Sunday, August 16, 2009

முக்குண இயல்புகள்

சத்துவ குணவியல்பு தேவ குணம்:
அன்பு,
அமைதி,
அறநெறி,
நன்மைகளையே நோக்கும் தன்மை,
நெறி பிறழாமை ,
தனக்கென வாழாமை , உயரிய நோக்கம்,
உள்ளத்தூய்மை, நல்லோர் சேர்க்கை,
பொது நிலையாமை தத்துவம் பற்றி உணர்ந்து உலகபந்தங்களில் ஒட்டாது விலகியே நிற்றல்,

பற்று,
பயம்,
கவலை,
எதிர்பார்த்தல் எதுவும் அற்ற நிலை, போன்ற உயர் குணங்கள் .  

தமோ குணவியல்பு 
  மிருக குணம்
காமம், வெகுளி, மயக்கம், இச்சை, உலக பொருட்களிலும் சுகங்களிலும் தணியாத ஆசை கொண்டவர்கள்.

தன்னலம் ,பெருமை, பிறர் குற்றம் பேசல், யாவையும் தனதாக்கிக் கொள்ளும் முயற்சியில் இறங்குபவர்கள் ,

தர்மம், நியாயம் , நீதி, உண்மை மற்றும் நல்லறங்களை நடத்தாது . இவையனைத்திற்கும் புறம்பாக எதிராகச் செயல்படுவார்கள். ரஜோ குணவியல்பு : ஆளுமைத் தன்மை,

அடக்குதல்,

அடங்காமை,

மேலாண்மை,

சுகபோகம்நாடல்,

இரக்கமில்லா அரக்க குணம்,

தோல்விபயம்,

எளிமை விரும்பாமை,

எளியோரை மதியாமை,

படாடோப வாழ்க்கை ,

வஞ்சகம், நெஞ்சிலொன்றும் வாக்கிலொன்றுமாய் உரைப்பவர்கள்,

மிக உற்றவர்களிடம் கூட உண்மை உரைக்காதவர்கள்.

தற்புகழ்ச்சி விரும்பிகள்,

பிறர் தலைமை விரும்பாதவர்கள்.  

முக்குணங்களும் அதன் இயல்புகளும் அதற்கேற்ற செயல்பாடுகளும் அனைத்து மனித ஜீவிகளிடம் கலந்தே காணப்படுகின்றன.

தேவர்களும் இதற்கு விலக்கானவர்கள் அல்ல .


சத்துவ , ரஜோ, தமோ, இம்மூன்றின் கலப்பின் விகிதத்தின் (விழுக்காடு) பொறுத்தே அவர்களுடைய குணாதிசயங்கள் அவர்களிடம் பதியப் பெறுகின்றன. முக்குணங்களில் எக்குணம் மேலோங்கி இருக்கிறதோ (விழுக்காடு அதிகப்பட்டிருக்கிறதோ ) அதுவே அவர்களின் முக்கிய செயல்பாடுகளை நிர்ணயிக்கின்றன.

தீமை அளிக்க வல்ல , பாவங்களைப் புரிய வைக்கும் ரஜோ ,தமோ குணங்களின்றும் சத்துவ குணம் மேலோங்கி சத் புருஷர்களாக நம்மை மாற்றவல்ல சக்தி வழி அல்லது முறை தான் என்ன?

யோகத்தினால் மட்டுமே அது இயலுமாயின் அதைப் பின்பற்றி மேலேறுவதற்கு சத் குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் 196 சூத்திரங்களின் கூறப்பட்டுள்ளவைகளை எளிதாக அறிந்து கொள்ளவும், அறிந்த பின் பயிற்சி மேற்கொண்டு வெற்றியடையவும் இத்தொடர் உதவுமாயின் அதுவே இந்த அடியவனின் (குருவருளால், திருவருளால்) அளித்த பெரும்பேறாகும் என்று மகிழ்வேன்.  

வாழ்க அனைத்து உயிரினங்களும் , வெல்க , மீழ்க இம்மானுடம்.

ஓரளவேனும் சத்துவம் பொருந்தியவர்கள் வாழ்நாளில் என்றாவது ஒரு நாள் அவர்கள் நிச்சயமாக ஆன்மீகத்துட் புகுந்து அறவழி மேற்கொள்வார்கள். மேலும் அவர்கள் எவ்வளவு தரமாறியவர்களாய், தடம்மாறியவர்களாய் இருந்திருப்பினும் தன்னை மாற்றிக்கொள்ள திருந்தி விட வாய்ப்பு கிட்டும்போது அதைத் தவற விடாமல் பற்றிக்கொண்டும் , உலகபற்றுகளை விலக்கிவிடவும் நிச்சயம் வாய்ப்பு பெறுவார்கள்.


தமோ, ரஜோ, மிகுந்தவர்கள் ஊழின் காரணமாக ஆன்மீக உணர்வு அவர்களை அழைக்கவில்லை எனினும் ஏதாவது ஒன்றிரண்டு நற்பண்புகளையாவது தவறாது கடைபிடித்து வந்திருப்பார்களேயானால் எதிர்பாராது ஒரு திடீர் மாற்றம் ஏற்பட்டு பின் எதிர்மறைத் தாவல் செய்து ஞானமடைவார்கள்.

பின் இவர்கள் ஒருபோதும் முந்தைய தீய வழிகளை நாடாமல் நல் வழியில் நின்று நிலைத்திருப்பார்கள். இது போன்ற மாற்றிடும் சந்தர்ப்பங்கள் மனித குலத்திற்கு மட்டுமே சாத்தியமுள்ளதாக இருக்கின்றன எனில். மனிதன் ஒவ்வொருவனும் தன்னுள்ளே இறைவனின் ஒரு சிறு கூறு பெற்றவனாக இருப்பதே ஆகும். மேலும் எந்த ஒரு மனிதனும் சிறுகச் சிறுக , மாறி மாறி என்றாவது ஒரு பிறவியில் முக்தியடையும் பேறைக் கொண்டிருப்பார்கள். என்பதே சித்தர்களின் வாக்கு.

அவர்களின் பிறவி எண்ணிக்கை கூடலாமே தவிர, ஞானம் பெறும் வரை அவர்களுக்கு வாய்ப்பு கிட்டிக்கொண்டேயிருக்க ஞானியர்கள் அவர்களை விடாது தொடர்ந்து வழிபடுத்துவதே பணியாகக் கொண்டு கருணை செய்கிறார்கள் என்பதும் அவர்கள் திருவாக்காகும்.  
இயமம், நியமம், ஏற்போம், 

ஆசனம் செய்வோம்,

பிராணயாமம் கற்போம், 

பிரத்யாகாரம் பரிந்துனர்வோம்.
தாரணை , தியானம், எனும் உறு தவத்தில் ஒன்றி நிலைப்போம். 

சமாதி நிலை என்ற ஆன்ம உணர்வால் சூட்சமம் பெற்று சாதிப்போம்.

விதியை நாமே உற்பத்தி செய்தோம், விதியைப் பரவீதியில் வீசுவோம்.  

இகத்தில் பரத்தைக் கண்டு , இறையினை அறிந்து இறையில் கலப்போம். 

நித்தியம் நித்தியம் நிச்சயம் நிச்சயம்

"சத்குரு பாதம் போற்றி போற்றி "

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment