Tuesday, August 29, 2017

விடியலை நோக்கிய பயணம் ( பாரதி ஆதரவற்றோர் அன்பு இல்லத்தில் நாம் )


                                         


                                    இது நாள்வரை பள்ளி , கல்லூரி மற்றும் பல அரங்கங்களில் யோகா முகாம் நடத்தியுள்ளோம். இந்த முறை சற்று வித்தியாசமாக மதுரை பைக்காரா பாரதி ஆதரவற்றோர் அன்பு இல்லத்தில்  உள்ள வயதானவர்களுக்கு நடத்துமாறு ஆச்சாரியார் கேட்டுக் கொண்டார். அதன் படி இரண்டு நாட்கள் வயதானவர்களுக்கு ஏற்ற சில பயிற்சிகளையும், வயோதிகத்தை எதிர்கொள்வதற்குரிய தன்னம்பிக்கை வளர்ப்பையும் பற்றி கமலக்கண்ணன் அவர்கள் விளக்கினார்.






இங்கே இருக்கின்ற பல வயதானவர்கள் தங்களுடைய பிள்ளைகளால் கைவிடப்பட்டு உடல் முடியாத சூழ்நிலையில் ஏன் இன்னும் சொல்லப் போனால் குறைந்த தூரம் கூட நடக்க முடியாத சூழ்நிலை நெஞ்சை கசக்கிப் பிழிந்து கண்ணீர் வரச் செய்யும் ஒன்றாகும். 



    
            இந்தச் சூழ்நிலையில் இவர்களை முடிந்த அளவு சிறப்பாகவே பராமரித்து வருகின்றனர் பாரதி முதியோர் இல்ல நிர்வாகிகள் . அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுக்கிறார்கள். ஆனால் அந்தச் சூழல் இன்னும் மேம்பட வேண்டும். அதற்காக முடிந்த முயற்சிகளை நமது ஸ்வார்த்தம் சத் சங்கத்தின் மூலமாக வருங்காலத்தில் மேற்கொள்வோம்.




            பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தர்மத்தின் படி வாழ அந்த தர்மத்தை கற்றுக் கொடுப்பதே முதல் கடமையாக வைத்துக் கொள்ள வேண்டும். தர்மம் எதுவென்றே அறியாமல் வளர்க்கப் பட்ட குழந்தைகள் கடைசிகாலத்தில் தங்கள் பெற்றோரை முதியோர் இல்லத்தில் தான் கொண்டு போய் விடும்.


         என்னுடைய மகனோ மகளோ ஒரு இன்ஜினியர் ஆக வேண்டும், டாக்டர் ஆக வேண்டும் என்று லட்சியம் வைத்து வளர்ப்பதை விட என்னுடைய பிள்ளை ஒரு நல்ல தர்ம சிந்தனை உடையவனாக இந்த சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் என்றும் நன்மை செய்பவனாக வளர வேண்டும் என்ற உறுதியை அனைத்து பெற்றோர்களும் மனதளவில் ஏற்க வேண்டும். அது அனைவருக்கும் நன்மை பயக்கும்.


யோகா என்றாலே கை கால்களை அசைப்பது மட்டுமல்ல . நல்வழியில் செல்லுமாறு மனிதனின் உள்ளத்தை அசைப்பதாகும்.


ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு அனுபவம். இந்த வயதான பெரியவர்களின் ஆசி எங்களுக்கு ஆயிரம் யானை பலத்தை போன்றதாகும். அது வாழ்வில் பல நல்ல காரியங்களை செய்ய உதவும்........................


என்றும் அன்புடன் 
யோகா.கமலக்கண்ணன்- சிவ. உதயகுமார்

1 comment:

TRANSLATE

Click to go to top
Click to comment