Friday, December 7, 2012

சத்குரு மகரிஷி ஸ்ரீ பதஞ்சலியின் யோகதர்ஸன் (யோக தரிசனம் ) -பகுதி 2


மனது, ஆன்மாவாகி விடாது

.

மனது நினைவுகளும், உணர்வுகளும் கலந்த ஒரு ஜடப்பொருளே.

ஏனெனில் அது எப்போதும் மற்றொரு ஜடப்பொருளைத்தான் சார்ந்து இருக்கிறது.ஐந்து இந்திரியங்களுக்கு ஐந்து உணர்வுகளும் ஆறாவது புலனான மனது என்பது நினைப்பதற்கும், உணர்வதற்கும்,தீர்மானிப்பதற்கும். கண்ணில் படும் இப்புவியும், பிரஞ்சமும், ஜீவர்களுக்கு என்றும் நிலைத்தது போல் தோற்றமும், அதன் விளைவால் அவனது ஞான அறிவினை மழுக்கி மறைத்து வைத்துள்ளது.மேலும் நிலைத்தல் நிலையாமை கொள்கைகளையும் அறியவொட்டாது தடுத்து நிறுத்துகிறது.


இப்பிரஞ்சம் ஒரு தொகுப்பு அல்லது கலவை அதை தனித்தனியே பிரித்து விட்டால் பிரபஞ்சம் என்ற எதுவும் மிச்சமாய் இருப்பதில்லை.

பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் என்ன தொடர்பு? நாம் பார்க்கும் அனைத்து கூட்டு தொகுதியில் மனிதனுடைய தனி இடமும், பங்கும் என்ன? இப்படைப்பு முழுமைக்கும் மனிதனோடு என்ன தொடர்பு? மனிதன், தன்னை ஒரு மகத்  என உறுதியாக உணர்வானேயானால், பிரஞ்சத்துள் நான் அடக்கம் என்றால், அவனுள் பிரபஞ்சமும் அடக்கம் தானே பிரஞ்சப் பொருளால் ஆனவனால், பிரபஞ்சத்தில் அவனால் நிகழ்த்தக் கூடியது எது, அவனாலும் ஒரு பிரஞ்சத்தை படைக்க முடியாதா?

                    இரசாயனம், பௌதீகம், தாவர இயல், உயிரியல், வானியல், புவியியல், மன சாஸ்திரம், ஜோதிடம், மருத்துவம் இந்த ஒன்பதைப் பற்றியும் விஞ்ஞானக் கூற்றைக் கூறுவதாயின்


 இரசாயனம்: எந்த எவ்வெவ்வகையான எண்ணற்ற மூலப்பொருட்களால் எவ்வாறெல்லாம் ஒன்றுடன் ஒன்று கலந்து எண்ணற்ற ஜடப் பொருளை உருவாக்கியுள்ளவை என்றும்,


பௌதீகம்: எல்லாவிதமான சக்திகளும் Energy Different  இயற்கை விதிகளும்   (Nature of Law) இப்பிரபஞ்ச நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துகின்றன என்றும்,

தாவர இயல்:
           தாவர வர்க்கங்களில் எண்ணிக்கை மருத்துவ குணம், இயற்கைச் சுழலை மேம்படுத்துதல் மற்றும் பிரிவுகளை அதன் தன்மைக்கு ஏற்றவாறு ஆய்வு செய்கின்றன எனவும்,


 உயிரியல்:
                 ஜீவராசிகள் என்ற அனைத்து பிராணிகள் அவற்றின்; வகைகள் இனம், குணம் அவற்றின் எண்ணிக்கை போன்றவற்றையும், இயற்கைச் சங்கலி போன்ற இதர இயல்புகளையும், கூறுவதுபோல்,

புவியியல்:
                       பூமியின் மேற்புறத்தோற்றம் அதன் உட்புறத் தோற்ற்ம் உயிர்கள் தோன்றி வாழும் (உயிர்வாழி) கிரகம் மற்றும் அதன் இயற்கை வளம் அமைப்பு என்பதனை பற்றிக் கூறுவதுதாயும்,


வானியல்:-
            பழங்காலந்தொட்டு இன்றளவும் பேசப்படுகின்ற கோள்களையும் புதிதாய் கண்ணுற்ற (கண்டுபிடிக்கப்பட்ட) புதிய கோள்கள், நட்சத்திரங்களைப் பற்றி அவைகளின் பரிமாணம், ஒன்றுக்கொன்று கொண்டுள்ள இடைவெளி ஒன்றை ஒன்று சுற்றி வரும் பாதை அதற்கான காலம் மற்றும் அவற்றின ஈர்ப்பு சக்தி, வெளியேற்றும் சக்தி, அதனால் ஏற்படும் பாதிப்பு அல்லது பலன் இவ்வாறாய், பல்வேறு தகவல்களை சேகரித்து தருவதாயும், தொடர்ந்து ஆராயப்பட்டுவரும் முழு பிரபஞ்ச உண்மைகளை ஆய்ந்தறிய துடிக்கிற நிலையிலும் இவைகள், யாவும்  ஏனைய அனைத்து இயல்களும் மனிதத்தோடு எவ்வகையில் தொடர்புற்றிருக்கிறது, மாறுபடுகின்றன, பாதிக்கப்படுகின்றன, பலன் தருகின்றன என்றெல்லாம் பார்க்கும் போது விஞ்ஞானத்துடன் ஒரளவு சாஸ்திர சம்பந்தத்துடன் கூடிய ஜோதிட இயல், மன இயல், மற்றும் மருத்துவம், உடற்கூறு சாஸ்திரம் என்பதெல்லாம் படைப்பின் ரகசியங்களை வளரும் விஞ்ஞானத்தால் இன்றும் முழுமையாக கண்டுபிடிக்கபடவில்லை என்பதை விஞ்ஞானிகளே ஒத்துக்கொள்ளும் நிலையில் நாம் மெய் ஞானத்தின் தூண்டுதல்களால் யாவற்றிற்கும் ஒரு இறுதி வினா-விடையாக இறைவன் -உளன் ? ஏதோஒரு அடிப்படைப்பொருளாக, ஒரு இருப்பாக இருந்து கொண்டு,அந்த அடிப்படைப் பொருள்யாது எனக் காண இயலும் போது மேற்கண்ட ஒன்பது விஞ்ஞான ஆய்வுகள் தொடர்ந்து  செல்லாமல் நின்றுவிடுகிறது. அந்த அடிப்படைப் பொருளும் இந்தப் பிரபஞ்சத்தை மட்டுமல்லாது அதனுள் உயிருடன், அல்லது ஜடமாக இருக்கும் அத்தனையும் உண்டாகக் காரணமானது என்பதனை மெய்ஞானத்தால் யோகத்தின் வழியாக அறியப்பட்டது. எனும்போது  காலமயமான இறைவனைக் காண்பது அதே யோக ஆற்றலால் தான் என ஊகிக்கலாம்.                   பிரபஞ்ச பிரம்மாண்டங்களிலிருந்து பரமாணு வரை அப்பரமாணுக்குள் இருக்கும் அசைவுகள் வரை திட்டமிட்டபடி கால கதியில் இயங்கி வருவதால் நுண் நொடி முதல் பரார்த்தம் வரை காலத்தின் அளவுகள் விரிந்து கொண்டேதான் இருக்கும்; வஸ்துக்கள் (பொருட்கள்) பரிமாணங்களுடையது. பல தத்துவங்கள் வேகத்தின் அலகுகளை கொண்டது. (சத்தம், ஒலி, ஒளி) காலத்தின் நகர்வு அல்லது அலகுகள்(அளவைகள்) என்பது துவக்கம், முடிவு என இரண்டும் அதற்கு இல்லாததால் அதன் பரிமாணங்களாய் இருப்பது நடந்து முடிந்ததும் நடக்க இருக்கும் நிலைகளும் மட்டுமே. கால சக்கரத்தில் காலத்தின் அளவுகோல் பல உயிர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த, நிகழ்ந்து முடிந்த, நிகழ இருப்பதோடு சம்பந்தப்பட்டவையாகும். காலத்தின் உயிர்க் கடிகாரம் என்பதும் அதுவேயாகும்.


ஜீவன்கள் அக்கடிகாரத்தின்படி கால அளவுகளில் தத்தம் பணிகளைச் செய்து உரிய இடம் சென்றடைகின்றன. இவ்வாறே சிறு எறும்பும் அது வாழும் காலத்தில் (குறைந்த சில நாட்களில்) பரிபூரிண வாழ்வை முயற்சியால் முடித்தே செல்கின்றன. மனித வாழ்வின் பல வருட வாழ்க்கைச் செயல்கள் அதனுடைய குறுகிய வாழ்நாளில் செய்து ஒரளவு பூரண வாழ்க்கை பெற்று விட்டதாக எண்ணி வாழ்ந்து முடிக்கின்றன. உயிர்க் கடிகாரம் என்பது ஜோதிட தத்துவத்தின்படி 12 இராசிகளில் பின்னப்பட்டு இருக்கின்றன. ராசி எனில் உடல் எனவும், 12 உடல்கள் சேர்ந்து ஒரு ஜீவனின் உயிர்க்கடிகாரமாய் ஆகுகிறது.விரிவு:

மேஷம், விருச்சிகம், உடலுக்கு = அங்காரகன் என்ற செவ்வாய் ஆதிக்கமும்,

ரிஷபம், தூலம் என்ற உடலுக்கு =  சுக்கிரன் என்ற அசுர குருவின் ஆதிக்கமும்

மிதுனம், கன்னி என்ற உடலுக்கு = புதனின் ஆதிக்கமும்

கடகம் என்ற உடலுக்கு =  சந்திரனின் ஆதிக்கமும்,

சிம்மம் என்ற உடலுக்கு = சூரியனின் ஆதிக்கமும்

தனுசு, மீனம் என்ற உடலுக்கு =      குருவின் ஆதிக்கமும்,

மகரம், கும்பம் என்ற உடலுக்கு =  சனியின் ஆதிக்கமும் இருப்பதாக  ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஒரு ஜீவனின் உடலில் செவ்வாய் என்பது =  இரத்த சிவப்பணுக்களாகவும்,

குரு என்பது = வெள்ளையணுக்களாகவும்,

 புதன் என்பது =  பித்த நீராகவும்,

சந்திரன் என்பது =  இரத்த தட்டணுக்களாகவும்,

சுக்கிரன் என்பது =  விந்துவாகவும்,

சூரியன் என்பது =  எலும்பாகவும்,

சனி என்பது =  ரோம கால்களாகவும்,

இராகு, கேதுக்கள் =  நாளமில்லா சுரப்பிகளாகவும் செயல்படுவதாக ரிஷிகள் கூறுகின்றனர்.


 27 நட்சத்திரங்கள் அறிவு பலன் (விவேக பலன்கள்) எங்கு தோன்றுகிதோ அதன்படி அந்த ஜீவனின் அறிவு செயல்படுகிறது.

உடலுக்கு ஆதாரமான உயிர் எனப்படும் இலக்கினம், பூர்வாதாரம் ஆகும்.
இலக்கினமும், இராசியும் உயிர்க் கடிகாரத்தின் ஆதாரமாகும்.

ஜீவன்களின் உயிர்க் கடிகாரம் ஜீவாத்மாகும்.

கால சக்கரம் பராமாத்மாவாகும். கிரகங்களின் சுழற்சி கால மயமாகிறது.

இக்காலம் மனித வாழ்நாளில் ஒருவகை அங்கமாகிறது. இவ்வுடலைக் காப்பதற்கும் அதன் மூலம் ஆன்ம தரிசனம் கண்டு இறையானுபூதி  பெறுவதற்கும் யோகம் பேருதவியும் நிச்சயமான வழியுமாகிறது.

யோக பலன் அல்லது வெற்றி நிலையில் காலம் தனது முகவரியை இழக்கிறது எனவே அறிவு = பிரபஞ்ச முகமாய் பிரஞ்சத்தைச் சார்ந்தும் அறிவு, உடல் என்ற முகம் =  உடலை சார்ந்தது.

அறிவு என்ற (பேரறிவு) முகம் ஆன்மாவைச் சார்ந்ததாகிறது.

மேலும் விரித்து சொல்வதென்றால் அறிவு =  பிரபஞ்சப் பொருள் என்றும், பிரபஞ்சப் பொருள் பிந்து பொருள் என்றும், பிந்து பொருள் =  ஒளி என்றும் ஒளிப் பொருள் =  ஒலிப் பொருள் என்றும், ஒலிப் பொருள் =  உயிர், ஆன்மா என்றும் ஆகிறது. ஒளவைமுனி தன் ஞானக்குறளில் இதனை


          'எல்லா பொருளும் முடிக்கலாம் ஈசன் தன்
          தொல்லையருள் பெற்றக்கால்'
         
          அக்னி, சூரியன், சந்திரன், பிரணவக்கலை =  சாக்கிரம் என்ற நனவுநிலை.
நனவு என்பது =  சூட்சமம் என்ற உலகில் நனவு.

துறவு என்றால் தொடர்பு யாவற்றைவும் அறுப்பது.
மிளகாய்ச் செடியில் பச்சைநிற இலை முதல் மிளகாய்ப்பழம் என்ற சிகப்பு வரை பரிணாம வகை என சிறுசெடி, செடி, இலை, கொப்பு, பூ, பிஞ்சு, காய், பழம் என பல்வேறு தொடர்புகளையுடையதாக இருப்பினும் அச்செடியின் பழம் என்ற பலன் தரும் நிலையில் செடியின் தொடர்பு அற்றுவிடுகிறது.

இறைதொடர்பு எனில் யாவற்றையும் பெறுவது.

இவ்வுடல் இருக்கும்போதே சூட்சம தொடர்பும், ஆன்மாவின் உதவியால் இறை தொடர்பும் பெற்றிட வேண்டும். இவ்வகை நிகழ்வுகளைச் சொல்லுதல் எளிதெனிலும் விளக்குதலும், பயனடைவதும் சற்று கடினமே.

எனவே இதனை எளிமையாக்குதற்கு யோகமே நிச்சய வழி.

                   ஒரு மனிதன் தான் வாழ்ந்த காலத்தில் அவனின் உடலும், மனமும் பல்வேறு மாற்றங்களை கண்டிருக்கிறது. எனினும் அவனுக்கு சூட்டிய பெயரின் உள்ளேயிருக்கும் அவன் அவனாகவே இருந்திருக்கிறான். அவன் பருவங்கள்  குழந்தை, இளைஞன், நடுநிலைப்பருவம், பின் வயோதிகம் என்ற முதுமைப்பருவம் இவற்றையொல்லம் அவன் ஒவ்வொன்றாகக் கடக்கும் போது அவனின் மனமும், உடலும், ஒரே நிலையின்றி படிப்படியாக மாற்றங்களைக் கொண்டதாக தொடர்கின்றன.


ஆண், பெண், இருபாலருக்கும் பொதுவானதாகவும் அந்தந்த பருவத்திற்கு உரிய நிலையிலும் மனத்தின் செயல்பாடுகள் மாற்றங்களைப் பெற்றது. இதை உணர ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் யோக சூத்திரத்தினைப் பின்பற்றி வரும் சாதர்கள் நன்கு உணர தலைப்பட்டபின் அவர்கள் மனமும் உடலும் ஒரு சாதனை அல்லது அதன் மூலம் மேல்நிலை  அடைந்து மானுடத் தத்துவங்களில் உடல், மனம் என்பதிலிருந்து விலகுவது போல் அதே சமயம் அதன் உதவியால் இவ்வுடலில் சாராது உடலின் மாற்றங்கள் மனதை சாராது. அவனுள் இருக்கும் ஆன்ம உடலில் அவனது சுயம் பாதிக்கப்படாமல் இருக்கவும், அவனுடைய நிஜ அடையாளம் என்றும் மாறாமல் பிறந்ததுபோல் இருந்தேன். அவனாகவே இன்றும் இருக்கிறேன். என் உடலால் மனதால் நிகழ்வுற்ற அத்தனை நிகழ்வுகளும் என்னுள்ளிருந்து விலகி நான் ஒரு சாட்சியாக மட்டும் இருப்பதை உணர்கின்றேன் .

நான் ஆணோ, பெண்ணோ, அலியோ அல்ல.

 பிறப்பில் சம்பந்தப்பட்ட எந்த அடையாளமும் என்னுடையதில்லை.
நிர்மலமான பளிங்கு போல் தெளிந்த நிலை விஷய சம்பந்தத்தால் பல நிறங்கள்  தோன்றியது போல் இருப்பினும் அதில் எதையும் கலக்க முடியாத, மாற்ற முடியாத முழு நிறைவுடைய சுத்த அறிவோடு இருக்கின்ற பூரிபூர்ணத்தின் அங்கமாய் உள்ளேன்.

ஒலியாகவும் ஒளியாகவும் உருவாகவும் இருப்பதலொல்லம் காண்பதலொல்லம், உணர்வதலொல்லம் இறைவனுடைய அங்கங்களே என புரிந்துக் கொண்டு என்றும் மாறாது என்றும் புதிதாக என்றும் ஒரே மாதிரியாக இருக்கின்றன

இறைவன் அமைத்து தந்த சங்கேதம் என்னென்றும் சாஸ்திரங்களில் பேசப்படுகின்ற ஒலியானது பிரவணமே அதுவென்று உணர்ந்து பிரணவப் சப்தம் என்பது இறைவனின் பெயர் என ஆய்ந்து  அறிந்து கொண்டேன்.
'அம்மா' என்ற சப்தம் கேட்டவுடன் அந்தத் தாய் மகிழ்வதுபோல் 'ஓம்' என்ற சப்தம் இறைவனை மகிழ்விக்கும் மந்திரமாய் உள்ளது என்பதையும், அதுவே இறைவனது பெயர் என்றும் அறிந்தேன்.


                   'தஸ்ய வாசக: பிரணவ:
                  

          பிரணவ என்ற சொல், தஸ்ய =  அந்த இறைவனுக்கு, வாசக =  பெயராகும். எனவே சமாதிநிலை பேரமைதியில் பிரணவ ஞான ஒங்காரத்தினுள் சென்று ஒங்கார வடிவினைக் கண்டு ஒங்காரமாகவே மாறி ஒங்காரத்தினுள் உட் கலந்துவிடுவோம். யோக தர்ஸன் இதுவாய்த் தானிருக்கும் ஓம் சற்குருபாதம் போற்றி போற்றி.


                   குருவழியே ஆதிஆதி
                   குரு மொழியே வேதம் வேதம்
                   குரு விழியே தீபம் தீபம்
                   குரு பதமே காப்பு காப்பு...தொடரும்குருஜி   


No comments:

Post a Comment

TRANSLATE