Monday, July 5, 2010

நலம் வாழ உடலை ஆராதிப்போம்

 ஆசனங்கள் எதற்காக ?

                                                                                  

மனிதனுடைய அடையாளம் காட்டக் கூடிய கை , கால்கள், தலை, உடல்  மனிதருக்கே உரித்தான பாதம் பாதிந்த நிலை, அந்த உடம்பிலே தொங்கி கொண்டிருக்கும் கைகள், முன்னும் பின்னும் முதுகும் மார்பும் , பிடரி, உச்சந்தலை , போன்ற அடையாளங்கள் மனிதனை மனிதனாக அடையாள படுத்திக் கொண்டிருக்கின்றன.
ஒரு சிறுத்தையோ அல்லது ஒரு குதிரையினையோ பார்க்கும்போது அதனுடைய செயல்பாடுகளும், வடிவமும் நம் நினைவுக்கு வந்து அவை மனிதனை விட மாறுபட்டிருக்கின்றன என்பதை உணர்வது போல  மனிதருடைய அடையாளங்கள் எல்லாம் என முன்பு குறிப்பிட்டது போல அவை விலங்கில் இருந்து மனிதனை மாறுதல் அடையச் செய்யும்  புற அடையாளங்கள் மட்டுமே ஆகும்.
புற அடையாளங்கள் கண்ணுக்கு தெரிந்தவை ஆனால் நம் அக அடையாளங்களை நாம் கண்டறிவதுதான் நாம் வாழ்வின் தலையாய பணி.
யோகம் அதனை கண்டறிய நமக்கு உதவி செய்கிறது.
ஒவ்வொரு மனித உயிரும் தன்னுடைய வாழ்வை ஆரோக்கியமாக வைத்திருக்க நினைத்தாலும் கூட , பெரும்பாலான உயிர்களுக்கு அவை இயலாமல் போகிறது.


முந்தைய காலத்தில் மனிதருக்கு உடலை வளமாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி என்ற ஒன்று தேவையாக  இருந்ததா என்பது கவனத்தில் கொள்ளப் பட வேண்டிய விஷயம்.


அவை இல்லை என்று கூட  சொல்லலாம். அவர்கள் அப்போது உடல் அளவில் , மனதளவில் மிகவும் ஆரோக்கியமாக இருந்தார்கள் .அவர்களுக்கு  இறை அருளும், குரு அருளும் கிடைத்தது.
அவர்கள் குருகுலம் அல்லது வேறு பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவர்கள் தொழில் சார்ந்த கல்வியினை கற்றார்களே தவிர , ஒரு சிலர் ஞானக் கல்வியினை கற்றார்கள்  ஆனால் அவர்கள் உடற் பயிற்சியினை எந்த அளவு கற்றார்கள் என்பது நமக்கு தெரிய வரவில்லை.


பல காலம் அவை மாறி தொழிலுக்கென சில உடற்பயிற்சிகளையும்  காலங்கள் மாற மாற மள்ளர்களாகவும், விளையாட்டு வீரர்களாகவும் , ஒவ்வொரு பணிக்கென உடலை அழகுபடுத்தியும் வலுப்பெற்றும்  அவர்கள் வாழக் கூடிய சூழலிலே தள்ளப் பட்டார்கள். அவர்களில் பல பேர்கள் இந்த உடற் பயிற்சிகளை செய்து காட்டி  அவர்கள் வித்தைக் காரர்களாக , கழை கூத்தாடிகளாக இருந்திருக்கிறார்கள்.நாம் விளையாட்டு வீரர்களை atheletic என்று கூறுவோம்.  கிரிக்கெட் வீரர்கள், கால்பந்து வீரர்கள் அவர்களுடைய விளையாட்டு திறன்களை மேம்படுத்த அவர்கள் உடலை விளையாட்டுக் கேற்றவாறு  மாற்ற அவர்கள் சில பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள்.  அவையெல்லாம் பொதுவான உடற்பயிற்சிகளா என நாம்  சற்று நினைத்துப் பார்க்க வேண்டும்.
ஆனால் காலம் காலமாக இருக்க கூடிய ஒரே உடற்பயிற்சி  தியானமும், தியானம் சார்ந்த இருக்கையும், அதாவது ரிஷிகள் ஆதனம் என்று சொல்லக் கூடிய ஆசனம்  மட்டுமே இருந்திருக்கிறது.


அந்த ஆசனங்கள் இப்போது எப்படி இருக்கின்றன என்று எண்ணிப் பார்த்தால் நமக்கெல்லாம் பிரமிப்பாக இருக்கிறது.  ஆசனம் என்பது முழுக்க முழுக்க உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கும், உடல் ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ளவும் உதவக் கூடிய ஒன்றாகும். 
 இன்றைய கால கட்டத்திலே  உடலைப் பேணுவதில் பல  சிக்கல்கள் பல இருக்கின்றன. ஏனென்றால்  நம்முடைய ஆரோக்கியம் வெகுவாக குறைந்து விட்டது. அதற்கு காரணமாக நம் உணவு, வாழ்க்கை நிலை, இந்த உலகம் இவற்றில் காணப்படும்  குறைபாடுகள் நம் உடலை முடக்கி போடுகிறது.
ரிஷிகளின் காலம் தொட்டு ஆசனங்கள் இருந்து வருகின்றன. பெரும்பாலும் ரிஷிகளின் திரு உருவங்களை பார்க்கும்போது  பெரும்பாலும் அவர்கள் அமர்ந்த நிலையிலேயே இருந்திருக்கிறார்கள். அல்லது அரிதாக நின்ற நிலையில் இருப்பார்கள்  என்றவாறு படங்களை பார்த்திருக்கிறோம். சிலவற்றில் நடந்தவாறு தோற்றம் அளிப்பார்கள்.  மாறாக வேறு நிலையிலே அவர்கள் ஆசனங்கள் செய்தவாறு நாம் பார்த்ததில்லை.
ஆனால்  பின் வந்தவர்களால் ஆசனங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.
அவை உடலுக்குரிய ஆசனங்கள் அவை உடல் உள்ளுறுப்புகளை ஆரோக்கியமாக வைப்பதற்காக உருவாக்கப் பட்டன.  அவற்றை இன்னென்ன ஆசனங்கள் என்று மிகவும் குறைவாகவே இருந்தன.

ஆனால் தற்காலத்திலே ஆசனங்கள் என்று பலவிதமாக உருவாக்கப் பட்டுள்ளன . இன்னும் சொல்லப் போனால் அவற்றை ஒரு பாடமாக வைத்திருக்கிறார்கள். அவற்றில் நிறைய ஆசனங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.  அதற்கு பட்டங்கள் கொடுக்க கூடிய அளவிற்கு இன்று ஆசனங்களை பிரபலபடுத்தி வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை.

அவற்றை எப்படி செய்ய வேண்டும், எதற்காக செய்ய வேண்டும் என்பதையெல்லாம்  என்பதையெல்லாம், இந்த நவீன காலத்தில் அவற்றைக் கற்றுக் கொண்ட ஆசிரியர்கள்  பிறர்க்கு கற்பிக்கிறார்கள்.
ஸ்வார்த்தம் சத் சங்கத்தினை பொறுத்தவரை இந்த ஆசனங்களை கற்க வேண்டாம் என்பதை  வலியுறுத்தவில்லை. 
ஒவ்வொரு மனிதரும் தனக்கு கொடுக்கப் பட்ட பணியினை சரியாக செய்தாலே அவை அவர்கள் உடல் ஆரோக்யத்திற்கு போதுமானது.


ஒரு மனிதன் ஒழுங்காக அமர வேண்டும், நடக்க வேண்டும், குனிந்து நிமிர வேண்டும் , உறங்கும்போது எவ்வாறு படுக்க வேண்டும் , எவ்வாறு எழுந்திருக்க வேண்டும் . உணவருந்தும்போது செய்யவேண்டியவை என அடிப்படை விஷயங்கள் சரியாக பின்பற்றப் பட்டாலே ஆசனங்கள் தேவையில்லை என்பது எங்களுடைய கருத்து.
உடல் உள் உறுப்புகளை வலுப்படுத்துவதிலே , ஆரோக்கியமாக வைப்பதிலே அன்றைய காலத்திலே ஆசனங்கள் என்பது சரியாக பின்பற்றப் பட்டுள்ளது. அதுவும் ரிஷிகளால் ஆசனங்கள் என்பது மிகக் குறைவாக உருவாக்கப்பட்டிருக்கிறது. என்பது எங்களுடைய கருத்து.
ஏனென்றால் மனிதர்களாகிய நமக்கு உடம்பிலே எலும்புகள் இருக்கின்றன. மற்ற ஜீவ ராசிகளிலே எலும்புகள் இல்லாதவைகளும் உள்ளன. நம் உடம்பை எவ்வாறு வளைக்க வேண்டும் , நிமிர்த்த வேண்டும் என்பதற்கெல்லாம் அரிய பாடங்கள் இருக்கின்றன. அவைகள்தான் ஆசனங்களுடைய அடிப்படைகளாக இருக்கின்றன.
உடலியலிலே  மற்றும் உடற் செயலிலே (anatomy and physiology ) எலும்புகள் எவ்வாறு அமைந்துள்ளன. அவை எவ்வாறு  வளரக் கூடியவை. வளையக் கூடியவை  , எவ்வாறு செயல்பக்கூடியவை என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளன. ஆசனங்களை கற்பதற்கு முனனால் அவற்றை கற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.


வரும் பதிவில் அவற்றைப் பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment