Thursday, September 14, 2023

மயக்கங்கள் கலைத்திடும் மாதங்கி அருள் பரவசம்


உடன் பிறப்பே! 😇

இருளை புரிந்துணர்ந்த நீ 

வசந்தத்தை வரவேற்கவில்லை...

 


பொன்மொழியை ஏற்ற நீ

அவள் 💚சொல்லும்  புது மொழியில்

உன் மனம் லயிக்கவில்லை 🙏🏽🙏🏽🙏🏽

 

வெளிச்சத்தை 💥அருகிலே தொலைத்த

 நீதான் அதைத் தேடி

வெகு தூர பயணம் செய்கிறாய்...

 

 

காட்டுத் தாவரமும் 🌿அல்ல

கரிசல் நில கள்ளிச் செடியும்  அல்ல

அந்த வாடாமலர் மங்கை👩

 

 

வானத்து விண்மீனை 🌠விழிகளாய்

தேக்கி வைத்து கண்களை

கயல்களாக கொண்டவள் அவள்...

 

 

பெரியவரும் சிறியவனும்

பேசிடப் பேசிட புது நூலாய் மலர்ந்தவள்...

புதுமை படைப்பவள்

 

 

பல நூலுக்கு முன்னூல் ஆகி

இன்னும் யாரும் படித்து முடித்திடா

 புதுத்தகம் அவள்....

                                                   யாழ் இசை மங்கையர் நடுவிலே

தான் இசைக்கும் இசையாய்

நாளும் வளர்ந்தவள்..

 

தேனென  தமிழை சேர்த்தவர்

 அகத்திலே அமுதமாய் தான் பொழிந்து

தனித்துவ நினைவானவள்...

 

 

ஆயர் வழிச்சிறுவன் அருட்கவி பாடிட

அவன் நாவில் அகாரம் தொட்டு

பிரணவம் எழுதி வைத்த பெருமகள்...

 

நாவல் தோற்றமாய் மயில் நீலமாய்

சியாமள வண்ணமும் தோற்றப் புதுமையில்

நாளும் இளைய மேனி அவள் உடைமை

                                                       பாரோர் தேசத்திலும் வானவர் கண்ட

வழிநிலை குற்றம் தாளாமல்

மாதியர் குலத்து வரவானாள்...

 

மங்கை அவள் மகேசன் உமையாள்

நீங்கிய பொழுதெல்லாம் ரணமாய்

அவள் நினைவிலே நீலகண்டனும்....

 


நீங்காவிருக்க கரம் பற்றிட

வான் இல்லம் மீள் பெற்றிட

வானவரோடு வேழ முகமும் வேண்டிட...

 

 தான் பற்றிய குல மாதர் நிலை மாதியர்

இசைவின் வழியில் தன்னிடம் ஏகி

தரணிக்கும் மீண்டும் ஆனாள் தாயாய் 🌿

 

மயங்கிடும் மாலை நேரம்

மாடத்து உலவும் நேரம்

தளர்ந்திடும் மனதிற்கும்...........

 

தயக்கத்தின் விடை சொல்லி

வான் பறக்கும் அஞ்சுகம்🦜

அழகியலாய் அவள் கரம் சேரும்


 🦜🦜🦜🦜🦜🦜🦜🦜

ஆகமும் நானே ஆயினும்

அன்பே நீ இன்றி நான் இல்லை

என்று ஆசை மொழியுரைத்த 

ஈசனின் உமையாள் அவள் 🌿🙏🏽...

 

 

உலவிடும் மொழிகளில்

பல கவி கூறும் புது மொழியாள்

அந்தப் பாவையர் அரசி

 

உன்னத தோற்றம் பலவாய்

உருத்திரன் அருள் நாயகி

உள்ளத்துள்ளே நாளும் பெருமிதம்...

 

இதுவெஎன்ன கவியென

ஏகடியம் ஏந்துவோர் மனதிலே...

கவியல்ல உடன்பிறப்பே

 

களிப்பாய் காளி தந்த தித்திப்பு

என அவள் நினைவும் அழியாது

என்றும் எம்முள்ளே ❤️.

 

ஒடுங்கிடும் கலை வழியே

உயிர் நிற்க உன்னதமாம்

 ஞானத்தை அறிந்திட

 


ஆணென்ன பெண்ணென்ன பேதமென்ன உடன்பிறப்பே...

மானுடத்தில் யாவரும் சமம் 🙏🏽

அறிவாய் அந்த உன்னதம்

 

விரைந்தொரு நாளில் தனித்துவம் கூறிட

வேதனை மொழியை தகர்ப்பவள்

வேண்டும் வரமதை அருள்பவள் 🙏🏽

 

வரைந்திடும் ஓவியங்கள் காணா

 வண்ணக காவியம் அவள்...

நித்திய நினைவாம் 🌿

 

அந்த  இளம் தென்றல்...

 


 மாதங்கிஎன்ற பெயருடையாள்...

மதங்கர் குலத்து பெருமிதம் அவள்...

மரகதத்தில் திருமேனி அவளாகிட

மாமதுரை அவளின் தேசமாகிவிட

 

 

கடக வெள்ளியும் கவிப்பு கூறி விட

கவியாய் இத்திங்கள் முளைத்தவள் உன் நெஞ்சகத்தில்

இன்னுமா அவள் நினைவு எழுந்து வரவில்லை...🙋

 

சொல்லி வைக்கிறேன் இனியாளே!!!

அந்த சூரியத் தலைவனின் சுந்தரமொழியாளிடம்...

ஒப்பற்ற ஓவியமாய் என்னகம் சேர..

 

வார்ப்புருவில் வடிவழகாய்

உள்முக ஓசை வழியே

உனக்கு ஆணை தர 🖊🖊🖊


                                                         அருள் பரவசம் - 3

ஆக்கம் : மாதங்கியின் மைந்தன் 

(சிவ.உதயகுமார் )


 

 

 

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment