Sunday, October 5, 2025

பஞ்சமிப் பரவசம் ( மாதங்கி )

அன்னை மாதங்கி அருள் - 4

 

மொத்த பரிமாற்றமும்

நித்தமும் நினைவில் வைத்து

மகிழ்ந்திருக்கும் உன் வித்தகம்ௐ

 


 

எண்களில் காலம் கடந்தும்

புதுமை நீ என என்னை ஆழ்த்திடும்

உன் ஆளுமை ஆச்சரியம் 🦜🦜🦜

 

வார்த்தைகளில் வாழ்பவனை

மௌன திரைக்குள் இருந்து

ஆண்டு விட்ட உன் செயல் அற்புதம் 🦜🦜🦜

 

அந்நாள் மன மகிழ்வை முன்னாள்

என்றில்லாமல் எந்நாளும்

தொடர்ந்திட செய்வாயோ???

 

அலைகடல் உள்ளம் கொண்டு ஆர்ப்பரிப்பவனை

அமைதியால் அரவணைக்கும்

அன்னை போல்🦜🦜🦜

 

உருவமும் கொண்டாய்

உள்ளத்தில் பெரிதாய் நின்றாய்

உன் மாறாத அன்பு எப்போதும்

எனக்கு மலைப்பு தரும்....🦜🦜🦜

 

நிகழ்வினை விரல் வழி கோர்க்காத

உன் அன்பின் ரகசியம்

ஆயுளுக்கும் புதுமையாய்

எனக்கு நீ அருள் செய்வாய் !🦜🦜🦜

 

ஈசனின் காதலே ! உமையவளே!

எனதுயிர் மாதங்கி🦜🦜

பஞ்சமி பரவசம் உன்னால் தொடரட்டும்🦜🦜

 

 

                                                                ஆக்கம்🦜🦜

 #மாதங்கியின்_மைந்தன்  @ #சிவ_உதயகுமார் 

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment