Wednesday, June 9, 2010

அணு அணுவாய் யோக விஞ்ஞானம்

        சிவலிங்கம் - ஒரு விஞ்ஞான மயத் தோற்றம்  

அணுமயலிங்கம்



அணுவின் அணுவின் ஆதிபிரானை 
         அணுவின் அணுவினை ஆயிரங்கூறிட்டு
                  அணுவின் அணுவினை அணுக வல்லார்கட்கு
        அணுவின் அணுவினை அணுகலுமாமே 

                                (திருமந்திரம் - திருமூலர் )

அணு   என்பதும் அதன் இயக்கங்களும், சக்திகளும் இன்றைய விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பில் மிக முக்கியமான ஒன்றாகும்.

நம் முன்னோர்கள் பண்டைய ரிஷிகளும் அருளாளர்களும், இதனை மிகத் 
துல்லியமாப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மெய்ஞான அறிவாக
கண்டுபிடித்து அதனோடு  நம்மையும்  இணைத்துக் கண்ட உண்மைகள் 
ஆன்மீக அடிப்படை பாடமாகும். 


                                      அணுவும், பரமாணுவும் என்று கூறி  அசைவற்று இருந்த  உலகினை (பிரபஞ்சத்தை ) பிரபஞ்ச நாயகன் தான் நினைத்த மாத்திரத்தில் அசைவற்று இருந்த அணுக் கூறுகள் ஒன்றோடு ஒன்றாய்க் கலந்து அணுச் சலனங்களின் உண்டான அதிர்வுகளால், சப்தம் எழுந்து , ஒளியுண்டாகி அனைத்துமாகி சிருஷ்டி என்ற படைப்புத் துவங்கிய விதத்தையும்  , அந்த படைப்பு ஒடுக்கதிலிருந்து மீண்டது என்பதையும் இத் தோன்றலும் தோன்றியவை, ஒடுங்குவதும், (ஒவ்வொரு அணுவும் தோன்றியவாறே தோன்றுவதற்கு முன்பிருந்து ஒடுக்க நிலையில் ஒடுங்குவதும் , ஒரு நியதி என்பதைக் கண்டு சொன்னார்கள். 


  மேலும் பிரிக்க முடியாத இறுதித் துகளும் தனக்கென இரு உருவங்களைக் கொண்டதாக (concave , convex ) குழியும், குவியும் , என்று இருப்பதோடு  , அதனுள் சக்தியும் , சலனமும் என்ற உட் கூறுகளுக்கும் இடையில் ஒரு வெளியும்  ஒளியும் இயக்கப் பண்பு மாறாத , ஒடுக்க காலம் வரை, அதன் சலனம் நிற்காமலும், இருப்பதைக் கண்டறிந்து நம் முன்னோர்கள் நமக்கு சொன்னார்கள். அதையே  


இன்றைய விஞ்ஞானம் 

வோர்க் தியரி  
என ஒப்புக் கொண்டிருப்பது உண்மைக்கு உரை கல்லாகும்.

குவாண்டம் தியரி,ஸ்டிரிங் தியரி 

போன்ற பலப்பல ஆராய்ச்சிகள் அதை உறுதிப் படுத்தியுள்ளன. இல்லாத ஒன்றில் இருந்து எதுவும் தோன்றியிருக்க முடியாது. எனவே ஏதோ ஒன்று முதலில் இருந்திருக்கிறது. என்ற வரை ஒப்புக்கொண்ட இன்றைய விஞ்ஞானம் , ஏதோ அந்த ஒரு இருப்பே இறைவன் என்பதை விரைவில் ஒப்புக் கொள்ளும் காலம் வரும்.

யோக விஞ்ஞானம்  எப்போதும் நம்பிக்கையினை மட்டும் தனது வலுவான அடித்தளமாக கொள்ளவில்லை. அறிவியலும் அதன் அடிப்படைகளில் ஒன்றானதாக இருந்து வருகிறது. அது   ஒரு  மதத்தின்  சார்பு அல்ல. பலவற்றை  தனக்குள் கொண்டது.

                                                                                                     (தேடல் தொடரும்)


     

3 comments:

  1. good post....with the hope comes more from u.

    ReplyDelete
  2. அறிவியலுக்குள் கடவுளை அடக்க முடியவில்லை மற்றும் அறிய முடியவில்லை என்பதே உண்மை.
    எந்த ஒரு காரியத்திற்கும் காரணம் உண்டு. காரண ,காரிய நாயகனே அணுவாய் எங்கும் விரவி நிற்கிறான்.
    உண்மை என்பது வாதத்தில் வெளிப்படுவதில்லை .
    யோகத்தில்தான் வெளிப்படுகிறது. அதில்தான் கடவுளை உணரமுடியும்.
    உணர முயற்சியுங்கள் .
    தன்னை எலும்பு தோல் போர்த்திய சதைப் பிண்டம் என்று திடமாக உணர்பவர்களால் ஒருபோதும் அந்த உண்மையினை உணர முடியாது

    ReplyDelete

TRANSLATE

Click to go to top
Click to comment