Tuesday, December 31, 2013

கல்பத்தரு (வரங்களின் தினம் இன்று )


பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் 

சத்குரு, சித்தர்கள், கல்பதரு, மகான்


அவர், பக்தரா ? ஞானியரா ? இல்லறத்தாரா ? துறவியா ? ஆணா? பெண்ணா ? எழுத்தறிவித்தவரா ? எல்லாம் அறிந்தவரா ? சைவரா ? வைணவரா ? சாக்தரா ? வேதாந்தியா ? சாதாரண மனிதரா ? அசாதாரண மனிதரா ?
இப்படி ஒன்றுக்கொன்று முரண்பாடாகத் தோன்றுகிற அல்லது இவையாவும் ,ஒருங்கிணைந்த ஒருவர்தான் , 
ஸ்ரீ ராம கிருஷ்ணர்  பரமஹம்சர் .


அவதார புருஷர்கள் இந்த உலகிற்கு ஒரு செய்தியுடன் வருகின்றனர். அவர்கள் வாழும்போது அவர் வாழ்கின்ற காலங்களில் அவரோடு இருக்கும் ஒரு சிலரால் மட்டுமே அடையாளம்கண்டு கொள்ளப்படுகிறார்கள். அவர்கள் தன் எந்த சக்தியையும் அடைந்த பக்குவத்தையும்  வெளிக்காட்டிக் கொள்ளாமல்அனைவரோடும் வித்தியாசமின்றி கலந்து பழகி வாழ்கிறார்கள்.

அவர்கள் மறைந்த பின் அவர்களின் வாழ்வும் அவர்களின் செய்தியும்,புதுவேகத்துடன் பொங்கி எழுந்து உலகை ஆட்கொள்கின்றன. ஆன்மீகம், சமயம், சமுதாயம், அரசியல், பொருளாதாரம் , கலை ,விஞ்ஞானம்  என்று ஒவ்வொரு துறையிலும் அவை புகுந்து , ஒரு புதிய பரிமாணத்தை கொடுக்கிறார்கள்.

வந்ததைச் சொல்வார்கள் ,வரப்போவதை முன் கூட்டியே சொல்வார்கள் ,பல்வேறு மானுட எதிர்பார்ப்புகளில் வராதவற்றையும் சொல்வார்கள்.

அந்தரங்க சுத்தியோடு, அன்போடு,நம்பிக்கையோடு அவரை ஊடுருவப்பார்ப்பவர்களுக்குச்(சொல்லாமலும் )புரியவப்பவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களை நீங்களும் முயன்று அறிந்து கொள்ளுங்கள்,

ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு -இளைஞர்கள்,இல்லறத்தார் என்று இரு வகையிலும் சீடர்கள் இருந்தார்கள்.

இளைஞர்கள் வரிசையில்  
                                         


நரேந்திரர் ,ராக்கால், பாபுராம், சரத் ,சசி, தாரக், லாட்டு, மூத்த கோபால், நிரஞ்சன்,யோகின், கங்காதரன், சாரதா பிரசன்னர், ஹரி , சுபோத், காளிபிரசாத், ஹரி பிரசன்னர் என்று சிலர் துறவிகளாயினர்.

இவர்களுள் நரேந்திரர் முக்கியமான சீடர். இவரே பின்னாளில் சுவாமி விவேகானந்தர் ஆக உலகம் போற்றும் துறவியானார்.

இவர்களின் 

1) சீலம் 
2) தவம் 
3) யோகம் 
4) உழைப்பு 
5) தியாகம் 

 போன்ற பண்புகளும், குருதேவரின் போதனைகளாலும், அன்னை சாரதாதேவியின் வழிகாட்டுதலும், சேர்ந்துதான் இன்றைய ராமகிருஷ்ண மடங்கள் தோன்றி, உலகெங்கிலும் கிளைகள் விட்டுப் படர்வதற்கும், கல்விச் சாலைகளும் , மருத்துவக் கூடங்களும், நூல் நிலையங்களும், பல வேத ஆராய்ச்சி , வேதங்களின் விளக்கத் தொகுப்புகள் வெளிவரவும், அடித்தளமாக அமைந்தன.

இல்லறத்திற்கும், துறவறத்திற்கும் இலக்கணமாக வாழ்ந்து, வழிகாட்டி அவற்றுக் கென்று மாபெரும் பரம்பரையையும் விட்டுச் சென்றவர் . பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் .

அத்தகைய சிறப்புமிக்க ராமகிருஷ்ண பரமஹம்சர்முன்னொரு ஆண்டில் இதே தினம்தான்கேட்டதை எல்லாம்வரமாய் அருளும் கல்பதரு விருட்சத்தைப் போல தன்னுடைய அன்பர்கள் அனைவருக்கும் ஆன்மீக உயர்வு நிலைகளை வழங்கி அவரே கல்பத் தருவாய் விளங்கிய தினம் இன்று .

(தொடரும் )






 

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment