Tuesday, July 5, 2011

ஒளி அன்னையை போற்றுவோம் -1

                    
                                         காயத்ரி மஹா மந்திரம்
              


மந்திரங்களுட் தாயென காயத்ரி மகா மந்திரத்தை பெரியோர்கள் போற்றுகின்றனர்.     அவர்கள் கடவுளை இப்பிரபஞ்ச நாயகனை பேரொளியாகவும் துதிப்பார்கள்.  பேரண்டங்களில் உருவமற்றது என்று ஒன்றுமில்லை. விஞ்ஞானம் இந்த கூற்றை ஒப்புக்கொள்கிறது .




மெய்ஞானமோ உருவத்தை உருவம் என்றும்,  அருவம் என்றும் கூறுவதோடு இறைவனையும் உரு என்றும், அரு என்றும் , அரு உரு என்றும் ஒரு படி மேலாக சென்று 3 நிலைகளில் காண்கிறார்கள். எனவே இறைவனுக்கும் உரு (உருவம் ) இருக்க வேண்டும். 


அந்த உருவின் பரிமாணங்கள்  எத்தகையது  என்பது மட்டும் சாமான்யர்களால் கூறவோ, அறிந்திடவோ , புரிந்து கொள்ள இயலாது என்றும் மெய்ஞான வழக்கில் உள்ளதாகும் . 

இதன் உண்மை என்னவென்றால் கண்ணால் காண்கின்ற  அல்லது காண முடியாத  பெரிய பொருட்கள் முதல் சிறிய பொருட்கள் வரை மிகச்சிறிய அணுச் சேர்மானமே அவற்றின் அடிப்படை .

உரு உள்ளதை அகமாவோ, புறமாகவோ காண முடியாத போது , நினைவில் எண்ண விருத்தியால்  காண்கின்ற போது தான் அது அருவாகி விடுகிறது . 

மற்றும் புறமாக பார்க்கக் கூடிய எதையும் ஒளியின் உதவியின்றிப் பார்க்க முடியாதல்லவா?  '

இருளில்  நமது கண்கள் எதையும் புலப்படுத்துவதில்லை  என்பதும் உண்மையல்லவா ? 

கட்புலன் காணும் திறமை பெற்றிருப்பினும் ஒளியின் உதவியின்றி அதனைக் காண முடியாது என்பதும்  உண்மையல்லவா ?


எனவே  ஒளி என்பது இல்லாதவரை அகப்பொருள்,புறப்பொருள் இரண்டும் அற்றதாகி விடுகிறது.  

அறிவினை, ஞானத்தை ஒளிஎன்றே கூறுவதோடு  அந்த ஒளிக்கு அவ்வொளிக்கு வணக்கம் செய்வதை தொன்று தொட்டு,   இன்றளவில் இருக்கும் பண்பாகும் 

இறைவனையும், இறை அருளையும் ஒளி வடிவாகவே வணங்குவது ஞானியர்களின் பண்பு .

காயத்ரி மந்திரம் விஸ்வாமித்திர மகரிஷியால் உருவாக்கப்பட்டது என்பதோடு மேலான அறிவினை விளக்கி இந்த பிரபஞ்ச நாயகனை அறிவதற்கு துணை செய்யும் மொழியினை போற்றுவது அடிப்படை பொருளாகும்.
                                                                      
அதன் அடிப்படையில் கடவுளரையும் , சித்தர்களையும், பலப்பல ரிஷிகளையும் , தேவர்களையும் , அவரவர் பெயர்த் தொகுதியோடு  காயத்ரி மந்திரத்தின் பகுதி, விகுதியினையும் சேர்த்துத் துதிப்பது சிறந்த வழிபாடாகும். 

அந்த முறையில் மஹா புருஷர்களால் (ஞானியர்களால் ) உருவாக்கி  உச்சரித்து  வணங்கிய பல்வேறு காயத்ரி மந்திரம் அநேகம் உண்டு. 



அவற்றில் எங்களுக்கு கிடைத்தவற்றை நம்முடைய மகரிஷி பதஞ்சலி வலைத்தளத்தின் மூலம் வெளியிடுவதில் மகிழ்சசியுறுவதோடு 
சத்குரு ஸ்ரீ பதஞ்சலி  மகரிஷி அனுமதித்து ஆசியும் அளிப்பார் என்பதோடு மெய்யன்பர்களில்  பலரும்  இதைப் படித்து பயனுற வேண்டும் எனவும் வேண்டிக் கொள்கிறோம். 

மந்திரங்களின் அணிவகுப்பு பின்வரும் பதிவுகளில் தொடரும் 

                                                   நன்றி   
 





 


              





No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment