Pages

Saturday, December 17, 2022

யோக தரிசனம்  என்ற யோக தர்ஸன் ( பகுதி 2)

     அட்டாங்க யோகம் என்பது எட்டு அங்கங்களை உடையது. அவை பின்வருமாறு குறிப்பிடப் பட்டுள்ளன .. 



 
இயமம்  
 
நியமம் 
 
ஆசனம் 
 
பிராணாயாமம் 
 
பிரத்யாகாரம் 
 
தாரணை
 
 தியானம் 
 
சமாதி



      195 சூத்திரங்களை உடைய இந்த நூல் நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது முதலில் சமாதி பாதம் 51 சூத்திரங்களையும் இரண்டாவதாக சாதனா பாதம் 55 சூத்திரங்களையும் மூன்றாவதாக விபூதி பாதம் 55 சூத்திரங்களையும் நான்காவதாக கைவல்ய பாதம் 34 சூத்திரங்களையும் கொண்டதாகும்.
 
   இவ்வாறாக மணி மணியான சூத்திரங்கள் வெகு நேர்த்தியாக ஒவ்வொரு பாதத்திலும் அதனதன் இடத்தில் அழகாய் பதித்திருக்கிறார்


     சூத்திரங்கள் ஒவ்வொன்றும் யோக விளக்கம் அளிக்கும் குறள்கள் ஆகும் மிகப் பெரிய தத்துவங்களை லாவகமாக உட்புகுத்தி இதனை குறள் வடிவில் ரத்தினச் சுருக்கமாய் தந்த பொக்கிஷங்கள் ஆகும்.
 
    இந்த சூத்திரங்கள் யாவும் உன்னதமான உயிரோட்டம் கொண்டதாக மிக துல்லியமாக நறுக்குத் தெறித்தாற்போல போல் அமைந்துள்ளன. 
 
  விஞ்ஞானபூர்வமான விளக்க விளக்க விரிந்து கொண்டே செல்கின்ற தன்மையினை உடைய விளக்கங்களின் விளக்கமாக அமைந்துள்ள நூலாகும் இது ஒரு மந்திர நூலும் ஆகும்.


   விளக்கப்படும் தத்துவங்களின் தொடர்பு அறுத்து விடாதபடி ஒன்றோடு மற்றொன்று தொட்டுக் கொண்டே தொடர்ந்து  செல்வது ஆகும். அதாவது ஒரு விஷயத்தின் சூக்கும பொருள் அடுத்து வரும் சூத்திரத்தோடு தொடர்புடையதாகவே சிக்கலற்ற நூலிழை போல் அறுந்து விடாதபடி தொடர்பு படுத்திய வண்ணமே யோகக் கருத்துகளின் உண்மைகள் போர்க்கப்பட்டதாய் இருக்கின்றது.


சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷியின்  காலம் பற்றி:


    ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி நான்கு யுகங்களுக்கு மேல் வாழ்ந்து இருந்தவர் என்றும் இவரின் பிறந்த நட்சத்திரம் மூலம் என்றும் பங்குனி மாதம் அவதரித்தவர் என்றும் புராணங்கள் கூறுவதோடு இவர் வியாச பகவான் வாழ்ந்த காலத்தவர் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுவதோடு இவரது தோற்றம் 5000 ஆண்டுகளுக்கு முன் என சில சாஸ்திர நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
    ஸ்ரீ ராமருக்கு தம்பி ஸ்ரீ லட்சுமணராகவும் ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு அண்ணனாக ஸ்ரீ பலராமராகவும் அவதரித்தவர் என்று கூறுவதோடு ஸ்ரீ மகாவிஷ்ணுவின் மலர் படுக்கையாய் என்றும் இருக்கின்ற  ஆதிசேஷன் இவரே என்றும் புராணங்கள் கூறுகின்றது..
 
    சத்குரு ஸ்ரீ பதஞ்ஜலி மஹரிஷி ஒரு சத்குருவாக, அவதார புருஷராக, சித்தராக, மாமுனிவராக,இன்னும் பல ரூபங்களில் இந்த உலகில் வணங்கப் பட்டாலும் ஸ்வார்த்தம் சத் சங்கம் என்ற ஞான சபையை பொருத்தவரை அந்த சபையோருக்கு அவர் தான் இறைவன் . ஏனென்றால் இந்த சபையை உருவாக்கியவரே அவர்தான். 
 
   இன்று வரை பல ரூபங்களில் அவர் முக்காலமும் வழி நடத்திக் கொண்டிருக்கிறார்... இனியும் வழி நடத்துவார்..

(தொடரும் )
 
 

No comments:

Post a Comment