கேள்வி 2-
( சீடர் சிவ ஞானம் எழுப்பிய கேள்வி) யோக சூத்திரங்களை பற்றி சுருக்கமாக
கூறுங்கள்.????????
பதில் – மிகப் பெரிய விஷயத்தை சுருக்கமாக கூற கேள்வி எழுப்பியிருக்கிறாய் சிவஞானம்.
இருந்தபோதிலும் குருவருளால் பதில் கூற முயற்சிக்கிறேன்
சூத்திரம் என்றாலே பல்வேறு விஷயங்களை உள்ளடக்கி அதை சுருங்க
கூறியிருப்பது.
thanks to http://jigyaasaa.files.wordpress.com |
ஒரு விஷயம் பற்றிய கரு
சூத்திரம்.
இன்று ஸ்ரீ பதஞ்சலி யோக சூத்திரம் பற்றி மிக குறுகிய காலத்தில் கூறுவதாக ஏற்கனவே சொல்லியிருந்தேன் . எனது முயற்சிக்கு சத்குரு வழி காட்டட்டும்.
இன்று ஸ்ரீ பதஞ்சலி யோக சூத்திரம் பற்றி மிக குறுகிய காலத்தில் கூறுவதாக ஏற்கனவே சொல்லியிருந்தேன் . எனது முயற்சிக்கு சத்குரு வழி காட்டட்டும்.
சமாதி பாதம், சாதனா பாதம்,
விபூதிபாதம், கைவல்ய பாதம் என்று 4 பாதங்களில் 196 சூத்திரங்களை அறிவுபூர்வமாக பிரிக்கப்பட்டிருப்பது இதன் தனிச்சிறப்பாகும்.
இயமம்,நியமம்,ஆசனம்,பிராணாயாமம்,பிரத்யாஹாரம்,தாரணை,தியானம், சமாதி என 8 அங்கங்களை கொண்டதால் அஷ்டாங்க யோகம் என்று பெயர் பெற்றது.
இயமம் என்றால் சாஸ்திரம் கூறும் நெறியின் படி உலகியல் வாழ்க்கையில் தர்மத்தை
கைக்கொள்ள முடிவு செய்வது.
நியமம் என்றால் அந்த முடிவின் படி தவறாமல் நடப்பது
ஆசனம் என்றால் மனித உடலின் வெளி அங்கங்களை (சரீரம் உட்பட ) பயன்படுத்தி
உள் அங்கங்களை பலப் படுத்தும் பயிற்சி.
பிராணாயாமம்
எனில் சரம் ,கலை, நாடி என பல பெயர்கள் கொண்ட பிராண வாயுவை
மூச்செடுத்து ,மூச்சடக்கி ,மூச்சுவிடல் என்ற மூச்சுக் கட்டுபாட்டு பயிற்சி ஆகும்.
பிரத்யாஹாரம்
எனில் புலன்களை ஒருமுகப் படுத்துவது. புலன்களை செயல்படாமல்
தடுப்பது அல்ல. புலன் செயல்பாட்டை தடுக்கிற போது மனிதன் உயிர்வாழ முடியாது .
தாரணை
எனில் தியானப்
பொருளை நிலைப் படுத்துவது
தியானம்
எனில் அவ்வாறு நிலைப்பாட்டில் உள்ள பொருளை சிறிதும் அசையாது
கவனித்தல் .
சமாதி
எனில் காட்சி,
காட்சிப்பொருள் ,காணுபவர் இம்மூன்றும் வேறின்றி ஒன்றாக்கி பேரமைதியில் மனம்
ஆட்படுவது.
உயிர் தனது
இயற்கை நிலையான இன்பத்தில் இருப்பது தான் சமாதி. சுயத்தில் விளங்குவது . சூத்திர
எண்ணிக்கையை குறிப்பிட வேண்டும்.
51 சூத்திரங்களை கொண்ட முதல் பாதமான சமாதிபாதம் யோகத்தை
பற்றி பொதுவாகவும், யோகத்தின் வழிமுறைகளையும் விளக்குகிறது.
மனது என்ற சோதனைக்கூடத்தில் செய்து பார்க்கும் சோதனையே யோகப்பயிற்சியாகும்.
55
சூத்திரங்களை கொண்ட 2வது பாதமான சாதனா பாதம் ஏன் யோகத்தைப் பயில வேண்டும் என்று விளக்குகிறது.
மேலும் இயம நியம, ஆசன ,பிராணாயாம ,பிரத்யாகாரம்
என்ற 5 படிகளும் வெளிமனதை மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறுகிறது.
56 சூத்திரங்களை கொண்ட 3வது பாதமான விபூதி பாதத்தில் தாரணை,தியானம்,சமாதி என்ற 3 படிகளும் மனித
மனத்தின் உட்புறத்தை யோக வாழ்விற்குத் தயார் செய்கிறது.இதனால் யோக சாதகர்களுக்கு
பலப்பல வெற்றிகள் கிடைக்கின்றது.
தன்மனதை கட்டுப்படுத்துகின்றவன் இறுதியில் என்னை அடைந்து என்னிடம் மட்டுமே உள்ள விசேஷ ஆன்ம சாந்தியினை அவன் அடைகின்றான் என்று கீதையில் கண்ணண் கூறுகிறார்.
தொடரும் ............
No comments:
Post a Comment