Wednesday, September 21, 2022

கடவுளைக் காட்டும் யோகம்

                           மனதுக்கு அப்பாற்பட்ட நிலையை பற்றி பதஞ்சலி யோக சாஸ்திரம் தவிர மற்ற சாதனங்கள் குறிப்பாக பௌத்தம், சமணம் போன்றவற்றில் இருந்து பிறந்த சாஸ்திரங்கள் கூறினாலும் அவையெல்லாம் கடவுள் என்ற ஒருமை நிலையை மறுக்கின்றன....

 

பதஞ்சலி மஹரிஷி
 

 ஆனால் பதஞ்சலி மட்டும் தான் பயிற்சிகளின் தன்மை அனுபவங்களின் தன்மை பலவாறாக இருந்தாலும் இறுதியாக அனைத்திற்கும் அனாதியான அனைத்தையும் ஆள்பவராக எல்லாம் வல்ல பரம்பொருள் ஒருவர் இருக்கின்றார்...

       பால் பேதமற்று குண பேதமற்று தத்துவங்கள் கடந்த உயர்ந்த நிலையில் இருந்து  பிரம்மமாக அனைத்து உயிர்களின் தோற்றமாக வாழ்ந்ததாக ஒடுக்கமாக இன்னும் என்னவெல்லாம் உண்டு அவற்றின் எல்லாம் ஊடுருவி தானே அனைத்தும் அனைத்திலும் வியாபகமாய் ஏக இறைவன் இருக்கின்றார் என்ற கோட்பாட்டை வலியுறுத்துகிறார் ஏற்றுக் கொள்கிறார் பிரதிபலிக்கிறார் என்றே கூறலாம்....

     குருநாதர் குறிப்பிட்டதை போல கபில முனிவரின் சாங்கிய யோகம் என்பது பதஞ்சலி யோகத்தை பல இடங்களில் ஒத்ததாக உள்ளது...

       ஆனால் கடவுள் என்ற தன்மையை ஏற்றுக்கொள்ள சாங்கியம் முன்வரவில்லை பதஞ்சலி அனைத்திற்கும் ஆதாரமான ஒரு இருப்பாக கடவுள் இருக்கின்றார் என்று கூறுகிறார்...

             ஆகவே இவையெல்லாம் உயர்நிலை அனுபவம் என்றாலும் நம்முடைய இலக்கு நம்முடைய பயணத்தின் நோக்கம் என்றெல்லாம் நாம் வலியுறுத்துகின்ற போது அவை அமானுஷ்யமாக இருந்தாலும் அமானுஷ்யமற்றதாக இருந்தாலும் அனுபவமாக இருந்தாலும் எந்த யோகமாக இருந்தாலும் இறுதியில் அவற்றின் பலன் என்பது இறை அனுபவமே இறைவனை அடைந்து இறைவனை அறிந்து இறைவனோடு ஒன்றாதலே என்று பதஞ்சலி கூறுகிறார்....

தியானத்தைப் பற்றிய கோட்பாடுகள் நமது சனாதன தர்மத்தில் மட்டுமல்லாது இதர பிரிவுகளாகிய சமணம் பௌத்தம் போன்றவற்றிலும் காணப்படுகின்றன...

               ஆனால் ஆனால் அவை எல்லாம் முழுமுதற் கடவுளை ஏற்றுக் கொள்ளும் ஒரு தன்மைக்கு வரவில்லை..

 

      சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியோ யோகத்தின் பலன் என்பதை இறைவன் தான் என்று அவர் தொகுத்த பதஞ்சலி யோக சூத்திரத்தின் பலனாக இறையோடு கலத்தல் என்ற அனுபவத்தை முன் வைக்கிறார்...

 

இது ஒரு கால வரையற்ற பயணம், தனிப்பட்ட சாதகர்களின் முயற்சி வைராக்கியம் பயிற்சி இவற்றுக்கு மேலாக குரு அருள், வாழும் வாழ்க்கை முறை இப்படியாக பல பல விஷயங்கள் பதஞ்சலி யோகத்தின் மீதான நமது வெற்றிக்கு அடிப்படையாக இருக்கின்றது...

 

     அந்த அடிப்படை விதிகளை நிறைவேற்றி பூர்த்தி செய்து இறைய அனுபவங்களை பெற்று சமுதாயத்தில் நல்ல மனிதர்களாக மாமனிதர்களாக மகான்களாக இருந்து குரு நிலையில் இருந்து நம்மை வழிநடத்திச் சென்றவர்கள் சென்று கொண்டிருப்பவர்கள் பலர்...

 

   அந்த வகையிலே தந்தையாக குருவாக ஆசிரியராக தோழனாக என அனைத்து நிலைகளிலும் நின்று அந்த பதஞ்சலி யோகத்தை வருட கணக்கில் நமக்கு பயிற்றுவித்தவர்...

    பல அற்புதமான தத்துவங்களையும் மந்திரங்களையும் பயிற்சிகளையும் உபதேசித்து அருமை குருநாதர் அவருடைய ஆசி அவருடைய சத்சங்கத்தில் அவருக்கு பின்னால் பங்காற்றுபவர்கள் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமல்லாமல் இந்த இயக்கத்தை அதன் செயல்பாடுகளை தொடர்ந்து வரக்கூடிய அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று இந்த நேரத்திலே பிரார்த்தித்துக் கொள்கிறேன்...

 

      மனம் என்பது அடிக்கடி சஞ்சலப்படக் கூடியது. ஆனால் ஒரு நோக்கத்தை அல்லது லட்சியத்தை வைத்து விட்டால் அந்த சந்தேகங்களிலிருந்து எல்லாம் மீண்டு வரும் அளவிற்கு மீண்டும் மீண்டும் நம்முடைய முயற்சியை தேவை என்பது பதஞ்சலி யோகத்தின் அடிப்படை...

    அவற்றுக்கும் அடிப்படை ரீதியாக குருவருள் இருக்க வேண்டும் என்பதே காலம் நமக்கு கற்றுக் கொடுக்கின்ற பாடம்.‌....

 

         ஆக யோகிகளின் குருவாக இருக்கின்ற பதஞ்சலி மகரிஷி இந்த பதஞ்சலி யோகத்தை நாம் அறிந்து கொள்வதற்கு நமக்கு ஆசி  கூறுவார் என்று நம்பி நம்முடைய பயணத்தை நாம் தொடர்வோம்...

   தன்னை அறிதல் என்ற இந்த பிறவியின் புனித பயணத்தில் இந்த சத்சங்கம்  எப்போதும் தங்களுடன் நிறைந்து தங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் மீண்டும் அடுத்த கட்டுரையில் சந்திப்போம்..................

 

(தொடரும் )

 

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment