Pages

Thursday, April 21, 2011

சஞ்சீவி ஆசனம்.

அமர்ந்த ஏக பாதாசனம் 




முனிவர்கள் அருளிய ஆயிரக்கணக்கான ஆசன வகைகள் நடைமுறையில் இருந்தும் உடலை வலுப்படுத்தும் ஆசனங்கள் மட்டுமே அதிகமாக கற்பிக்கப் படுகின்றன. ஆனால் ஸ்ரீ பதஞ்சலி யோக கேந்திரம் வெளிப்படுத்தும் யோகாசனங்கள், மன ஆற்றல் (யோகம் ) பெருக்குவதிலும் , மருந்துகளால் குணப் படுத்த முடியாத நோய்களை நிரந்தரமாக நீக்கும் சஞ்சீவி ஆசனங்கள்  ஆகும்.


செயல் முறை 
                                 விரிப்பில் சம்மணமிட்டு அமர்ந்து , விழிகளை திறந்து மூச்சை இயல்பாக விடவும். பிறகு சமமான நிலையில் இருந்து கால்களை பிரித்து, வலது காலை அமர்ந்து நிலையில் உள்பக்கம் மடித்து , இடது கால் பாதத்தை  கழுத்தின் பின்னால் பிடரியில் படும்படி வைக்கவும்.  

 வலது காலை அமர்ந்த உள்பக்கம் மடித்து, இடது கால் பாதத்தை கழுத்தின் பின்னால் பிடரியில் படும்படி வைக்கவும். இரு கைகளை நெஞ்சருகே வணங்கிய நிலையில் வைக்கவும்

இந்த ஆசனம் தண்டெலும்பில் கீழிருந்து மேல் நோக்கியிருக்கும்படி செய்யவும்.  அடுத்து இடக்கால் நிலையினை வலது காலுக்கும் , வலது கால் நிலையினை இடது காலுக்கும் மாற்றி செய்யலாம்


பலன் -  
இடுப்பு , முழங்கால் பந்து கிண்ணங்கள், அவைகளை இணைக்கும் தசை நார்கள், ரத்தக் குழாய்கள்  சீரடைகிறது. முதுகெலும்பு வளையங்களின் இடையே உள்ள ஜவ்வுப் பகுதி சீரடைகிறது.  சர்க்கரை நோயாளிகளின் பாதம், கால் விரல்களின் பாதிப்பு குறைகிறது. 


மாலை நேரங்களில் 15  நிம்டம் செய்வது ஏற்றது. எவ்வித அறுவை சிகிச்சை செய்தவர்களும் 6  மாத காலத்திற்கு பின் இந்த பயிற்சியினை செய்யலாம். 
(தொடரும் )


                                    







1 comment: