Saturday, August 30, 2014

கேதுவின் நாயகராய ஞான அரசாளும் சத்குரு பதஞ்சலி மகரிஷி


ஞானசபை-நம்மை ஆளும் நவ கிரஹங்கள்- பகுதி 13



அன்புள்ளம் கொண்ட ஆன்மீக அன்பர்களுக்கு மீண்டும் ஒரு முறை எனது பணிவான வணக்கத்தை சமர்ப்பிக்கிறேன்.


  நவ கோள்களின் அதிதேவதைகளாய் ஆட்சி செய்யும் ரிஷிகளின் வணக்க ஸ்லோகங்கள் எனும் அஷ்டோத்திரத்தை வரிசையாக பார்க்கிற பாங்கிலே இன்று இறுதியாக ஞானக் கோள் என்று அழைக்கப்படும் கேதுவின் நாயகராய் விளங்கும் சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் அஷ்டோத்திர மந்திரங்களை பதிவிடுவதில் உள்ளம் உவகை கொள்கிறேன்.

அவர் நமக்குரியவர் என்ற வகையில் நமது உள்ளங்கள் மகிழும் அருட்குருவாம் சத்குரு பதஞ்சலி மகரிஷியைப் பற்றி இங்கே விளக்கத் தேவையில்லை. இந்த வலைத்தளமே அவருடைய பெயரால், அனுக்ரஹத்தினால் நடைபெறுகிறது. 

மனித உயிர்கள் ஞானம் பெரும் பொருட்டு யோக சூத்திரங்களை அனைவருக்கும் படைத்த பதஞ்சலி மகரிஷி அவர்கள் ஞானத்தின் சொரூபமாய விளங்குகிறார் என்றால்  மிகையல்ல. சத்குரு பதஞ்சலியை துதி செய்தோம் என்றால் அவர் கேதுவின் கெடுவினைகளை குறைத்து நமக்கு ஞானம் கிடைக்க அருள் செய்வார் 



இனி அவருடைய அஷ்டோத்திரங்களை பார்ப்போம்.


    சத்குரு மகரிஷி ஸ்ரீ பதஞ்சலி




ஓம் தேவ ஸிம்ஹாஸநாதிபாய  நம :
ஓம் விவாத ஹந்தரே நம :
ஓம் ஸர்வாத்மநே  நம :
ஓம் காலாய  நம :
ஓம் கால விவர்ஜிதாய  நம :
ஓம் விஸ்வாத்தாய நம :
ஓம் விஸ்வ கர்த்ரே நம :
ஓம் விஸ்வேஸாய நம :
ஓம் விஸ்வகாரணாய நம :
ஓம் யோகி சயேயாய நம :  


ஓம் யோக நிஷ்டாய நம :
ஓம் யோகாத்மநே  நம :
ஓம் யோக வித்தமாய  நம :
ஓம் ஓங்கார ரூபாய  நம :
ஓம் பகவதே  நம :
ஓம் பிந்து நாதமயாஸிவாய நம :
ஓம் சதுர்வர்க்க பலப்ரதாய   நம :
ஓம் பட்டபாத விவர்ஜிதாய  நம :
ஓம் ஓங்கார வாசகாய நம :
ஓம் ஸங்கராய நம :


ஓம் த்ரிலோக மோஹநாய நம :
ஓம் ஸம்பவே   நம :
ஓம் ஸ்ரீமத் கணநாதஸீதாந்  விதாய  நம :
ஓம் அற்புத ஆநந்தவராய நம :
ஓம் இஷ்டா பூர்த்திப் ப்ரியாய நம :
ஓம் ஏக வீராய நம :
ஓம் ப்ரியம்வதாய நம :
ஓம் ஓங்காரேஸ்வர பூஜிதாய  நம :
ஓம் ருத்ராக்ஷ ரூபாய  நம :
ஓம் கல்யாண ரூபாய நம :


ஓம் அதிராகினே நம:
ஓம் ருத்ராக்ஷ வக்ஸஷே நம:
ஓம் வீர ராஹினே நம:
ஓம் ராக கேதவே நம:
ஓம் விராக விதே நம:
ஓம் ராஹக்நே நம:
ஓம் ராக ஸமநாய நம:
ஓம் ராகதாய  நம:
ஓம் ராகிராகவிதே  நம:


ஓம் மநோந்மயாய  நம :
ஓம் மநோரூபாய நம :
ஓம் வித்யாகராய  நம :
ஓம் மஹாவித்யாய நம :
ஓம் வஸந்தேஸாய நம :
ஓம் ஸரநந்தாய நம :
ஓம் கீர்த்தி கராய நம :
ஓம் கீர்த்தி ஹேதவே   நம :
ஓம் மஹா தீராய நம :
ஓம் தைர்யதாய  நம :


ஓம் விக்ஞாநமயாய  நம :
ஓம் ஆனந்த மயாய  நம :
ஓம் ப்ராண மயாய நம :
ஓம் அன்னகாய   நம :
ஓம் துஸ்வப்ந நாஸநாய  நம :
ஓம் மர்மஞ்ஞாய  நம :
ஓம் யுகாவஹாய நம :
ஓம்  யுகாதீஸாய  நம :
ஓம் யுகாத்மநே நம :
ஓம் யுகநாயகாய நம :


ஓம் ஜங்கமாய நம :
ஓம் புண்ய மூர்த்தயே நம :
ஓம் கேதவே   நம :
ஓம் ஸிரோமாத்ராய  நம :
ஓம் நவக்ரஹயுதாய நம :
ஓம் மஹா பீதிகராய  நம :
ஓம் சித்ரவர்ணாய நம :
ஓம் பிங்களாக்ஷகாய நம :
ஓம் ரக்த நேத்ராய  நம :
ஓம் சித்ர காரிணே  நம :


ஓம் மஹா ஸுராய  நம :
ஓம் வரஹஸ்தாய  நம :
ஓம் சித்ரவஸ்த்ர  தராய  நம :
ஓம் சித்ர ரதாய நம :
ஓம் ஜைம் ஸ்ரீ கோத்ரகாய நம :
ஓம் நாகபதயே நம :
ஓம் நாகராஜாய  நம :
ஓம் தக்ஷிணா முகாய நம :
ஓம் லம்பதேவாய  நம :
ஓம் க்ருஹகாரிணே நம :


ஓம் மஹா சீர்ஷாய நம :
ஓம் வைடூர்யாபரணாய நம :
ஓம் மந்தஸகாய நம :
ஓம் அத்ருஸ்யாய நம :
ஓம் காலாக்நீ  ஸந்நிபாய  நம :
ஓம் ஸுக்ர  மித்ராய  நம :
ஓம் அந்தர் வேதீஸ்வராய   நம :
ஓம் சித்ரகுப்தாத்மநே   நம :
ஓம் துரியே ஸுகப்ரதாய  நம :
ஓம் ஸாம்பவாய  நம :


ஓம் அநங்காய   நம :
ஓம் க்ஞான தீபாய    நம :
ஓம் ஸகநிதயே   நம :
ஓம் ஸுகராரிபிதே   நம :
ஓம் மாந்யாய  நம :
ஓம் புராணாய  நம :
ஓம் புண்யகருதே  நம :
ஓம் ஜிஷ்ணவே  நம :
ஓம் பக்த ஜீவிதாய   நம :
ஓம் விஸ்வ நேத்ரே   நம :



ஓம் ஸிவப்ரியாய  நம :
ஓம்  குரு பூதாய         நம :
ஓம்  மஹா கல்பாய   நம :
ஓம்  யோக ஸுத்ராய          நம :
ஓம்  ஆநந்த தாண்டவ பூரிதாய    நம :
ஓம்   ஸாஸ்த்ரே ரூபிணே          நம :
ஓம்   வஜ்ரிணே            நம :
ஓம்   ஸரண்யாய         நம :


ஓம் ஸ்ரீ பாரதி தேவி ஸமேத ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி ப்யோ நமோ நமஹ





இந்த சமயத்தில் முன்பொரு முறை ஜீவ நாடியின் மூலமாக மகரிஷியின் அஷ்டோத்திரங்களை நமக்குத் தந்த நாடி நூல் நாவலர். திரு.வி.எம். செல்லத்துரை அவர்களுக்கும் இந்த பதிவுகளுக்காக படங்களை நமக்களித்த அகத்தியர் ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும் மனமார்ந்த  நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த பதிவுகளில் ஏதேனும் பிழை, குற்றம் குறை இருந்தால் அவை  பதிவு செய்பவனாகிய என்னை சார்ந்தது.  இறைவனும் அவரது அடியார்களும் பிழை பொறுத்து என்னை மன்னிக்கட்டும் .


மீண்டும் அடுத்த பதிவுகளில் சந்திப்போம் 

நன்றி 
சிவ.உதயகுமார் 
















    

1 comment:

  1. இந்த மகரிஷிகளின் அஷ்டோத்த்ரங்கள் பற்றிய தொகுப்பு எல்லாம் மிகவும் பயனுள்ள பதிவுகள். இப்படிப்பட்ட தொகுப்பை பகிர்ந்துக் கொண்டதற்கு மிக்க நன்றிகள். இறைவன் தஙகளுக்கு எல்லா நலன்களையும் வழங்க பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete

TRANSLATE

Click to go to top
Click to comment