Pages

Thursday, August 15, 2024

உதயாஸ்தமன பூஜை - 2024 (11.08.2024)

அன்பர்கள்  அனைவருக்கும் ஆத்ம வணக்கங்கள்

 

    நமது சத்சங்க அலுவலகத்தின் அதாவது பதஞ்ஜலி தியான பீடத்தின் மதுரை மாநகர் அலுவலகம் தற்போது அமைந்திருக்கும் முகவரியில் நாம் இடம்பெயர்ந்து முதல் ஆண்டு முடிவுற்றதன் நினைவாக மீண்டும் மெய்யன்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஒன்று கலந்து சந்திப்புக்கு வழக்கம் போல பூஜை விருந்துடன்  ஏற்பாடு செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்ட நேரத்தில் ஒரு ஆன்ம சாதனையுடன் இணையும் நிகழ்வாக ஏன்  உதய அஸ்தமன பூஜை செய்யக்கூடாது என்று ஒரு எண்ணம் அடியேன் மனதில் தோன்றியது

 


 

   இந்த உதயாஸ்தமன பூஜை என்பது கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற பூஜையாகும்.

 

     அதாவது குறிப்பாக குருவாயூரில் குடி கொண்டிருக்கும் குருவாயூரப்பனுக்கு பகதர்கள் தேவசம் போர்டு சார்பாக அடிக்கடி நடத்தப்படும் இந்த நிகழ்வு அதன் தாத்பரியம் என்னவென்றால் நீண்ட கால பிரார்த்தனைகளை நிறைவேற்றுதல் மற்றும் சர்வ காரிய சித்திகளுக்காக இறைவனையும் குருவையும் வேண்டி பூஜை செய்து மலர்களால் சூரிய உதயம் வரை முதல் சூரிய  அஸ்தமனம் வரை இடைவிடாது பூஜை செய்வதாக மற்றும் அர்ச்சிப்பதாகும்...

 


 

    

   மேலும் மஹா லக்ஷ்மியின் 18 அம்சங்களை பிரதிபலிப்பதாகவும் மற்றும் சிவசக்தியை ஒரே நேரத்தில் திருப்தி செய்யக் கூடியதாகவும் இந்த பூஜை உள்ளது என்பது சான்றோர்களின் வாக்கு.

 

     அடியேனுக்கு தோன்றிய இந்த யோசனையை சத்சங்கத்தினர் அனைவரும் ஏற்றுக் கொண்டதால் மொத்தம் ஒரு 11 பேர் இணைந்து இதை மேற்கொள்வதாக முடிவு செய்தோம்..

 


 

       அதாவது ஆகஸ்ட் 11 அன்று ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கத்தின்படி சூரிய உதயம் காலை 6.08க்கு துவங்கி மாலை சூரிய அஸ்தமனம் 6:37 வரை  மலர்களால் சத்குருவை அர்ச்சிப்பதற்காகவும் நிறைவாக புஷ்பாஞ்சலி அஷ்டோத்திர சத நாமாவளி ஜோதி தரிசனம் அன்பர்களுக்கு பிரசாத வினியோகம் என்று பூர்த்தி செய்வதாக திட்டமிட்டு அதன்படியே நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது... 

 

    நமது மதிப்பிற்குரிய உயர்திரு ஜீவநாடி நூல் ஆசான் கணபதி ஐயா அவர்களிடம் இருந்து அவர்களிடமிருந்து சத்குருவின் உபதேச மந்திரத்தை பெற்று அதை அனைவரும் சத்குருவிற்கு அர்ச்சனை செய்யும்போது மகா மந்திரமாக ஜபம் செய்யுமாறு ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக உபதேசம் செய்யப்பட்டது...

 

   

   அதன்படியே கமலக்கண்ணன் மற்றும் அடியேன்  மூலமாக நமது மெய்யன்பர்கள் அனைவருக்கும் இந்த மந்திரம் பகிரப்பட்டு அவர்கள் நியமத்துடன் இதை கடைபிடிக்க மனம் உவந்தனர்...

 

    அதன்படியே ஞாயிற்றுக்கிழமை காலை 4.30மணிக்கு சத்சங்கத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஆதிசேஷ பதஞ்சலி மகரிஷிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது...

 

    உதயாஸ்தமன பூஜையை திருக்கோவில அர்ச்சகர் பெரியவர் சுந்தரம் அய்யா துவக்கி வைக்க, 

  காலை வேலையில் முதல் துவக்கமாக 6முதல் 7மணி வரை சிவ சரவணன் அவர்கள் பூஜை செய்தார் 

 

 


அதைத் தொடர்ந்து

    சிவ ஞானம் அண்ணா, கமலக்கண்ணன், சண்முகையா , பாலமுருகன், விஷ்ணு, பால முருகன் , ராஜ கோபால், வெங்கட் ராமன்  என்று வரிசைப் படி மற்ற நபர்களும் ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு மணி நேரம் எடுத்துக்கொண்டு பக்தியுடன் சிரத்தையுடன் சத்குருவிற்கு அர்ச்சனை செய்தனர்...

 

    இடையிடையே சத்குருவிற்கு மகா நிவேதனங்கள் ஆக இனிப்புகள் மற்றும் பழங்கள் படைக்கப்பட்டு அதுவே பக்தர்களுக்கும் விநியோகிக்கப்பட்டது 🙏🏽

 

 

   அன்று நடைபெற்ற பூஜைக்கு பெங்களூர் சரவணன் அண்ணா, சசிகலா அக்கா, தங்கராணி உட்பட அனைவரும் உதவி செய்த தருணத்தில் பெருமளவு பூக்களை சத்சங்கத்தின் அன்பு இளவல்கள் திரு. பால முருகன் மற்றும் விஷ்ணு பிரசாத் அவர்கள் கொண்டு வந்து சேர்த்தனர்

 

   பிரசாத ஏற்பாடுகளை #அன்னை_சண்முகவள்ளி , சகோதரி லக்ஷ தீபா, பாண்டீஸ்வரி போன்றோர் பங்கேற்று சிறப்புற செய்தனர் .

 

      

    இறுதியாக மாலை 6.37 மணிக்கு பூஜை நிறைவு செய்யப்பட்ட பின்பு தொடர்ந்து புஷ்பாஞ்சலி அஷ்டோத்திர சதநாமாவளி  ஜோதி தரிசனம் என இந்த மூன்று வகையான தொடர் வழிபாடுகளும் திருக்கோவில்  சிவாச்சாரியார் உயர்திரு வெங்கடேச சாஸ்திரிகள் அவர்களால் நிகழ்த்தப்பட்டது .

 

நிறைவாக அன்பர்கள்  அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது..

 

    இவ்வாறாக முதலாம் ஆண்டு நிறைவு விழாவையும் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவையும் பதஞ்சலி சீடர்களோடு பொதுமக்களும் கலந்து கொண்டு மகிழ்வோடு தரிசனம் செய்து நிறைவு நிறைவு பெற்றனர் 🙏🏽

 

    அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் இது போன்ற கூட்டுப் பிரார்த்தனைகளுக்கு வருங்காலத்திலும் ஏற்பாடு செய்வோம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை

 

     இந்த பூஜையில் கலந்து கொண்ட இதை நினைத்துக் கொண்ட இதைப் படித்து மனதில் அந்த இன்பத்தை உணரக்கூடிய அனைத்து ஆன்மாக்களுக்கும் சத்குருவின் அருள்  நிச்சயமாக கிட்டும்  என்பதில் எந்த ஒரு கருத்தும் இல்லை மாற்றுக் கருத்தும் இல்லை மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம் 

 

                                                                                  வாழ்க வளமுடன்

                                                                                  நன்றி வணக்கம்

 

 

என்றும் அன்புடன்

#சிவ_உதயகுமார்- #மு_கமலக்கண்ணன்- வெங்கட்ராமன்

மற்றும் சபையினர் அனைவரும்




No comments:

Post a Comment