Saturday, August 31, 2013

பாண்டியர்கள் வரலாற்றுச்சுருக்கம் - 1

மதுரையை ஆண்ட மன்னர்கள் பலரும் தங்கள் காலத்தில் மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு பல பணிகளை செய்திருக்கின்றனர். அந்த ஆலயப் ப்பணிகளை ஒட்டியே அவர்களின் வரலாறும் விவரிக்கப்படுகிறது.

மீனாக்ஷி அம்மன் ஆலயம், சிவம், மதுரை
நன்றி - 123தமிழ் சாட்.காம் 


  கி.பி.ஐந்தாம்நூற்றாண்டின் இறுதி,கி.பி.ஆறாம்நூற்றாண்டின் காலகட்டங்களில் காஞ்சியப் பல்லவர் உதவியுடன் 'கடுங்கோன்' என்னும் பாண்டியன் களப்பிரர்களைப் வென்று கி.பி.590-ல் மதுரையைக் கைப்பற்றினான்.

கி.பி.640-ல் அபிகேசரி என்ற கூன்பாண்டியன் பட்டத்திற்கு வந்தான். மணிமுடிச்சோழனை வென்று அவரது மகள் மங்கையர்க்கரிசியாரை மணந்து கொண்டார். ஸ்ரீ மீனாட்ஷியம்மனுக்கும் (அக்கால அளவில் தான்) தனிச்சன்னதி அமையப்பெற்றதாக உள்ளது.

சமணமதம் தழுவிய கூன்பாண்டியனின் வெப்பு நோயைத்தீர்த்து வைத்தவர் திருஞானசம்பந்தர். அவர் தம் ஆழ்ந்த சைவத்தொண்டால், இறைத்திருவருளும் கூடி சைவம் தழைக்கச் செய்தார்.

பாண்டியன் நெடுஞ்செழியனால் கோவலன் கள்வன் என ஆராயது தீர்ப்பளித்தப் பின் உண்மை அறிந்து தன் தவறான தீர்ப்பின் காரணமாக, நீதி தவறியதை உணர்ந்து வருந்தி பட்டத்தரசியும், அவனும் உயிர்துறந்தனர். கண்ணகி மதுரையைத் தன்கற்புத்தீயொல் அழிந்ததனெனவும், இம்மன்னன் காலத்திய வரலாறு கூறுகிறது.


 கி.பி.640-கூன்பாண்டியன்,

கி.பி.670-கோச்சடைரணவீரன்,

கி.பி.765-நெடுஞ்செழியன் பாரந்தகன்,

கி.பி.792-குணமகாராஜன்,

கி.பி.833-சீமாரவல்லபன்,

கி.பி;.900-ராஜசிம்மன்,

 கி.பி.946-வீரபாண்டியன், பின் பாண்டியர்கள். சோழப் பேரரசிற்கு உட்பட்ட சிற்றாசர்கள் ஆயினர்.


கி.பி. 1070 முதல் கி.பி. 1081 வரை பின் பாண்டியர்களின் தனி ஆட்சி. கி.பி.1081 முதல் முதலாம் குலோத்துங்க சோழன், பாண்டியநாட்டின் தலைநகர் மதுரையைக் கைப்பற்றினான். 

இச்சோழனுக்கு கப்பம் கட்டியபடி பாண்டியன் சடையவர்ம குலசேகரன், பராக்கிரம பாண்டியனும் நாட்டை இரு பிரிவுகளாக்கி ஆண்டனர்.

 இவ்விரு மன்னர்களும் ஒருவரைஒருவர் பகை கொண்டு பலமுறை மோதிக்கொண்டனர். இதற்கு இடையில் பராக்கிரம பாண்டியன் இலங்கை அரசினிடம் உதவி கேட்டான். அவ்வுதவி வரும்முன் குலசேகரபாண்டியனால் பராக்கிரம பாண்டியன் கொல்லப்படுகிறான்.  இலங்கை அரசுப்படையின் உதவியால் குலசேகரபாண்டியன் தோற்கடிக்கப்பட்டு இறந்துபட்ட பராக்கிர பாண்டியனின் மகன் வீரபாண்டியனுக்கு முடிசூட்டி ஈழம் திரும்பினார்கள்.


பின், கி.பி.1167-சோழர் உதவியுடன் குலசேகரபாண்டியன் மீண்டும் ஆட்சி புரிகிறான். இம்மன்னன் காலத்தில் மதுரை திருக்கோவில் திருப்பணி வரலாறு பற்றி குறிப்புகள் எதும் காணப்படவில்லை.

 பின்னர் வந்த  மாறவர்ம குலசேகரபாண்டியன் காலத்தில் (கி.பி.1168 முதல் 1175 வரை) நடந்த திருக் கோயில் பணிகள், சொக்கநாத பெருமானின் சன்னதி, அர்த்த மண்டபம், மகா மண்டபம், பரிவார தெய்வங்களின் சன்னதிகள், புகழ்பெற்ற கோட்டை, அகழியும், கோட்டையைச் சுற்றி வெளியே நாற்புரமும் பெருமான், திருமால் கோயில், ஜயனார், சப்த மாதர், மற்றும் வினாயகர் ஆலங்களைக் கட்டுவித்திருக்கிறான். இத்தனையும் சிறப்புறச் செய்து முடித்த மன்னன் திருக்கோயிலுக்குக் குடமுழுக்கும் செய்திருக்க வேண்டும். ஆனால், வரலாற்றில் அக்குறிப்புகள் இல்லை.


   கி.பி.1216-1268-ல் மாறவர்மசுந்திர பாண்டிய மன்னனால் கிழக்கு ராஜகோபுரம், இம்மையில் நம்மை தருவார் கோயில், கபால்திருமதில், முதலியவைகளைக்கட்டி இருக்கிறான். இவரும் ஒரு குடமுழுக்கு விழா செய்யாமல் இருந்திருப்பாரா? ஆனால் குறிப்புகள் இல்லை.


 கி.பி.1253-1268-ல் விக்கிரமபாண்டிய அரசன் சித்தர் கோயில், சொக்கர் அட்டாலை மண்டபங்களை உருவாக்கி உள்ளார்.

 கி.பி.1268-1310-ல் மாறவர்மகுலசேகரபாண்டியன் ஸ்ரீ மீனாட்ஷி சோமசுந்தரர் திருக்கோவிலுக்குப் பலப்பல திருப்பணிகளைச் செய்துள்ளார். 
இவர் காலத்திலும் குடமுழக்கு நடைபெற்ற குறிப்புகள் இல்லை.(வரலாறு தொடரும் )

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment