ஆன்மீக விழிப்புணர்வும் கர்ம விடுதலையும்
முன்னுரை:
மனித வாழ்வின் இன்ப
துன்பங்களுக்குப் பின்னால் இருக்கும் சூட்சுமங்களை உணர்வதே உண்மையான ஞானம்.
நம்முடைய தற்போதைய நிலைக்குக் காரணம் எது? நாம் ஏன் துயரப்படுகிறோம்?
இதற்கான விடையையும், வாழ்வை எதிர்கொள்ளும்
முறையையும் பதஞ்சலி மகரிஷி காட்டும் வழியில் நின்று சிந்திப்போம்.
துன்பத்தின் வேர்: கர்மா மற்றும் பற்று
மனதின் துன்பங்களுக்கு அடிப்படை
காரணம் கர்மா. இந்தக் கர்மா உருவாவதற்குப் பின்னால் இருப்பது, கடந்த பிறவிகளில் நாம் கொண்ட 'ஆசை' என்னும் பற்றுதல் ஆகும். ஆசையைத் தூண்டி நம்மை மயக்குவது 'மாயை'. உண்மையில் மாயை யாரையும் வற்புறுத்தி
இழுப்பதில்லை; விழிப்புணர்வு இல்லாதபோது நாமே அதற்குள்
சென்று சிக்கிக் கொள்கிறோம்.
பற்றுதல் எனும் விலங்கு:
மனிதனுக்கு வாழ்வில் தேவைகள்
இருக்கலாம்; அதாவது பற்று இருக்கலாம். ஆனால், 'பற்றுதல்' (Obsessive Attachment) மட்டுமே இருக்கக்
கூடாது. இதுவே வாழ்வின் மிக முக்கியமான நுணுக்கம். எதையும் விழிப்புணர்வோடு
அணுகும்போது, அது நம்மை அடிமைப்படுத்துவதில்லை.
வழிபாடும் விழிப்புணர்வும்:
பல நேரங்களில் நாம்
வழிபாட்டை நம் ஆசைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு வடிகாலாக மட்டுமே பயன்படுத்துகிறோம்.
அந்த ஆசைகள் நிறைவேறாத போது, இறைவன் மீதும் ஆன்மீகத்தின்
மீதும் நமக்குக் கோபம் வருகிறது. ஆனால், வழிபாட்டை ஒரு விழிப்புணர்வுக்கான
அடையாளமாக மாற்றும்போது, அங்கு வழிபாடும் சிறக்கிறது;
நம் நோக்கமும் தூய்மை அடைகிறது.
ஈஸ்வரப் பிரணிதானம் (இறை
அர்ப்பணிப்பு) :
பதஞ்சலி மகரிஷி தனது யோக
சூத்திரத்தில் 'ஈஸ்வரப் பிரணிதானம்' என்று
குறிப்பிடுவது இதைத்தான். நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், அதன்
பலன்களையும் எதிர்பார்ப்பு இன்றி இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும். எல்லாச் செயல்களிலும்
விழிப்புணர்வைக் கொண்டு வரும்போது, அங்கே புதிய பற்று உருவாவதில்லை;
அதனால் கர்ம வினைகளும் பதிவாவதில்லை.
முடிவுரை:
இவண்:

No comments:
Post a Comment