Thursday, August 15, 2013

இனியொரு விதி செய்வோம் - சாஸ்திரங்களின் கூற்று


                                                               
ஸ்வார்த்தம் சத்சங்கம், T.S. கிருஷ்ணன் , T.S.KRISHNAN


பூர்வ ஜென்மாவில் நாம் செய்த குற்றங்களுக்காக நாம் கஷ்டப்பட வேண்டும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.  ஆனால் அதற்காக வேறு வழியில்லாமல் மேலும் மேலும் குற்றங்கள் செய்யலாம் என்று பொருள் இல்லை. 


பார்க்கப் போனால்  நமது கஷ்டங்களை நாம் நமது முயற்சியினால் குறைத்துக் கொள்ள முடியும். இதையேதான் பாரதத்தின் தொன்மையான சாஸ்திரங்கள்  "பிராயச்சித்தம் "என்று குறிப்பிடுகின்றன.            

விதியை மாற்ற முடியாது என்றால் " பிராயச்சித்தம்" என்பது அர்த்தம் இல்லாமல் போய்விடும். 
                                                  

மகாபாரதத்தில் விதி என்பது ஒரு வயல் என்றும்,முயற்சி என்பது விதை விதைத்து பயிரிடுவதற்கும் ஒப்பானது என்றும் சொல்லப் படுகிறது.  மண்வளம் நன்றாக இல்லாவிட்டாலும் உரம் முதலியவைகளைக் கொண்டு நல்ல விளைச்சலை அடையலாம். அதைப் போல முயற்சியினால் நல்ல முடிவுகளைப் பெற முடியும்.



ஆனால் முயற்சியின் அளவை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது. சில சமயங்களில் அது கடின முயற்சிகளுக்கு அனுசரணையாகவும்  இருக்கவும் செய்யும்.சிலருக்கு மிகக்குறைந்த குறைந்த முயற்சி கூட வெற்றியைக் கொடுக்கலாம். ஆனால் அதற்காக  " எல்லாம் விதிப்படி நடக்கும்". என்று எந்த முயற்சியுமே செய்யாமல் இருந்து விட்டால்  விதி வெற்றியைக் கொடுக்க சந்தர்ப்பமே இல்லாமல் போய் விடும். 



விதி ஒருவனை ஒரு விதமாகவோ , வேறு விதமாகவோ நடக்கக் கட்டாயப் படுத்தாது . ஆனால் அப்படி நடக்கத் தூண்டும். இந்த நிலைகள் வரும்போது அதில் இருந்து மீளுவதற்காக அவன் விருப்பு வெறுப்புகளின் பிடியிலிருந்து விடுதலை பெற முயல வேண்டும். அப்போது அது அவனை நல்வழியிலே திருப்பிவிடும்.



ஒரு வெடியைப் பற்ற வைக்கும்போது அது வெடித்து பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதற்கு பதில் , புஸ்வாணமாகக் கூட மாற வாய்ப்பு உண்டு .            

இது  தவிர ,நாம் பிறக்கும்சூழ்நிலை வளரும்சூழ்நிலை , வளரும்போது அனுபவிக்கும் வாழ்க்கையின் தரம்நம் வசத்தில் இல்லை. 

அது போல நமக்கு  வரும் வியாதிகள் காயசித்த கர்மாக்களினால் தடுத்து விட முடியாது.  


குருஜி டி.எஸ். கிருஷ்ணன் 

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment