Tuesday, August 21, 2012

சிவாலயப்பணி - அன்றும்,இன்றும், என்றென்றும் .........


ஆன்மீக உறவுகளுக்கு எமது பணிவார்ந்த வணக்கம்
  சிவாலயப்பணி அன்றும்,இன்றும்,என்றென்றும் என்ற நெடுந்தொடரை வலைத்தளத்தில் அர்ப்பணிப்பதற்கு முன்பாக எமது ஆதி குருவான பதஞ்சலி மஹரிஷியினையும் எமது குருவின் குருவான சித்த வைத்திய சிரோண்மணி அருட்திரு. சுப்பரமணியன் அய்யா அவர்களையும் சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்.


   ஒவ்வொரு இயக்கமும் ஒரு நீண்ட நெடிய வரலாற்றினை கொண்டுள்ளது.

அந்த வரலாறே அந்த இயக்கத்தின் தொன்மைக்கு சான்றாக விளங்குகிறது.  இயக்கங்களின் தோற்றுவாயாக பலரது கூட்டுமுயற்சியாலும், சிலரின் இடையறாத உழைப்பினாலும் அவை மலர்கிறது, காலங்களை கடந்தும் அவை நீடித்து நிலைப்பதற்கு அதில் பங்கேற்றுப் பணியாற்றுபவர்களின்  முயற்சிகளும் காரணமாக அமைகிறது.  இந்த உலகில் எத்தனையோ ஆன்மீக இயக்கங்கள் தோன்றின. தோன்றுகின்றன, இனியும் தோன்றும். ஏற்கனவே உள்ள ஆன்மீக இயக்கங்கள் மறுமலர்ச்சி பெறக்கூடும். இந்த சுழற்சி என்பது மனித குலம் இம்மண்ணில் இருக்கும் வரை நீடித்திருக்கும்.


                                             சத் காரியங்களை  பொறுத்தவரை தனி மனித முயற்சியாலோ, அல்லது பலரது கூட்டு முயற்சியாலே ஒன்று நிகழ இருந்தாலும் அவற்றிற்கு இறைவன் திருவருள் என்பது இல்லாமல் அவை நிகழாது. ஒவ்வொரு மனித மனமும் நிறைவேற்ற துடிப்பவைகளை அவரவர் புண்ணிய, பாவ வினைகளுக்கேற்ப இறைவன் ஏதாவது ஒரு பிறவியில் அருளத்தான் செய்கிறார்.


  அந்த வகையிலே இந்த புண்ணியம் நிறைந்த, அருளாளர்களும், மகான்களும், மகரிஷிகளும்  தோன்றி மறைந்து நிற்கும் இப்பாரதத்திலே எத்தனையே ஆன்மீக இயக்கங்கள் , தனிமனித ஆன்மிக முயற்சிகள் மலர்ந்ததுண்டு.

 இறைவன் திருவருளினால், குருவருளினால், அவை தங்கள்  எந்த பணியை மேற்கொள்ள வந்தார்களோ அந்த பணியினை மேற்கொண்டதும் உண்டு.


  இறைவன் திருவருளினால் மலர்ந்த ஒவ்வொரு ஆன்மீக இயக்கத்திற்கும் இத்தகைய வரலாறு உண்டு. அந்த ஆன்மீக இயக்கத்தினை தோற்றுவித்த அருளாளர்களின் நெறிகளை அவர்களின் மறைவிற்கு பின்னும் தவறாமல் கடைபிடித்து நிற்கும் இயக்கங்கள்  சில இன்னும் உள்ளது.


   ஸ்வார்த்தம் சத் சங்கமும்  அவ்வாறே கால் நூற்றாண்டை கடந்த வரலாற்றை கொண்டது.  முன்பே சொன்னது போல மனிதர்கள் எதை தங்களுடைய வாழ்க்கையில் நிறைவேற்ற துடித்தார்களோ, நடத்திகாட்டி இன்புற நினைத்தார்களோ ஒரு பிறவியில் அவர்களுடைய பணியாக அவர்கள் அறியாமலே அமைய வாய்ப்புண்டு.


  அந்த வகையிலே ஸ்வார்த்தம் சத் சங்கத்தின் சேவை அருள்மிகு காசி விசாலாட்சி சமேத  காசி விஸ்வநாதர் ஆலய புனரமைப்பில் இருந்து தான் துவங்குகிறது. அந்தச் சேவை என்று சொல்வதை விட அதை விட கடமை என்றுதான் கூற வேண்டும். 


   இதில் என்ன அற்புதம் எத்தனையோ ஆன்மீக இயக்கங்கள் எத்தனையோ ஆலயங்களை புனரமைத்திருக்கின்றன.     எவ்வளவே பணி செய்திருக்கின்றனர், என்ற வினாக்கள் இத்தொடரினை படிப்போர் மனதில் எழக்கூடும்.  இங்கேதான் ஒரு வேறுபாடு இந்த ஆலயப்பணியானது என்று தொடங்கியதோ அன்று முதல் இன்று வரையில் நடைபெறுவது பலரது கூட்டு முயற்சியாலே அல்ல. ஒரு தனி மனித முயற்சியாலேயாகும். அந்த தனிமனிதரும் பெரும்செல்வந்தரும் அல்ல.இன்று வரை பொருட்செல்வத்தால் அவர் வறியவர். ஆனால் அருட்செல்வத்தால் அவர் பெரும் செல்வந்தர்.                                              இந்த ஆலயப்பணிக்கு அவருக்கு முன்னோடியாக, மேற்கோளாய் இருந்தவர் மாமன்னர் கூன்பான்டியன் வழிவந்த விக்கிரம பாண்டியன். சைவ நெறி தழைத்தோங்கிய தென்னகத்திலே , சங்கம்  வைத்து தமிழ் வளர்த்த பாண்டிய நாடு எனப்படும் மதுரையிலே , இறைவனே அரசனாய் வந்து ஆண்டதாக கூறப்படும் புண்ணிய பூமியிலே, சத்தியத்தை தனது உயிர் மு்ச்சாகக்கொண்டு. சிவ நெறியினை தனது இரு கண்களாக்கொண்டு அரசாண்ட பாண்டிய மன்னர்களிலே சைவ நெறியினை பத்து திக்குகளிலும் தழைக்கச்செய்தவர்களிலே மாமன்னர் சடைய வர்ம விக்கிரம பாண்டியன் குறிப்பிடத்தக்கவராவர்.வரலாறு தொடரும் ............

   இப்படிக்கு 
சிவ. உதயகுமார் 

No comments:

Post a Comment

TRANSLATE

Welcome To Pathanjali Website