Pages

Tuesday, September 12, 2023

பதஞ்ஜலி திருப்புகழ் (1) - சங்கடம் அகற்றிடுவார் சத்குரு பதஞ்ஜலி

  ங்கடம் அகற்றிடுவார் சத்குரு பதஞ்ஜலி

 

 

எனதினிய உடன் பிறப்பே 🙏

வல்லமை தலைமை வகுத்து

வைத்த வழிகளின் பின்னால்...

 

 


வல்வினை தொட்டு வந்த

வேதனை எல்லாம் வலுவிழந்து    

வாழ்விழந்து மாய்ந்து போகும்...👍

 

பார்போற்றும் பாசத் தலைமை

நமதாகிப்போன காலங்களில்

நமனுக்கும் அச்சமேது என்போம் நாம்..🙋

 

அன்பால் புகட்டி அமுத நாமம்

ஊட்டிய தந்தை எனும் குரு செயலால்

தரணியிலே தனித்துவம் கொண்டோம்...🐍

 

உள்ளமதை உத்தமன் நினைவில் வைத்திருப்பாய்

என் உடன் பிறப்பே

உன்னதங்கள் தொடர காத்திருப்போம்..

 

அந்த ஐந்தெழுத்து நாயகன் நினைவே

அருமருந்தாய் நமக்காகி ஆனந்தம் தரும்

அப்பழுக்கற்ற அன்பினை தரும்...

 

முன் ஊழ் செய்த புண்ணியமன்றோ

இ்ந்நாள் பதஞ்சலி எனும் பெருமிதத்தை

பார் அறிய நமக்கு தந்தது பார்....

 

நான்முகன் பெளத்திரன் நாமம் உரைக்க

காலம் வரும் கனிவான வேளை வரும்

விடியலென பரஞானம் வந்துதிக்கும்..

 

முடியாது தொடர்கின்ற அற்புதம்

ஐந்தெழுத்தில் மலர்ந்த கவித்துவம்

வருங்காலம் அதிசயங்கள் நிகழ்த்திடும்...

 

பணிவே உருவாய் கொண்ட ஐந்தெழுத்து

அந்தப் பதஞ்ஜலி எனும் நாமத்திலே

மனம் செலுத்து பாரங்கள் குறைந்திட....🙏🙏🙏🙏

 

 

                                                                                       (ஆக்கம் : #மாதங்கியின்_மைந்தன் )

                                                                                                 #சிவ_உதயகுமார்

 

No comments:

Post a Comment