Sunday, December 9, 2012

சிவாலயப்பணி -அன்றும்,இன்றும்,என்றென்றும்.பகுதி - 6


 

பழுதடைந்த சிவாலயத்தை புதுப்பிக்க வேண்டும். அனைவரும் இங்கே வந்து பிரார்த்தனை செய்து இறைவனருள் பெற வேண்டும். அந்த வரலாற்று நாயகர்களின் விருப்பம் தடங்கலின்றி நடைபெற வேண்டும் என்ற எண்ணம் தான் கிருஷ்ணனுக்கு இருந்ததே தவிர அதை வைத்து பொருளீட்ட வேண்டும் மற்றும் பணிகளை வெளிக்காட்டி புகழ் பெற வேண்டும் என்ற சிந்தனை துளியும் இல்லை.madurai, sivan temple, swartham sathsangam, palanganatham
1980 க்கு முந்தைய நிலையில் ஆலயத்தின் தோற்றம் -கோபுரம்


அந்த ஊர்ப்பெரியவர்களிடமும் , சான்றோர்கள் என்று தன்னை வரித்துக் கொண்டவர்களிடமும் அந்த தயாபரச் சிந்தனை சற்றும் இல்லை. அதை இந்த இடத்தில் நாம் குறை கூறவில்லை.  இதுவெல்லாம் மனிதன் தனக்கு தானே ஏற்படுத்திக் கொண்ட இயல்புகள் தானே.

சற்றே பூசப்பட்ட நிலையில் உட்புறத் தோற்றம் - 1980எந்த காலத்தும் மூட நம்பிக்கைகளின் ஊற்றுக் கண்ணாக மதத்தையும், ஆன்மீகத்தையும் மாற்றிக் காட்டியது மனிதர்களின் செயலே தவிர. அது ஆன்மீகத்தின் செயல் அல்ல. சடங்குகளும் ,சம்பிரதாயங்களும் மனித வாழ்வில் மனிதனை இயல்பாக இறைவனின் பால் திருப்புவதற்காக அமைந்ததே தவிர. அவனை பயம் கொள்ளச் செய்வது அவற்றின் நோக்கம் அல்ல. சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களின் உள்ளார்ந்த நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் அவற்றை கண்மூடித் தனமாக பின்பற்றும் மனிதர்கள் அதைத் தாண்டி செல்வதை விரும்பாததும் மூட நம்பிக்கைகளின் ஊற்றுக் கண்ணாக மதத்தையும், ஆன்மீகத்தையும் பிறர் சுட்டிக் காட்டும் முக்கிய காரணிகளில் ஒன்றாக அமைந்தது எனலாம். swartham sathsangam, yoga
சற்றே பூசப்பட்ட நிலையில் உட்புறத் தோற்றம்
                                                             


இதை இங்கே நாம் குறிப்பிடக் காரணம் . இந்த சிவாலயப் பணிக்கு முட்டுக் கட்டையாக அமைந்தது மனிதர்களின் மூட நம்பிக்கை.  சிவாலயப் பணிகளை மேற்கொண்டால் குடும்பத்தில் உயிரிழப்பு ஏற்படும் என்ற மனிதர்களின் கண்மூடித்தனமான நம்பிக்கையே இதற்கு பெரும் தடை.
ஒரு இருள் சூழ்ந்த இடத்தில் ஒரு ஒளிவிளக்கை கொண்டு சென்றால் எவ்வாறு உடனே இருள் விலகுமே அது போல ஆன்மீக ஞானம் ஒரு மனிதனின் வாழ்வில் வந்தவுடன் சூரியனைக் கண்ட பனி  போல எல்லா அறியாமைகளும் விலகி விடும். அதை செய்விக்க அந்த எல்லாம் வல்ல சிவத்தால் ஆகுமேயன்றி வேறு ஒருவராலும் இயலாது.
          


ஒரு இல்லறத்தானாய் இந்த யுக வாழ்வில் தனக்கு விதித்திருந்தாலும் அதையும் இறைவனின் பரிசாக நினைத்து கொண்டு, ஒரு புறம் தன்னுடைய ஜீவனத்திற்காக பணிபுரிந்தாலும் , மறுபுறம் அனுதினமும்  அந்த பழுதடைந்த சிவாலயத்தை சிறிது சிறிதாக செப்பனிடும் பணியையும்  கிருஷ்ணன் மேற்கொண்டிருந்தார்.


அன்பு நண்பரின் வருகை.


மலர்கள் மலர்ந்திருக்கும் இடத்திற்கு வண்டுகள் தானாக வந்து சேரும் . மகரந்த துகள் நறுமணத்தின் சிறப்பு அப்படி. அதுபோல கிருஷ்ணனின் ஆலயப்  பணிகள் ஒரு புறம் சிறிது சிறிதாக நடந்து கொண்டிருந்த வேலையில் ஜலபதி செட்டியார் என்ற பெரியவர் அந்த ஆலயத்தை யார் மூலமாகவோ கேள்விப்பட்டு அங்கே வந்தார். 


சிவ சிந்தையில் சிறந்த அந்தப் பெரியவர் நமது கிருஷ்ணனுக்கு நல்லதோர் மனத் துணையாய் வந்தமைந்தார்.  சிறிது காலமே அவர் நட்பில் இருந்தாலும் இன்று நினைவு கூறும் வகையில் அவரின் நட்பு அமைந்திருந்தது .  அந்த ஆலயப் பணிக்கு பல்வேறு வகையிலும் அவரின் வழிகாட்டல் உதவியாக வந்தமைந்தது. 


ஆலயம் கட்டி முடிக்கப் பட்டு இன்று வரையில் மூன்று குட முழுக்கு விழாக்களை கண்ட போதும் சிவாலயத்திற்கு மறைமுகமாக தொல்லை தருபவர்களின் செயல் இன்னும் ஓயவேயில்லை.


எப்போதெல்லாம் ஆலயத்திற்கும், ஆலயப் பணிக்கும் இடையூறு நேர்ந்ததோ அப்போதெல்லாம் அங்கே குடிகொண்டிருக்கும் காசி விஸ்வநாதரை சரணடைந்து விட்டிருந்தது கிருஷ்ணின் மனம்.பதஞ்சலி மகரிஷியின் மீது தனிப்பட்ட பக்தி இருந்தாலும் இந்த ஆலயம் அவர் தவம் செய்த ஆலயம் என்பதெல்லாம் நம் கிருஷ்ணனுக்கு தெரிய வரவில்லை. இந்த ஆலயத்தை சிறப்பாக கட்டி முடிக்க வேண்டும் என்பதை தவிர அவருக்கு இந்த ஆலயத்தின் சிறப்புகள் முழுவதுமாக நமக்கு ரிஷிகளால் விளக்கப்படும் என்பதை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை . அன்னை பாரிஜாதம்

ஒரு புறம் குடும்பச் சுமை , மறுபுறம் ஆலயப் பணிகள் என்று இருபுறமும் பணிகள் நிறைந்திருந்த போதும் அந்தப் பணிகளுக்கு எல்லாம் பேருதவியாக கிருஷ்ணன் துணைவியார் அன்னை பாரிஜாதம் இருந்திருந்தார். உதவி என்று இங்கு குறிப்பிடப் படும் வார்த்தை கூட அவரின் அரும்பணியை சிறுமைப் படுத்தும் ஒன்றாக அமைந்து விடும்.  இன்று வயதான மூதாட்டியாக தோற்றம் தரும் அவரை அன்னை என்று அன்புடன் அழைப்பது தான் முறையாக இருக்கும். ஏனென்றால் தன்னை நாடி வரும் அனைவரையும் தன் பிள்ளைகளாக வரித்துக் கொண்டு அவர்களிடம் அன்பு காட்டும் அவரை அன்னை என்றே அழைக்க முடியும்.


எந்த இனம் சாதி வேறுபாட்டுக்கு மாபெரும் உறுதுணையாக இருக்கிறது என்று இக்கால மனிதர்களால் கருதப்பட்ட , பழிக்கப்பட்ட அந்த இனத்தில் தான் அன்னையின் பிறப்பு அமைந்தாலும் அவரை அன்னையாக ஏற்றுக் கொண்டவர்கள் அந்த இனத்தை  சாராதவர்களே.   உண்மை ஞானம் எந்த வேறுபாட்டையும் காண்பதில்லை 


ஸ்வார்த்தம் சத் சங்கம் ஆற்றி வரும் பணிகளில்  எல்லாம் பெருமை மிகுந்ததாகவும், உயர்ந்ததாகவும் கருதப்படும் ஆலயப் பணிக்கு தோள்கொடுத்து நின்றவரும், பக்கத்துணை, மனத்துணை , வழித்துணை வாழ்க்கைத் துணை என்று அனைத்து வகைத்துணையாகவும் நம் கிருஷ்ணனுக்கு வந்தமைந்தவர் நம் அன்னை பாரிஜாதம் அவர்கள். இந்த நிமிடம் வரும் வரை தம் கணவன், குழந்தைகள் இவர்களை எல்லாம் பரமாரிப்பதை விட அந்த ஆலயப் பணியையே தம் மூச்சாக கொண்டவர் பாரிஜாதம் அம்மையார் அவர்கள். 


அனைவரும் பதஞ்சலி மகரிஷியை குருவாக, தந்தையாக,இறைவனாக ,ஏற்றுக் கொண்ட வழியில் , அவரை மானசீக புத்திரனாக வரித்துக் கொண்டு அந்தக் குழந்தை பதஞ்சலிக்கு இன்று வரை தொண்டாற்றிக் கொண்டிருப்பவர் பாரிஜாதம் அம்மையார் அவர்கள். 


இல்லறமே நல்லறம் . 

அந்த நல்லறத்தில் முக்கிய பங்காளரான மனைவி என்ற உறவும் ஆன்மீகச் சிந்தனை உடையவராக அமைந்து விட்டால் , ஏன் தனது துணையின் ஆன்மீகப் பணிக்கு  தோள்கொடுத்து நின்று விட்டால்  அந்த சாதகனுக்கு அந்த கடும் வாழ்க்கையும் பாலைவனத்தில் நிரூற்று போல அமைந்து விடும்.  


தொடரும்
சிவ.உதயக்குமார்

No comments:

Post a Comment

TRANSLATE

Welcome To Pathanjali Website