Wednesday, June 24, 2009

ஏழு ஆதாரங்கள் என்ற சக்கரங்கள் (மூலாதாரம்)

ஏழு ஆதாரங்கள்  

ஆதாரம் என்பது நம் உடலில் கண்ணுக்கு தெரியாமல் (சூட்சமத்தில் ) இருக்கக்கூடிய சக்தி மையங்கள் ஆகும் . இவை ஏழு இருப்பதாக யோகிகள் கூறுகின்றனர். 


அவற்றை முறையே 

  • மூலாதாரம், 
  • ஸ்வாதிஸ்டானம் ,
  • மணிப்பூரகம் ,
  • அனாகதம்,
  • விசுத்தி , 
  • ஆக்ஞை ,

மற்றும் இறுதிநிலை ஆதாரமாக சஹஸ்ராரம்
( ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை )என விளக்கபடுவது. 


மூலாதாரம்
  மூலாதாரம் என்பது முதுகெலும்பு முடியும் இடத்தில் உள்ளது . 
இந்த சக்கரம் எருவாய்க்கு (குதம் )இரண்டு விரல் கட்டை மேலும் கருவாய்க்கு (குறி) இரண்டு விரல் கட்டைக்கு கீழேயும் உள்ளது. 


இதுவே முதல் ஆதாரமாகவும் எல்லா ஆதாரங்களுக்கு அடிப்படை முதல் ஆதாரமாக இருப்பதோடு குண்டலினி என்ற பிரம்ம சக்தி கேந்திரமாகவும், (பிராணன் , நாதம் , ஹம்சம் ) என்ற பிராண மந்திரமும் தோன்றும் இடம் என்றும் முடுகுதண்டின் (எலும்பின் ) கீழும் அமைந்த விடமாகும். 


பஞ்ச ( ஐம் பூதங்களில்) ஒன்றான மண் , (லம்) பிரித்வி , இதன் நிறம் மஞ்சள் . இதன் அதி தேவதை மஹா கணபதியாக இருப்பதால் பிரணவ சப்தமாகவும் ஓங்கார வடிவமாகவும் , ஓங்கார உற்பத்தி தலமாகவும் விளங்குகிறது.

இந்த மூலாதார சக்கரத்திற்கு வடிவம் வட்டத்தின் உள் அமைந்த முக்கோணமும் அதன் நடுவில் நான்கு இதழ்களும், அந்த இதழ்களில் ஒவ்வொன்றிலும் வல வரிசையாக
மனம் , 
புத்தி, 
சித்தம் , 
அஹங்காரம் ,
வ , ச ,ஷ, ஸ , 
என்ற நான்கு அக்ஷரங்களும் , நான்கு தத்துவங்களாக இடம் பெற்று உள்ளன. 


இங்கிருந்து சுழுமுனை என்ற " ஒலி" மற்றும் "ஒளி" வடிவமான நாடி புறப்பட்டு முதுகுத்தண்டின் வழியே முகுளம் என்ற உறுப்பு வழியே கபாலம் அடைகிறது 
என சித்தர்கள் கூறுகின்றனர்.

வரும் பதிவுகளில் எஞ்சியுள்ள ஆதாரங்களை ஒவ்வொன்றாக குருவின் அருளால் விளக்கப்படும்.

2 comments:

  1. Nandri.Nandri. Nandri. Mikka nandri.

    ReplyDelete
  2. நன்றாக உள்ளது தொடருங்கள்....

    அடியார்

    ReplyDelete

TRANSLATE

Click to go to top
Click to comment