வோம். ஒரு புழுவிற்கு உடம்பிலே எலும்புகள் இல்லை. ஆனால் எலும்பில்லாத அந்த பிராணியும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. 

மனிதர்களை கூட சொல்வோம் முதுகெலும்பு இல்லாதவன் என்று . 
அவனுக்கு தைரியம் இல்லை என்பதற்காக இவ்வாறு கூறுவார்கள். 
ஆனாலும் அந்த முதுகெலும்பின் பயன்தான் யோகத்திற்கு அடிப்படையாக , ஆதாரமாக இருக்கிறது.


புழுவிற்கு முதுகெலும்பு இல்லாததால் அவை எப்படி வேண்டுமானாலும் சுற்றும். எந்த திசையில்  வேண்டுமானாலும் திரும்பும். 
(UNIVERSAL DIRECTION )  எப்படி வேண்டுமானாலும் தன்னை வளைத்துக் கொள்ளும். அதற்கு இப்படித்தான் வளைய வேண்டும் என்ற நெறி கிடையாது.


நாம் என்ன புழுக்களா? 


பலவாறும் ஆசனம்  என்ற பெயரில் உடம்பை வளைத்துக் கொள்வதற்கு.

காரணம் இல்லாமல் உடம்பை வளைப்பது தான் ஆசனங்கள் என்று இப்போது பாடங்களாக வந்து கொண்டிருக்கிறதே.


அந்த பாடங்களுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு என்றால் நம்மை புழுவாக நினைத்து விட்டார்களோ, அல்லது புழுவாக ஆக்குவதற்கு நினைக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஏனென்றால் மனிதனுடைய உடலில் உள்ள எலும்புகள் நம்முடைய புறச் செயல்பாடுகளை  இயல்பாகச் செய்திடும் வகையிலே அவை அமைந்துள்ளன. அதை பரிணாம வளர்ச்சி என்று சொல்வார்கள். 

ஒரு உயிருக்கு அதனுடைய பரிணாம வளர்ச்சிக்கு ஏற்றவாறு உடல் அமைகிறது.  அது போலவே மனிதனுக்கு இந்த உடல் அமைப்பானது பல கோடி ஆண்டுகளுக்குப் பின்   பரிணாம வளர்ச்சி பெற்று அவனுடைய நினைவுக்கு ஏற்றவாறு , தேவைக்கு ஏற்றவாறு அது இவ்வாறு அமைந்துள்ளது. 






மனிதனுக்கு கைகள் போல பறவைகளுக்கு கைகள் அதன் இறக்கைககள், அவைகள் பறக்க வேண்டும் என்பது அவைகளுக்கு நிர்ப்பந்தம்.  
ஓரிடம் விட்டு வேறிடம் செல்லவும் , இரையினை தேடவும் அந்த இறக்கைககள் அவைகளுக்கு பரிணாம வளர்ச்சியின் அடிப்படையிலே அமைந்து இன்றும் உள்ளன.  

மீன்கள் எவ்வாறு நீந்துகிறதோ அதைப் போல.

                                                                       
பறவைகளை ஒரு நிமிடம் நினைத்துக் கொள்ளுங்கள். 
அந்த இறக்கைகளை தேவையானபோது  அவை விரித்துக் கொள்ளும். அமரும்போது அவற்றை மூடிக் கொள்ளும். 
அதனுடைய பயன்பாடு அவ்வளவுதான். 
அவற்றின் இறக்கைகளை தேவை இல்லாமல் அவை சுழலச் செய்வதில்லை. 

ஆனால் நாம் மாத்திரம் நம்முடைய கைகளை  சுழற்றுகிறோம். கேட்டால் அதனை ஒரு உடற் பயிற்சி என்று சொல்கிறோம். 

தோள்பட்டையில் அந்த பந்து கிண்ண மூட்டு அவ்வாறு  அமைந்துள்ளதால் அவ்வாறு செய்வதில் ஒரு தவறும் இல்லை.  ஆனால் எலும்புகள் என்பது எவ்வளவு தான் ஆரோக்கியமாக இருந்தாலும் , வலுவாக இருந்தாலும் தொடர்ந்த பணியினை அவற்றிற்கு தரும்போது அவை தேய்ந்து விடும் என்பது உண்மை 

உதாரணமாக ஒரு கிரிக்கெட் வீரரை எடுத்துக் கொண்டால் அந்த தோள்பட்டையும் , அந்த காலும் எவ்வளவு நாள் நன்றாக இருக்கும் என்பதை அவர்களிடம் கேட்டால் தெரியும். அவர்களுக்கு விரைவில் அது தேய்மானம் அடைந்து விடுகிறது. ஏனென்றால் அவர்களுக்கு அந்த தோள்பட்டை மற்றும் காலின் பயன்பாடு அதிகம். 


ஆணழகன் போட்டியில் கலந்து கொள்பவர்களை பார்த்திருப்போம்.
தன் உடல் தசைகளை பெருக்கி, பலவகைகளிலும் அவற்றை இயக்கி அதை அழகு மிளிரச்  செய்வார்கள். அவ்வாறு அந்த உடல் தசைகளை கட்டமைப் பதற்காக அவர்கள் எடுத்துக் கொள்ளும் காலம் , உணவு போன்றவை நீண்டதாக, அதிகமாக இருக்கும்.  

மேலும் அந்த தசை அழகை எவ்வளவு நாட்களுக்கு அவர்களால் தக்க வைத்துக் முடியும் என்றால் அது கேள்விக் குறிதான். ஆனால் அவற்றின் பின் விளைவு அவர்களுக்கு பிற்காலத்தில் தான் தெரியும். 

அது போல எடை தூக்குபவரை (weight lifters) கவனத்தில் எடுத்துக் கொள்வோம்.  சாதாரணமாக ஒரு மனிதன் தன்னைப் போல ஒரு மடங்கு எடையினை தூக்கலாம்.  அதற்கு மேலாக தூக்க வேண்டும் என்றால் அதற்கு பயிற்சி தேவை. அந்த பயிற்சியினை பார்த்தீர்களானால் சிறிது சிறிதாக எடையினை அதிகரித்து முடிவில் பல மடங்கு எடையினை தூக்கும் அளவிற்கு பழகி விடுவார்கள். 


ஒரு மூட்டை சுமக்கும் தொழிலாளி மட்டும் அவ்வளவு எடை தூக்குகிறார் என்றால் அது அவர் பிழைப்புக்காகசெயும் தொழில் 

ஒரு தொழிலுக்காக செய்வதற்கும் , விளையாட்டுக்கள், பரிசுகளுக்காக செய்வதற்கும் வேறுபாடு உள்ளதல்லவா. 

அது போல நீளம் தாண்டுதல் , உயரம் தாண்டுதல் இந்த பயிற்சிகளில் எல்லாம் அதிகமான சிரத்தை எடுத்துக் கொள்கிறார்கள்.  


ஒரு உதாரணத்திற்கு சொல்லப் போனால் ஒரு புலி அல்லது ஏதாவது ஒரு விலங்கு நம்மை துரத்தி வருகிறது என்று நினைத்துக் கொள்வோம்.  அப்போது நாம் ஓடும் ஓட்டம், ஏற்படும் தடையினை  தாண்டிச் செல்லக் கூடிய உயரம் இவை எல்லாம்  பயிற்சி எடுத்து செய்வதை விட அந்த நேரத்தில் நாம் மேற்கொள்வது அதிகமாக இருக்கும். 
                                                                        
மேலும் அதே போல gymnastic  என்ற விளையாட்டினிலே உடலை எலும்பே இல்லாதது போல  பலவாறும் வளைப்பார்கள்.  அதற்கெல்லாம் பயிற்சி ஆனது மூன்று வயதில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்பார்கள் . அப்போதுதான் அதை சரியாக செய்ய முடியும்.  ஏன் இவ்வளவு காலம் சக்தி விரயம் , கால விரயம் இவற்றை மேற்கொண்டு இவற்றினால் ஆவது என்ன?


இவற்றை எல்லாம் நீங்கள் ஏன் சுட்டிக் காட்டுகிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம்?
எங்களுடைய ஒரே பதில் இது தான்.
இந்த பயிற்சிகளை எல்லாம் செய்வதால் ஒருவர் 200  வருடம் ஆரோக்கியமாக வாழ முடியும் என்றால் தாராளமாகச்  செய்யலாம்.

இவற்றை மனிதர் செய்வதால் நீண்ட  ஆரோக்கியம் ,  ஆயுள் கூடும் என்றால்  இதை பள்ளிப் பாடமாக கூட ஆக்கி விடலாம்.  அவற்றில் மறு கருத்து எதுவும் இல்லை. 


நீங்கள் யோகம் செய்தல் மட்டும் 200  ஆண்டுகள் வாழ்ந்து விடலாமா   என்று் கூட கேள்வி எழுப்பலாம்?

அதற்கும் ஒரே பதில்

முதுமையினைத் தள்ளிப் போடல் , இருக்கும்வரை நோயற்ற வாழ்க்கை வாழ்வது. மனத் தூய்மை, மன அமைதி , மகிழ்ச்சி, போன்றவற்றை சிறந்த ஆசனங்கள் செய்வதன் மூலம் பெற முடியும்.




நமது யோகப் பயிற்சியிலே கூட சில விஷேச ஆசனங்களில்  அமரும்போது   கால்களை சரியான நிலையில் வைக்க  சில காலம் ஆகும்.


மனிதர்கள் ஒவ்வொருவரும்  தாங்கள் ஈடுபட்டிருக்கிற பணியிலே அதனை சிறப்பாக செய்து முடிக்க அவர்களுக்கு தேவையான ஆரோக்கியம் இருந்தால்  போதுமானது.

அக, புற, உடல் நலனைப் பேணுவதற்கு ஏற்ற சக்தி விரையமற்ற  ஆசனப் பயிற்சிகளை செய்து அனைவரும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதே  
ஸ்வார்த்தம் சத் சங்கத்தின் நோக்கம். 


                                                                                                           (ஆய்வு தொடரும் )













4 comments:

  1. அருமையான ஆய்வு கட்டுவுரை...மேலும் எழுத வாழ்த்துகள்.
    எல்லா செயலுக்கும் ஆதாரம் எனபது முக்கியம்.....

    ReplyDelete
  2. welcome sir
    you r in right path.congrats.love &grace.

    ReplyDelete
  3. நன்றி சிங்கம் அவர்களே.
    சரியான பாதையில் இறைவன் நம்மை வழி நடத்தி செல்வார்
    udhayakumar
    media incharge
    pathanjali yoga kendhram

    ReplyDelete
  4. நண்பர் ஜெகதீஷ் அவர்களுக்கு,
    ஆசனங்கள் என்பது உடற்பயிற்சிக்கும் அப்பாற்பட்டவை என்பதை யாமும் அறிவோம். அவற்றின் பலன்கள் உடற்பயிற்சிகளை விட மேம்பட்டது என்று எமக்கு தெரியும். இங்கே ஒட்டுமொத்த ஆசனப் பயிற்சிகளையோ , உடற் பயிற்சிகளையோ நாம் குறை கூறவில்லை. தற்கால யோகிகள் என்று அழைத்துக் கொள்பவர்கள் நம்முடைய யோகப் பாரம்பரியத்தில் இருந்து சற்று விலகி புதிது புதிதாக ஆசனங்களை உருவாக்குகிறார்கள்.
    யோகா என்றாலே ஆசனங்கள் மட்டுமே என்னும் அளவுக்கு ஒரு பிரதி பிம்பத்தினை இங்கே அவர்கள் உருவாக்கி விட்டார்கள் . அஷ்டாங்க யோகத்தின் ஒரு பகுதி மட்டுமே ஆசனம் . அதுமட்டுமல்லாமல் ஆசனம் என்பது உடல் புற அக உறுப்புகளுக்கான பயிற்சி. அது மட்டுமே யோகா அல்ல. அதுவும் யோகத்தில் ஒரு பகுதிதான். எந்த ஆசனங்கள் யார் யார் செய்ய வேண்டும். ரிஷிகள் நமக்கு அருளிய ஆசனங்கள் என்ன. அவற்றின் தேவை என்ன. என்பதை வரும் ஆய்வுக் கட்டுரையில் தெளிவுபடுத்த இருக்கிறோம். யோகம் என்பது இறைநிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும் ஒரு வழிகாட்டி.
    ஹத யோக பிரதீபிகை, பதஞ்சலி யோக சூத்திரம், திருமந்திரம் போன்றவற்றிலே ஆசனங்கள் என்றால் என்ன . எந்த ஆசனங்கள் எல்லாம் யோகத்திற்கு உரியவை என்பது தெளிவாக விளக்கப் பட்டுள்ளன. ஒன்றை பகுத்து தெளிவாக அறிவது தானே சிறந்தது.

    ReplyDelete

TRANSLATE

Click to go to top
Click to comment