Friday, August 26, 2022

துவங்குவதற்கு முன்பாக சில புரிதல்கள் - 2


     நாம் கண்ணால் காணக்கூடிய இந்த இயற்கை அல்லது பிரபஞ்சம் இது தானாக தோன்றியதா அல்லது இந்த தோற்றமும் தனிப்பட்ட ஒருவரால் உருவாக்கப்பட்டதா என்பதைப் பற்றிய பல்வேறு வகையான மத விஞ்ஞான ஆராய்ச்சிகள் ஏற்கனவே நடந்தன இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன...

 

   நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி உள்ளிட்ட இந்த பிரபஞ்சமானது எல்லையற்றது என்று விஞ்ஞானிகள் சொல்கின்றார்கள் ஆக எத்தனையோ கிரகங்கள் இருந்தாலும் இந்த பூமி மட்டுமே மனிதன் வசிப்பதற்குரிய வாழ்வதற்குரிய தகுதியை கொண்டிருக்கிறது என்பது விஞ்ஞான ஆய்வின் உண்மை...

 


  நாம் வாழக்கூடிய அண்டம் பால்வெளி அண்டம் (Milky way Galaxy)என்று அழைக்கப்படுகிறது இதுபோல எத்தனையோ கேலக்ஸி என்று சொல்லக்கூடிய அண்டவெளிகள் இந்த பிரபஞ்சத்தில் இருக்கலாம்...

 

   ஆக எல்லையற்ற இந்த பிரபஞ்சத்தை அளப்பதற்கு எந்த அளவுகோலும் இல்லாத போது விஞ்ஞானத்தாலும் ஓரளவு மட்டுமே எட்டிப் பிடிக்க முடிகிறது...

 

   இந்தப் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே செல்கிறது ஆனால் மனித வாழ்க்கை என்பது நாளுக்கு நாள் புரிந்து கொண்டே செல்கிறது...

 

   அறிவின் திறன் செழுமை என்பது எல்லாம் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் மாறுபடுகிறது அது போல் ஒவ்வொரு விஷயத்தையும் புரிந்து கொள்ளும் தன்மையும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் மாறுபடுகிறது...

 

   தகவல்களை மட்டுமே தெரிந்து கொள்வது உண்மை அறிவு ஆகாது.. ஒருவர் தன்னுடைய சுய அனுபவத்தின் மூலம் எந்த ஒன்றையும் உணர்ந்து கொள்வது தனக்குத்தானே நிரூபணம் ஆகி கொள்வது என்பது மட்டுமே சரியான முடிவாக இருக்க முடியும்...

 

   ஆக சாஸ்திரங்கள் கூறுவது போல இந்த பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு கடவுள் என்ற ஒருத்தர் காரணமாக உள்ளார் என அந்த பேருண்மையை எல்லா மதங்கள் கூறினாலும்...

  அந்தப் பேருண்மையை உணர்வதற்கான சாத்தியமான வழிகளை சனாதன தர்மமாகிய இந்து மதம் மட்டுமே அதை கொண்டுள்ளது...

 

    நிரூபணத்தின்  மூலம் இந்த இயற்கை அல்லது பிரபஞ்ச தோற்றத்திற்கு அப்பாற்பட்ட வரை நாம் அறிந்து கொள்ளும் போது ஆக கடவுள் என்ற ஒன்று உண்மையா அல்லது பொய்யா என்பதை நாம் உணர முடியும்...

 

     அதற்கு முன்பாக நம்முடைய உடல், மனம், இவற்றின் நுட்பங்கள் இவற்றிற்கும் பிரபஞ்ச இயற்கை என்று அழைக்கப்படக்கூடிய அவற்றிற்கும் என்ன தொடர்பு என்று நாம் ஆராய வேண்டியுள்ளது...

         இந்த சாஸ்திரங்களை அவை கூறும் உண்மைகளை எல்லாம் ஆராய்ந்து அறிவதற்கும் அவற்றின் வழியே சென்று நிரூபணம் பெறுவதற்கும் ஆர்வமும் அவை அடைவதற்கான பயிற்சியும் அதை தொடர்வதற்கான வைராக்கியமும் மட்டுமே தேவை என்று நம்முடைய ஆன்மீக முன்னோர்கள் கூறுகின்றனர்...

 

       அறிவுத்திறனும் தெளிவும் புரிதலும் இந்த பிரபஞ்சத்தில் இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்துவமானது...

 

   ஒரே மாதிரியான பள்ளியில் படித்து ஒரே பாடத்திட்டத்தை படித்து தேர்வு எழுதும் மாணவர்கள் கூட அவரவர்கள் புரிந்து கொண்டதற்கு ஏற்ப தேர்வினை எழுதுகிறார்கள் மதிப்பெண்களை பெறுகிறார்கள்...

 

                 ஆக எல்லோரோலும் சரியாக 100 மதிப்பெண்களை எடுக்க முடியுமா என்றால் முயற்சி இருந்தால் மந்த நிலை உடைய மாணவனும் நூற்றுக்கு நூறு எடுக்க முடியும் என்பது போல சரியான அளவிலான முயற்சி உடையவர் யாராக இருந்தாலும்  அந்த முழுமையை அறிய முடியும் என்பது தான் நிரூபணமான உண்மை...

 

     ஆக இந்த பிரபஞ்ச இயற்கையை ஸ்தாபித்த மற்றும்  இந்த இயற்கையின் தோற்றத்திற்கும் இயக்கத்திற்கும் பின்னால் இருக்கின்ற அந்த உண்மையை நாம் அறிய வேண்டுமானால் அதற்கான சாத்திய கூறுகளாக குறிப்பிடப்பட்ட சாஸ்திரங்களால் குறிப்பிடப்பட்ட வழிகளில் பயணிப்பதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்......

 

   காற்றை கண்ணால் காண முடியவில்லை ஆனால் அது அதிக அழுத்தத்துடன் வீசும் போது நமது உணர்வால் அவற்றை நாம் உணர முடிகிறது.காண முடியவில்லை என்ற காரணத்திற்காக காற்று இல்லை என்று சொல்ல முடியாது. இது போல இதை விட மேலான உதாரணங்களை நாம் எடுத்துக் கூற முடியும்..........

    புரிந்து கொள்ள முடியவில்லை அதற்கு தயாராக இல்லை என்ற காரணத்தினால் கடவுள் இல்லை என்றும் சொல்ல முடியாது.‌‌..

   ஆக வெறும் நம்பிக்கையாக மட்டுமில்லாமல் அவற்றை அடைவதற்கான யுக்திகளை விஞ்ஞான பூர்வமாக உள்ளதா என்றால் அந்த வழியிலும் நமது முன்னோர்களான ரிஷிகள் பாடுபட்டு இந்த இயற்கை என்று சொல்லக்கூடிய இறைவனிடமிருந்தே அதற்கான வழிகளை பெற்றிருக்கின்றனர்.அதைத்தான்   முந்தைய பதிவில் அந்த வழிகள் என்று சொல்லக்கூடிய ஆறு தரிசனங்களை நாம் வரிசையாக பார்த்தோம்...

    அவற்றிலே எந்த காலகட்டத்திற்கும் மனிதனுக்கு பொருத்தமான தீர்வினை உடைய வழியை உடைய பதஞ்சலி யோக சூத்திரத்தை அதன் தொடர்ச்சியான விளக்கங்களை நாம் தொடர்ந்து காண போகிறோம்...

   நாங்கள் புரிந்து கொண்ட வழியிலே அவற்றை உங்களுக்கு கூற முயற்சிக்கிறோம் முடிந்த அளவுக்கு எளிமைப்படுத்த முயற்சிக்கிறோம்... 

            தன்னை அறிதல் என்பது எல்லா துயரங்களுக்கும் முழுமுதலான விடுதலை. அந்தப் பாதையில் வருவதற்கு பூர்வ புண்ணியம் செய்திருக்க வேண்டும்...

           ஆக அதைப்பற்றி அறிந்து கொள்வதற்கும் அதை பின்தொடர்வதற்கும் அதை முயற்சிப்பதற்கும் ஆர்வமும் வைராக்கியமும் வேண்டும்...

   நமக்கு ஆர்வம் இல்லை என்பதற்காக ஒரு விஷயத்தை உண்மை இல்லையே ஒரு விஷயத்தை முற்றிலும் புறக்கணிப்பது என்பது மடமைத்தனம்...

 

பதஞ்சலி யோகம் என்பது முற்றிலும் நிரூபண சாத்தியம்..

 

    அவற்றை ஒரு சாதகன் என்பவன் பயிற்சியாளர் என்பவன் குறிப்பிட்ட காலங்கள் கடைபிடித்து வரும்போது அவனில் ஏற்படும் சில மாற்றங்களை அவன் சந்திக்கும் சில நிரூபணங்களை அவன் அதை தொடர்வதற்கு போதுமானதாக இருக்கும்...

 

தொடரும் ...

 

 

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment