Friday, February 9, 2024

யோகம் இப்போது துவங்குகிறது

   பதஞ்ஜலி யோக சூத்திரம் என்பது ஆன்மீக வரலாற்றில் அரிதாக படைக்கப் பட்ட  ஒரு அற்புதமான படைப்பு...

                                   


   

    ஆனால் மிகப் பெரிய ஆன்மீக மேதைகள்  ஞானிகள் எல்லோரும் அந்த படைப்பினில் புகுந்து அவரவர்கள் புரிந்த அளவுக்கு உணர்ந்தே வெளிவந்திருக்கிறார் கள்...


     ஒரு குறிப்பிட்ட சமய உட்பிரிவில் தீவிரமாக இருந்தாலும்  சைவ சித்தாந்தங்களில் ஒன்றாக இருந்தாலும் யோக சூட்சுமங்களை பற்றி பேசக்கூடிய தமிழ் வேதங்களில் ஒன்றான திருமந்திரத்தை ஏற்றுக் கொள்வது கடினமாக இருக்கும்...


   காரணம் திருமந்திரத்தில் முழுமுதற் கடவுளாக
சிவபெருமான் குறிப்பிடப்படுகிறார்...




    ஆனால் பதஞ்சலி யோக சூத்திரம் என்பது உலகம் முழுமைக்கும் பொதுவான ஒரு நூல்...



   நீங்கள் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் அல்லது இந்து மதத்தின் மற்றொரு உட்பிரிவினை பின்பற்றுபவராக இருந்தாலும் உங்களுடைய இஷ்ட தெய்வம் எதுவாக இருந்தாலும் நீங்கள் பதஞ்சலி யோகத்தை ஒரு தத்துவமாக எடுத்து பயன்படுத்தி உங்கள் மதத் தன்மையை தொடர அது அனுமதிக்கிறது...


காரணம் அது குறிப்பிட்ட பிரிவின் கடவுளைப் பற்றி பேசவில்லை..


   ஒட்டுமொத்த பிரபஞ்சத்திற்கும் காரணமான ஒரு இருப்பைப் பற்றியும்  அதை மனதை சரி செய்வதன் மூலம் அடைவதை பற்றியே பேசுகிறது...


    அதனால்தான் உலகின் மிகச்சிறந்த மெய்ஞானிகள் அறிஞர்கள் எல்லாம் பதஞ்ஜலி யோகத்தை பாராட்டுகிறார்கள்...


    நாம் பதஞ்ஜலியை வணங்கினாலும் பதஞ்சலி யோகம் கூறுகின்ற    அந்த ஞான சூத்திரத்தை நாம் புரிந்து கொள்ளாமல் பயன்படுத்தாமல் பின்பற்றாமல் நம்முடைய ஆன்மீக வாழ்க்கை என்பது நிறைவுறாது...


    ஆக யோக மார்க்கத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டவர்கள் அனைவரும் சாஸ்திர விஞ்ஞானம் என்ற அடிப்படையில் பதஞ்ஜலி யோக சூத்திரத்தை புரிந்து கொள்வதை முக்கிய கடமையாக கொள்ள வேண்டும் என்று                                  நமது குருநாதர் டி எஸ் கிருஷ்ணன் விரும்பினார்...


      இனிவரும் காலத்தில் அதைப்பற்றி அறியாத பொது மக்களுக்கும் எளிய விளக்கங்களுடன் கொண்டு போய் சேர்ப்பதில் எங்களுடைய கவனத்தை செலுத்த இருக்கின்றோம்


 இது குருவின் நிரந்தர கட்டளை


 அத யோகானு சாசனம்

                                  (சமாதி பாதம் முதல் சூத்தரம் )

  பொருள்: யோகம் இப்போது துவங்குகிறது

 

 

(தொடரவும் )

 

 

 

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment