Pages

Saturday, January 11, 2025

விவேகானந்தரும் நமது சத்சங்கமும்

    அன்பர்கள் அனைவருக்கும் ஆன்ம வணக்கங்கள் 

 


    என்னுடைய ஆதர்ஷ குருநாதர்  சுவாமி விவேகானந்தர் என்று நமது குருநாதர் #யோக #ஆச்சாரியார் குருஜி #டி.எஸ் கிருஷ்ணன் அவர்கள் அடிக்கடி கூறுவார்...

 

    ஆன்ம விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அயராது பணியாற்றும் இயக்கமான நமது சத்சங்கத்தில் ....

    பதஞ்சலி யோக சூத்திர விளக்கங்கள் சுவாமி விவேகானந்தர் மற்றும் நமது குருநாதரின் சொல்லாடல்கள் ஒரே மாதிரியாக இருப்பதைக் கண்டு பலமுறை அவரிடம் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியதுண்டு...

    அந்த தருணத்தில் #சத்குரு எனக்கு அளிப்பதை நான் அப்படியே கூறுகிறேன் . சுவாமிஜியின் கருத்துகளும் அடியேன் கூறுவதும் ஒரே மாதிரியாக இருந்தால் மிகவும் மகிழ்ச்சி...ஏனென்றால் எப்போதும் உண்மை என்பது ஒன்றாகத்தான் இருக்கும் என்று கூறுவார்...

                                            


    #பதஞ்சலி யோகத்தை #ராஜயோகம் என்ற பெயரில் ஏகாதிபத்திய அரசுகளான அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் பரப்பியதன் மூலம் உலகத்தின் கவனத்தை ராஜயோகத்தின் மீது திருப்பியவர் சுவாமி #விவேகானந்தர் என்ற முறையில்...

அவர் நம்முடைய சத்சங்கத்தின் முன்னோடியாக இருக்கிறார்...

நம்முடைய செயல்பாடுகள் அனைத்திலும் அவருடைய தாக்கம் தெரியும்...

சுவாமி விவேகானந்தர் எழுதிய கடிதங்கள் என்ற ஒரு நூல் இருக்கிறது...

 

தனது குரு தேவர் #ராமகிருஷ்ண பரமஹம்சரின் மறைவுக்குப் பிறகுந அமெரிக்க விஜயம் செய்து அங்கிருந்த காலகட்டங்களில் தனது சகாக்களை ஒருங்கிணைக்க அவர்களை உத்வேகப்படுத்த உற்சாகப்படுத்த பல கடிதங்களை அவர்களுக்கு எழுதி அனுப்புவார்...

அவையெல்லாம் இந்த ராமகிருஷ்ண மடத்தை அவர் கட்டமைப்பதற்கு என்ன பாடுபட்டு இருக்கிறார் என்பதை விலாவாரியாக எடுத்துக் கூறும் வகையில் இருக்கும்...

ஒரு ஆன்மீக இயக்கம் இருக்கிறது என்ற அது மக்களின் ஆன்ம விழிப்புணர்வுக்கானதாக இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டில் சத்சங்கம் எப்போது  உடன்பாடாக இருக்கிறது...

அந்த வகையில் நமது செயல்பாடுகள் இப்போது மட்டும் அல்ல எப்போதுமே ஆன்ம விழிப்புணர்வை நோக்கிய சென்று கொண்டிருக்கிறது என்ற வகையில் சுவாமி விவேகானந்தர் மற்றும் யோக ஆச்சாரியார் அவர்களை இந்நாளில் நினைவு கூறுவதில் உள்ளபடியே பெருமிதம் அடைகிறோம்....

 

 சிவ.உதயகுமார் 

பதஞ்ஜலி தியான பீடம்

 


No comments:

Post a Comment