16.07.2014
காலை 9 to 10 மணியளவில் மதுரை, பழங்காநத்தம் , அருள்மிகு காசி விசாலட்சி சமேத
அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வருடாபிஷேக விழாவானது ஸ்வார்த்தம் சத்சங்க நிறுவனர் சுவாமி. குருஜி டி.எஸ். கிருஷ்ணன் அவர்கள் தலைமையில்
சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பு வேள்விகள் மற்றும் பூஜைகள் நிகழ்த்தப் பட்டு இறுதியில் பக்த கோடிகள் அனைவருக்கும் திருவருட் பிராசதம் வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராக தெற்கு மண்டலத் தலைவர் திரு.பெ. சாலைமுத்து
அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
கலச பூஜையின் போது எடுக்கப்பட்ட படம் |
தெற்கு மண்டலத் தலைவர் சாலைமுத்து அவர்களுடன் சுவாமி டி.எஸ். கிருஷ்ணன் தம்பதியர் |
திரு. ராமபிரசாத் மற்றும் சுகுமார் தம்பதியினர் உடன் சுவாமி டி.எஸ்.கிருஷ்ணன் |
சத்சங்கத்தின் ஏற்பாட்டின் பேரில்
சிறப்பு அழைப்பாளராக திரு . ராம பிரசாத் (பொது மேலாளர்,
கும்மிடிப்பூண்டி மின் நிலையம் ) மற்றும் சட்ட ஆலோசகர் திரு.
சுகுமார் தம்பதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
விழா ஏற்பாட்டினை அன்னை பாரிஜாதம் அவர்கள் தலைமையிலான ஸ்வார்த்தம் சத்சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்
நன்றி
சிவ.உதயகுமார்
No comments:
Post a Comment