Pages

Thursday, April 4, 2024

மண்டல பூஜையும் குரு பூஜையும் -2024 ஒரு பார்வை

அன்பார்ந்த ஆன்மீக நல் உள்ளங்களுக்கு,

 

   மீண்டும் ஒரு இனிய தருணத்தில் இந்தபதிவின் மூலமாக தகவல்களை பரிமாறிக் கொள்வதில் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகின்றேன். ஏனென்றால் இந்த வலைத் தளம் என்பது  யோக ஆச்சாரியார் வாழ்ந்த காலத்தில் அவருடைய ஆசியுடன் நான் துவங்கி நடத்தியதாகும்.

 

     தொழிற் நுட்ப வளர்ச்சியின் காரணமாக வாட்ஸ்அப் , பேஸ்புக் (WHATS APP , FACEBOOK) போன்ற சமூக வலைத் தளங்களில் மொபைல் போன் மூலமாக தகவல்களை பகிர்ந்து கொள்வது என்பது அதிகரித்த காரணத்தினால் வலைத் தளத்தில் கட்டுரைகளை பதிவு செய்வது என்பது குறைந்து விட்டது...

 

  இருந்த போதிலும் இனி வரும் காலங்களில் தொடர்ச்சியாக கட்டுரைகளை பதிவிட முயற்சிக்கிறேன். அதற்கு சத்குரு நாதர் அனுக்கிரஹம் செய்ய வேண்டும். 

 

               நமது பதஞ்ஜலி தியான பீடத்தில் சத்குருவை பிரதிஷ்டை செய்ததை முன்னிட்டு அதன் தொடர்ச்சியாக மண்டல பூஜையினையும் மற்றும் சத்குரு ஸ்ரீ ஆதிசேஷ பதஞ்ஜலி மகரிஷியின் அவதார தினமான பங்குனி மூல நட்ச்சத்திர குருபூஜையினையும் ஒரே நாளில் வைத்துக் கொள்வதென்று முடிவு செய்ததோடு மட்டுமல்லாமல் எளிய முறையில் நடத்தவும் திட்டமிட்டிருந்தோம். .

 


      அதற்காக பிரசன்ன நாடிமுரையில் சத்குருவிடம் அனுமதியும் பெற்றோம். ஜீவ நாடியின் வழியான உத்தரவுகளை பெறுவது என்பது குருநாதர் காலம் முதல் இன்று வரை நாம் பின்பற்றக் கூடிய வழிமுறையாகும்.

   அதன்படி காலை 10 மணிக்கு நமது பதஞ்ஜலி தியான பீடத்தில் மெய்யன்பர்களும் பொதுமக்களும் கலந்து கொள்ள மண்டல பூஜையானது சிவாச்சாரியார்.திரு. வெங்கடேச சாஸ்திரிகள் மூலம் நிகழ்த்தப் பெற்றது.

 


    மரியாதைக்குரிய சுசிலா அம்மா அவர்கள் கலந்து கொண்டு மண்டல பூஜையை சிறப்பித்தார்கள்.

    குருபூஜையின் தொடர்ச்சியாக சுமங்கலி போஜனம் நடைபெற்றது. சுமங்கலிப் பெண்கள் மற்றும் வயதானவர்கள் குழந்தைகள் என அனைத்து தரப்பினருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது. 

     இதில் நமது சத்சங்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.


மாலையில் பங்குனி மூல நட்சத்திர குரு பூஜை :



   ஒவ்வொரு வருடமும் நமது மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் அமைந்துள்ள ஈஸ்வரன் திருக்கோவில் என்ற காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் சத்குருவாக எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஆதிசேஷ பதஞ்ஜலி மஹரிஷிக்கு சகல அபிஷேக ஆராதனைகளும் ஜோதி தரிசனமும் நடைபெற்றது . 

     இதில் சிறப்பு வருகையாக ஜீவ நாடி நூல் ஆசான் தேவகோட்டை S.கணபதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். முடிவில் அனைவருக்கும் குருவின் பிரசாதம் வழங்கப் பட்டது.

         பிரசாத ஏற்பாடுகளை சிறப்பான முறையில் குருவிற்கு அர்ப்பணித்த குமார் சுவாமி அவர்களுக்கு மிகவும் நன்றி 

                     இந்த முறை ஏற்பாடுகள் எளிமையாக இருந்தாலும் பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொண்டு குருவருளை பெற்றது மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது. மண்டல பூஜை மற்றும் குருபூஜை சிறப்பாக நடைபெற பணியாற்றிய மற்றும் பங்காற்றிய அனைவருக்கும் மனமார்ந்ந்த நன்றிகள்.🙏🙏🙏

 

 

என்றும் அன்புடன்

சிவ. உதயகுமார் &மு.கமலக்கண்ணன் & திரு. R. வெங்கட்ராமன் 

மற்றும் சத்சங்க நிர்வாகிகள் மற்றும் மெய்யன்பர்கள் அனைவரும்



No comments:

Post a Comment